Saturday, September 08, 2018

தொண்டியில் நொண்டிய ததஜ பேமானிகள் மந்தைகள் அல்ல என நிரூபித்த தொண்டி மக்கள்

7-9-2018 வெள்ளிக்கிழமையன்று ததஜ தணிக்கைக்குழு உறுப்பினர் தொண்டி மர்கஸில் ஜும்மா உரை நிகழ்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

(கோவை ரஹ்மதுல்லா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி ஜும்மா முடிந்து ஓட்டம் பிடித்து விட்டார்)

மாநில நிர்வாகத்தின் மர்க்க விரோத செயல்பாடு, ஊழல் காரணமாகவும், பீஜேயை சதி செய்து வெளியேற்றியது சம்மந்தமாகவும் கடும் கோபத்தில் இருந்த மக்கள் கோவை ரஹ்ம்துல்லாஹ்விடம் ஜும்மா முடிந்து கேள்வி கேட்க உள்ளதாக அறிவித்தனர்.

ஜும்மா முடிந்து கேள்வி கேட்டால் அதை எதிர்கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் தனியார் மண்டபத்தில் உறுப்பினர்களுக்கு விளக்கம் என்ற நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து ஜும்மாவுக்குப் பின் கேள்வி கேட்க வேண்டாம்; அந்த நிகழ்ச்சியில் கேளுங்கள் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

கோவை ரஹ்மதுல்லா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி ஜும்மா முடிந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

http://fazlulilahi.blogspot.com/2018/09/blog-post_8.html

 செயற்குழு போல் மந்தைகளாக இருப்பார்கள்; ஆடியோ போட்டு மண்டையைக் கழுவலாம் என்று புரஜக்டர் சகிதமாக ஈ.பாரூக், அப்துர்ரஹ்மான், பனைகுளம் அப்துல் ஹமீத் ஆகியோர் விளக்கம் கொடுக்க வந்தனர்.

மாவட்டத்தின் மற்ற கிளைகளில் இருந்தும் ஆட்களை அழைத்து இருந்தனர்.

மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சியில் கேள்விகளை எதிர் கொள்ளாமல் முதலில் இரண்டு மணி நேரம் விளக்கம் தருவோம்; பின்ன கேள்வி கேட்கலாம் என்று அறிவிப்பு செய்தனர்.

இதை மக்கள் ஏற்காவிட்டாலும் நிர்வாகிகள் பயங்கரமான ஆதாரங்களைப் போட இருந்தோம்; அதைத் தடுத்து விட்டனர் என்று விமர்சனம் வரக் கூடாது என்பதற்காக அமைதி காத்தனர்.

விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டியது ஒருவரையும் ஈர்க்கவில்லை. எட்டு ஆடியோக்களும் செயற்குழு மந்தைகளை ஈர்த்த்து போல் ஈர்க்கவில்லை.

எள்ளின் முணையளவும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

இந்த விளக்க நாடகம் முடிந்ததும் பொது விசாரணைக்குத் தயாரா என்று மக்கள் முதல் கேள்வியை எழுப்பினார்கள். அது வழக்கமில்லை; தேவையில்லை என்பதே பதிலாக இருந்தது.

பாக்கர் விஷயத்தில் நாமே இப்படி அழைப்பு விட்டுள்ளோம் என்று மக்கள் கேட்ட போது அது வந்து……. என்பது தான் பதில்

வேலூர் இப்ராஹீம் கோரிக்கையை நம் மக்கள் ஏற்கவில்லை. பீஜே அறைகூவல் நம் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக இதைச் செய்து தான் ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக மக்கள் இருந்தனர்.

ஒருவர் கூட மாநில நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை.

மூன்று நிர்வாகிகளும் நீ சொல்! நீ சொல் என்று மற்றவருக்கு கேள்வியைத் தள்ளினார்கள். பதில் தெரியாத மாணவன் பேந்த பேந்த முழிப்பது போல் முழித்தனர்.

மாநில நிர்வாகி அப்துர்ரஹ்மான் என்பவர் நாங்கள்: பிரிபேராக வந்து இருந்தால் ஊதித் தள்ளி இருப்பொம் என்று கூறிய போது அரங்கமே சிரித்தது. 

நாங்கள் பொது விசாரணைக்கு வர முடியாது என்பது தான் ஒரே பதில்.

அடுத்து பொருளாதார மோசடி குறித்த கேள்விகள் பல திசைகளில் இருந்து பறந்தது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்லி உளற எதிர்க் கேள்விகள் வந்த போது முன்பு சொன்னதற்கு மாற்றமாகப் பேச இவர்கள் நிச்சயம் எட்டு கோடியை ஆட்டையைப் போடு உள்ளனர் என்று மக்கள் விளங்கிக் கொண்டனர்.

12 மணி வரை நிர்வாகிகளைப் போக விடவில்லை. பதில் சொல்லாமல் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இவர்களின் அயோக்கியத்தனம் வெளிச்சமானதால் வெளியூரில் இருந்து வந்த உறுப்பினர்கள் வெறுப்புடன் வெளியேறினார்கள்.


தொண்டி மக்கள் கடைசி வரை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

தவ்ஹித் ஜமாஅத் வரலாற்றில் இப்படி ஒரு இழிவை மாநில நிர்வாகிகள் சொந்த உறுப்பினர்களால் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் என்ற பதவிக்காக தலையை ஆட்டினாலும் மக்களுக்கு இவர்கள் சொல்வதை தலையாட்டிக் கேட்கும் அவசியம் இல்லை. மிகத் தெளிவாக உள்ளனர்.

ஒரு மனிதனைப் பற்றி சொந்த ஊர் மக்கள் தான் நன்றாக அறிவார்கள். 

பிஜே தனி மனிதனாக ஊரையே எதிர்த்து ஊர் நீக்கம் வரை எதிர் கொண்டு கொள்கையைச் சொன்னதையும் இக்கொள்கையை வைத்து பணமோ பதவியோ சம்பாதிக்காதாவர் என்பதையும் ஊர் மக்கள் அறிந்து இருந்ததால் ஒரு ஊறுப்பினர் கூட மாநில நிர்வாகத்துக்கு ஆதரவாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இனி மாநில நிர்வாகி என்று சொல்லிக் கொண்டு யாரும் உள்ளே வர முடியாது என்று தொண்டி கொள்கைச் சகோதரர்கள் பாடம் படித்துக் கொடுத்து விட்டனர்.

தகவல் : பைசல் மற்றும் அஷ்பாக்

விரிவான விளக்கம் பின்னர் வெளியிடப்படும்.
நன்றி
https://m.facebook.com/story.php?story_fbid=1847539881994278&id=1705615563042875 

No comments: