நபியவர்கள் காலத்தில் பாலியல் குற்றச்சாட்டில் வந்த சில வழக்குகளை மிகுந்த முக்கியத்துவம் தராமல் தட்டிக் கழிக்கவே நபியவர்கள் விரும்பியுள்ளார்கள்.
இவர் வெளியிட்ட மாயிஸ்(ரலி) விஷயத்தில் 5 முறை தவிர்த்து 6வது முறைதான் தண்டனைக்கு தீர்ப்பு அளித்தார்கள்.
ஆனால் பொருளாதாரப் பிரச்சினை, என்றால் அநியாம் என்றால் என்றால் ஒரு சிறிய ஊழல் என்றால் கூட உடனே ஆடை தரையில் இழுபட முகம் சிவக்க வந்து மிம்பரில் ஏறி பலரையும் அழைத்து சம்பந்தப்பட்டவரை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
"நாம் ஜக்காத்தை வசூலித்து வர அனுப்பினால் அவர் ஒரு தொகையை எடுத்து வைத்துக் கொள்கிறார். இது அவரது அம்மா வீட்டில் இருந்திருந்தாலோ அல்லது அவரது அப்பா வீட்டில் இருந்திருந்தாலோ வந்திருக்குமா?" என கடுமையாக கண்டித்து பொருளாதாரச் சுரண்டலின் வாசலை நபியவர்கள் இறுக சாத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
இந்த வழி முறையை குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கை உடையவர்களாக காட்டிக் கொள்பவர்கள் தலைகீழாக பின்பற்றி வருகிறார்கள்.
பாலியல் பிரச்சினையை நாம் ஆதரிக்கவும் இல்லை. ஆனால் பொருளாதார குற்றச்சாட்டிற்கு நபியவர்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்ததை இங்கு வசதியாக மறந்துவிடுகிறார்கள் என்பதையே சுட்டிக் காட்டுகிறோம்.
ஒருவன் என்ன செய்தாலும் அதை எதிர் கேள்வி கேட்காமல் கட்டுப்படுவதற்கு என்று ஒரு சிறு கூட்டமோ நாலு பேரோ இருந்தால் போதும் நிர்வாக சீர்கேட்டை செய்து மெல்லமெல்ல மார்க்கத்திலும் கைவைத்துவிடுகிறான்.. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்கவும் முடியாது
கணக்கில் வராத மக்கள் பணம் லட்சம், கோடி என்றால்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல. நுாறாக இருந்தாலும் விடக் கூடாது. அதுதான் நபி வழி.
அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்.
#நான்_நெகிழ்ந்த_மாயிஸ்(ரலி)... ..
#விபச்சாரம்_செய்தபோதும்_விரும் பி_வந்து_தண்டனை_ஏற்ற_சஹாபி_மா யிஸ்_ரலி_அவர்கள்...
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப் படுத்துங்கள்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக" என்று கூறினார்கள்.
மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அவர், "விபச்சாரக் குற்றத்திலிருந்து” என்று விடையளித்தார். அப்போது அவர்கள், "இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?" என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், "இவர் மது அருந்தியுள்ளாரா?" என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் விபச்சாரம் செய்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்” என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், "அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது" என்று கூறினர். வேறு சிலர்,
"மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து,
"என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்" என்று கூறினார்" என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!" என்று வேண்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்" என்று கூறினார்கள்.
( முஸ்லிம் 3499 ஹதீஸ் சுருக்கம்)
ஆகவே, நாங்கள் அவரை "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது "ஹர்ரா"வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.
(முஸ்லிம் 3497 ஹதீஸ் சுருக்கம்)
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்ரழிஅவர்களின் சம்பவமே சான்று.
மாயிஸ்[ரழி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக,
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த நபியவர்கள்,
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.
அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு' கட்டுவதைக் காண்கிறோம். காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய இமேஜ் அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள்.
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது இமேஜ் பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள்.
அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தண்டனை இன்று அவர்களை பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது.
எனவேதான் அந்த நல்லறத் தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது
படிப்பினை பெறுவோம்....
No comments:
Post a Comment