Wednesday, February 20, 2019

மனிதன் என்ற அடிப்படையில் மறதியாக *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* பதிந்துள்ள தவறான சில தகவல்கள்


அரசியல் ரீதியாக பாமகவை விமர்சிக்கும் தகுதி முஸ்லிம்களாகிய நமக்கு உண்டா? என்ற தலைப்பில் *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* அவர்கள் எழுதியது வாட;ஸப்பில் நமக்கு வந்தது. *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* நல்ல எழுத்தாளர்தான்.


1989 ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்லீக் அப்துல் சமது பிரிவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ராமதாஸ் என்பது தவறான தகவல் ஆகும்.  

1989 சட்டமன்ற தேர்தலில் அதிமுக(ஜா) அதிமுக(ஜெ) என பிரிந்து நின்றதால் கலைஞரும் உச்சத்தில் நின்று காங்ரஸ் மு.லீக் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து கூட்டணியை தொடரவில்லை.

ஆகவே 1989 சட்டமன்ற தேர்தலில் காங்ரஸ் கட்சியுடன்தான் மு.லீக் கூட்டணி அமைத்து ஏணி சின்னத்தில் போட்டி போட்டியிட்டது.
அப்துல் லத்தீப் சாஹிபை கையில் எடுத்து முஸ்லிம்லீக்கை இரண்டாக உடைத்து மு.லீக்(ல)வுக்கு 5 இடங்கள் என அறிவித்து ஒரு இடத்தை லத்தீப்பை கொண்டே திருப்ப கொடுக்க வைத்தார்.

5 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்கச் சொல்வது. அல்லது திரும்ப கொடுக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் தொகுதி பார்த்து கொடுப்பது. 3 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்க வைத்தது இதையெல்லாம் கலைஞர் அன்றே செய்து விட்டார்.

அதற்கு நாசமாகப் போன நம்மவர்களும் துணை நின்றார்கள். எந்த துரை முருகனைக் கொண்டு பிறருக்கு கேடு விளைவித்தார்களோ அந்த துரை முருகனைக் கொண்டே அவர்களுக்கு அல்லாஹ் கேடு விளைவித்தான் .அல்லாஹ் இருப்பானா?

1989ல் பாளையங்கோட்டை கொடுக்கப்படவில்லை. 1977ல் நாஞ்சில் மனோகரன், 1980ல் கருப்பசாமிபாண்டியன் என அதிமுக கோட்டையாக இருந்த பாளையங்கோட்டையை உடைத்தது மு.லீக். 

எந்த மாதிரி நேரத்தில் உடைத்தது 1984ல் தாய் (இந்திரா) இல்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு வாய் இல்லா பிள்ளை (எம்.ஜி.ஆர்)க்கு ஒரு ஓட்டு என்று தோல்வியைப் பற்றி கருணாநிதி கூறிய அந்த அனுதாப அலை தேர்தலில் ஷம்சுல் ஆலம் பாளையங்கோட்டையில் மு.லீக் சார்பில் வெற்றி பெற்றார். அதுவும் தென்னக நெப்போலியன், மாவீரன் என்றழைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டினை எதிர்த்து.

அந்த மு.லீக் தொகுதியை 1989ல் உடன் இருந்த லத்தீப் மூலம் மொன்னி மைதீன் பிச்சைக்காக கேட்டும் கொடுக்க மறுத்து விட்டார். ராணிப் பேட்டையைக் கொடுத்தார். கடலாடி, அரவாக்குறிச்சி, புவனகிரி, வாணியம்பாடி, ராணிப் பேட்டை என 5 தொகுதிகளை அறிவித்து ராணிப் பேட்டையை திரும்பக் கொடுக்க வைத்தார் கலைஞர். 

திமுகவில் சீட் கிடைக்காத வாலாஜா அசேன் உசேன் என அறியப்பட்டவர் சுயேச்சையாக நின்று திமுகவை தோற்கடித்து பிறகு மீண்டும் திமுகவில் சேர்ந்தார் 1989ல்.

1991ல்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் நடந்த தேர்தலில் பாமகவுடன் மு.லீக் கூட்டணி வைத்தது.

1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் பிப்ரவரியில் இணைந்த மு.லீக்கில் 1993 இறுதியிலேயே மீண்டும் பிளவு பேச்சு வந்தது. 


1993 டிசம்பர் 6ல் அப்துல்ஸமது, அப்துல் லத்தீப், காதர் மைதீன் என எல்லாரும் துபையில் இருந்தார்கள். கீழக்கரை உசேன் காகா வீட்டில் தங்கி டிசம்பர் 2  யுஏஇ நேஷனல் டேய் ஊர்வலத்தை பார்த்தார்கள்.

டிசம்பர் 6ல் தாயகத்திலிருந்து எதிர்ப்பை பதிவு செய்யாமல் இங்கு என்ன வேலை என விமர்சிக்கப்பட்டார்கள். அப்பொழுதே பாபரி மஸ்ஜித் விஷயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அன்றைய அகில இந்திய மு.லீக் தலைவர் இப்றாஹீம் சுலைமான் சேட் கூற மு.லீக் இந்திய அளவில் 2ஆக பிரிந்தது.

பாமக போன்ற அமைப்புகளில் முஸ்லிம்கள் இருப்பார்கள். முலீக் போன்ற அமைப்புகளில் வன்னியர்கள் இருக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் உருவாக்கிய அமைப்பினர் என்னதான் இது பொதுவானது என்றாலும் பதவி கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பிற சமுதாயத்தவர் இருப்பர். பொது மக்கள் தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய அமைப்பில் முஸ்லிம் பொது மக்கள் இருப்பார்கள். பதவி இல்லாவிட்டாலும் அடிமட்ட அடிமாட்டு தொண்டர்களாகவும் முஸ்லிம்கள் இருப்பார்கள்.








No comments: