Friday, August 09, 2019

நீதியின் பக்கம் நிற்போம்! அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

[09/08, 9:40 am] யூசுப் 
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திறந்த மனதுடன் ஒரு மடல் 
தயவு செய்து படிக்கவும்..

நீதியின் பக்கம் நிற்போம்!
அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

அன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!!

சென்ற ஜூலை 27 அன்று காரைக்கால் தவ்ஹீத் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பீ.ஜெ. அவர்கள், ததஜ நிர்வாகிகள் தனக்கு இழைத்த அநீதி - துரோகங்களை வெளிச்சப்படுத்தினார். மேலும், தன்னை வெளியேற்றிய பிறகு ததஜ தலைமை பொருளாதார ரீதியாக செய்த மோசடிகளையும், வஹீ மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையிலிருந்து எவ்வாறெல்லாம் தடம் புரண்டு வருகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு பேசினார்.
முத்தாய்ப்பாக - 
"ததஜ தலைமை என் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைத் தக்க ஆதாரங்களுடன் என் முன்னால் மக்கள் மத்தியில் அவர்கள் பொது விசாரணை மூலம் நிரூபிக்கட்டும்.

அதேபோல ததஜ தலைமை மீது நான் வைக்கும் பொருளாதாரக் குற்றச்சாட்டு, மார்க்கத்தில் தடம் புரண்டது குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தக்க ஆதாரங்களுடன் அவர்கள் முன்னால் மக்கள் மத்தியில் நான் நிரூபிக்கிறேன்.
இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியே சமூக ஊடகங்களிலும், உள்ளரங்குகளிலும், மேடைகளிலும் குற்றச்சாட்டுகளை கூறி மக்களைக் குழப்புவதை விட, இரு தரப்பும் ஒரே மேடையில் ஒரு பொது விவாதத்தை சந்திப்போம். எனக்கு எதிராக உங்களிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் அள்ளிப் போட்டு, ஒரே விவாதத்தில் என்னை மேலும் கேவலப்படுத்தி, மக்களிடமிருந்து என்னை அன்னியப்படுத்திவிடுங்கள்." என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
சகோதரர் பீ.ஜெ. அவர்களின் காரைக்கால் அறைகூவலைத் தொடர்ந்து, அதே இடத்தில் ததஜவினர் வரும் ஆக.9 அன்று ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதை நாங்கள் வரவேற்கிறோம். முக்கியமாக பீ.ஜெ. மீது கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதில் முன்னிலை வகிக்கும் ததஜ மாநில பொதுச்செயலாளர் ஈ.முஹம்மது, மாநிலச் செயலாளர் அப்துல் கரீம் மற்றும் கோவை .ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். அதை மேலும் நாங்கள் வரவேற்கிறோம்.
வழக்கம் போல எல்லா மேடைகளிலும் பீ.ஜெ. மீதான அவதூறு புராணம் பாடுவதைப் போல ஆக.9 காரைக்கால் மேடையிலும் பாடாமல், பீஜே அவர்களின் விவாத அறைகூவலை ஏற்குமாறு அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறோம்.
காரைக்கால் ததஜ நிர்வாகிகளும் தங்கள் தலைமையின் நேர்மையைப் பறைசாற்றும் வகையில், அல்லாஹ்வை மட்டும் அஞ்சியவர்களாக, தங்கள் தலைமைக்கு எடுத்துச்சொல்லி பீ.ஜெ.யின் விவாத அறைகூவலையும் பொது விசாரணையையும் ஏற்கச் செய்ய வேண்டும்.
விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காரைக்கால் தவ்ஹீத் பேரவை பொறுப்பேற்றுக்கொள்ளும்.
எங்களுக்கு உண்மை – சத்தியம் தான் தேவை. உறுதிமிக்க கொள்கைத் தலைமை தான் தேவை. நீதியின் பக்கம் சார்ந்திருக்கவே விரும்புகிறோம். உங்களிடம் சத்தியமும், நீதியும் இருக்குமானால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். பீ.ஜே.வை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் பக்கம் நிற்கிறோம். காரைக்கால் தவ்ஹீத் பேரவையைக் கலைத்துவிட்டு, ததஜவின் அடிமட்ட தொண்டர்களாக எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். பீ.ஜெ.க்கு எதிராகக் கடுமையாக களமாடுகிறோம்.
ததஜ மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் எங்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்த்து நீதிக்கு சாட்சிகளாக நின்று மறுமை வெற்றிக்கு வழிகோல வேண்டுமென சகோதரத்துவ உணர்வுடன் வேண்டுகிறோம்.
அநீதியாளர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி - நீதியின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே இந்தப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளோம். விவாதத்தையே வித்தாகக் கொண்டு வளர்ச்சியின் உச்சம் தொட்ட ததஜ தலைமை, இந்த விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், ஓரளவு அவர்களிடம் ஆதாரங்களும்,உண்மையும், நேர்மையும் இருக்கும் என்று நாம் கருதலாம். அவர்கள் ஏற்கவில்லையெனில் யார் பொய்யர்கள்? யாரிடத்தில் பித்தலாட்டம் உள்ளது? என்பதை நடுநிலையான மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இவண்
காரைக்கால் தவ்ஹீத் பேரவை (KTP)
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
----------------------------------------------------------------------------------------------------------------


09/08, 10:12 am] அப்துல்: #பிஜெ_வின்_பொது_விசாரணை_அழைப்பு_ஏற்றுக்_கொள்ளப்பட்டது

பாலியல் குற்றவாளி சகோதரர் பிஜெ ஒரு விபச்சாரகனா? இல்லையா என்பதை நிருபிக்க்க பொது விசாரணை வேண்டும் என்று பல இடங்களில் பேசி வந்ததை தொடர்ந்து தற்போது பொது விசாரணை அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

*பொது விசாரணை நடுவர்களாக 23 கூட்டமைப்பின் தலைவர்கள் இருப்பார்கள்*

தரப்பு 1: சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் 
               சகோ.அப்பல்லோ ஹனிபா

தரப்பு 2: 

            சகோ.முஹம்மது காமில், சகோ.கோவை பாசித், (ஆடியோ வெளியீட்டுக் குழு) 

சகோ.ஜாஹிர் உசேன் (மாஸ்கான் சாவடி) 
சகோ. ராஜா முஹம்மது (மாஸ்கான் சாவடி)

தேதி மாதம் இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாளைக்குப் பிறகு சகோ.பிஜே தரப்பு அறிவிக்க வேண்டும்.

விசாரணை விபரம்:

பிஜே ஒரு விபச்சாரகன் என்றும் அவர் பல பெண்களுடன் விபச்சாரம் செய்துள்ளார் என்றும் 28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றூம் 10 நிமிட ஆபாச ஆடியோகளை பேசியவர் பிஜெ தான் என்னும் இன்னும் வெளி வராத பல ஆதாரங்கள் ஏற்கனவே 23 கூட்டமைப்பில் சமர்பிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் ஆடியோ வெளியீட்டுக்குழு சமர்பித்து பிஜெ விபச்சாரகன் என்று நிறுபிக்கும்

சகோ.பிஜெ தன்னிடம் உள்ள ஆதாரங்களை பொது விசாரணைக் குழுவில் சமர்பித்து தன்னை உத்தமன் என்று நிருபிக்க  வேண்டும்.

பொது விசாரணைக்கான தேதியையும் இடத்தையும் சகோ.பிஜே தரப்பு வெளியிடுவதை ஆடியோ வெளியிட்டு குழு ஏற்றுக் கொள்ளும்.

பொது விசாரணை ஏற்பு, இடம் மற்றும் தேதியை தன்னுடைய ஞாயிற்றுகிழமை பேஸ்புக் லைவில் சகோ.பிஜெ தெரிவித்தாலே போதுமானது.

- இப்படிக்கு,

28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றும் 10 நிமிட ஆபாச ஆடியோ வெளியீட்டு குழுவினர்

Wednesday, June 26, 2019

கேவியட் என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்?

1988, 89 களிலேயே குமரி மாவட்டம் கோட்டாறு சகோதரர்கள் வழி காட்டுதலில் மேலப்பாளையத்தில் செட்டி ஸலாம், அப்துல் ஹமீது போன்ற பலர் பெயரில் ஜாக் சார்பில் கேவியட் போட்டோம். 

மதுரை மாநாடு கேவியட்டில் JAQH மாநில தலைமை கோட்டை விட்டது. அதனால் 1992 ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் மாநாடு துவங்கி முதல் அமர்வு நடந்தும். 

எதிர்பாரா திசையான மதுரை  கிட்டாபாய் வழக்கால் மைதானத்தை சுற்றி வளைத்தது போலீஸ். மாநாட்டை தொடர்ந்து நடத்த விடாமல்   தடை செய்தது. திடலுக்கு உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியவில்லை. வெளியே உள்ளவர்கள் உள்ளே போக முடியவில்லை. மேடையில் SSU ஸைபுல்லா ஹாஜா பேசிக் கொண்டிருக்கும்பொழுது எதிர்ப்பாளர்கள் மட்டும் உள்ளே நுழைந்து தகராறு செய்து கொண்டிருந்தார்கள்.

கோவை பாஷா, இம்தாதி, PJ போன்றவர்கள் மனைவி மக்களுடன் மறியல் செய்தார்கள்.  போலீஸ் துப்பாக்கியுடன் நிற்கிறான். பொம்பளைங்க இருக்காங்க எனவே கலைந்து போங்க என அமீர் கமாலுத்தீன் சொன்னார். சுட்ட நம்மளும்தான் சாவோம் நாம செத்த பிறகு பொம்பளைங்களைங்க இருந்து என்ன செய்ய என்று வாதம் வைக்கப்பட்டது. கடைசியில் அமீருக்கு 
கட்டுப்பட்டு மறியல் வாபஸ் பெறப்பட்டு மாநாடு நிறுத்தப்பட்டது. தடை செய்ப்பட்ட அதே இடத்தில் அல்லாஹ்வின் பேரருளால் 2000 ஆகஸ்ட்டில் மாநாடு நடத்தப்பட்டது. 

இனி வழக்கறிஞர் அல்பி நிஜாம். B.Sc.,B.L., அவர்கள் கேவியட் என்றால் என்ன? என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தை பாருங்கள்

கேவியட் (முன்னெச்சரிப்பு மனு)      பிரிவு 148 A - உரிமையியல் நடைமுறை சட்டம்
1) ஒரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அல்லது தொடரப்படவுள்ள உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை ஒன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் போது அல்லது செய்யப்பட்டுள்ளவிடத்து அத்தகைய விண்ணப்பம் விசாரிக்கப்படுகின்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக உரிமையுள்ள எவரும் அதனையொட்டி கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம் பிரிவு 148-A(1)

2) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளவர் யாரால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அவருக்கு கேவியட் நோட்டீஸ் ரிஜிஸடர் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.  பிரிவு 148-A(2)

3) கேவியட் மனு தாக்கல் செய்த பின் நாம் யாருக்கு கேவியட் மனு அனுப்பினோமோ அவர் நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு போட்டால் நீதிமன்றம் கேவியட் போட்டவருக்கு அதை பற்றி அறிவிப்பு கொடுக்க வேண்டும். பிரிவு 148-A(3)

4) நீதிமன்றத்தில் வழக்கு போடும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கு மனுவின் நகல் ஆவணங்கள்பத்திரங்கள் போன்றவற்றை தன்னுடைய செலவிலேயே  கேவியட் போட்டவருக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் . பிரிவு 148-A(4)

5) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரை அமலில் இருக்கும். அந்த 90 நாட்கள் முடியும் முன்னர் மீண்டும் கேவியட் போட்டால் அது மேலும் 90 நாட்கள் அமலில் இருக்கும். பிரிவு 148-A(5)

வழக்கறிஞர் அல்பி நிஜாம். B.Sc.,B.L.,
மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி


ஜாக் மாநாடு தடையானது பற்றி உருது பத்திரிக்கையில் வந்த செய்தி


Monday, March 11, 2019

ஒரு முஸ்லிம்லீக் தொண்டனின் மனக்குமுறல் கடிதம் இது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடை நிலை ஊழியனாக மனம் நொந்து எழுதுகிறேன். திமுக கூட்டணியில் நமக்கு 1 தொகுதி தரப்பட்டுள்ளது இந்த தொகுதியை எத்தனையோ ஆயிரம் தொண்டர்களில் ஒருவருக்கு தரலாம் ஆனால் நம்ம தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் கார்ப்ரேட்டுக்கு விலை பேசி விற்று விட்டது? மனம் நோக செய்கிறது.

வேட்பாளர் தேர்வு கென்யாவில் நடந்து முடிந்துள்ளது முஸ்லீம் லீக்கின் அரசியல் புரோக்கர்கள் குத்தாலம் ,திருப்பனந்தாள் ஏற்பாட்டில் கார்ப்ரேட் முதலாளிகள் நோபல் மெரைன் சாஹுல், பிளாக் துலிப் யக்யா,கீழக்கரை கமால்,மற்றும் முஸ்லீக் லீக்கின் கார்ப்ரேட் பிரமுகர்கள் சம்மதத்தோடு எஸ்டி கூரியர் முதலாளி நவாஸ் கனி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெட்ககேடு .. உள்ளூரில் கட்சி நடத்தி விட்டு வேட்பாளரோ வெளிநாட்டில் கார்ப்ரேட்டுகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது . இது எத்தனை ஆபத்தான போக்கு.. இதனை விசயத்தை வெளி கொண்டு வந்து நமது சமுதாயத்தின் மானம் காத்திட மன்றாடி கேட்டு கொள்கிறேன். நீங்கள் இறைவனுக்கு கட்டுபட்டவர் இதனை வெளியாக்குவீர்கள் என நம்புகிறோம். போட்டோவில் வட்டமிட்டுள்ளது நவாஸ் கனி அவர்கள். எனது எண்ணை வெளியிட வேண்டாம் அமானிதம்.

குறிப்பு: இவரது அடுத்த கடிதமும் வந்துள்ளது.இன்ஷா அல்லாஹ்...அதனையும் வெளிப்படுத்துவோம்.
நன்றி
https://m.facebook.com/story.php?story_fbid=1180337715454223&id=100004340167833

-----------------------------------------------------------------------------------------

Wednesday, February 20, 2019

மனிதன் என்ற அடிப்படையில் மறதியாக *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* பதிந்துள்ள தவறான சில தகவல்கள்


அரசியல் ரீதியாக பாமகவை விமர்சிக்கும் தகுதி முஸ்லிம்களாகிய நமக்கு உண்டா? என்ற தலைப்பில் *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* அவர்கள் எழுதியது வாட;ஸப்பில் நமக்கு வந்தது. *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* நல்ல எழுத்தாளர்தான்.


1989 ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்லீக் அப்துல் சமது பிரிவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ராமதாஸ் என்பது தவறான தகவல் ஆகும்.  

1989 சட்டமன்ற தேர்தலில் அதிமுக(ஜா) அதிமுக(ஜெ) என பிரிந்து நின்றதால் கலைஞரும் உச்சத்தில் நின்று காங்ரஸ் மு.லீக் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து கூட்டணியை தொடரவில்லை.

ஆகவே 1989 சட்டமன்ற தேர்தலில் காங்ரஸ் கட்சியுடன்தான் மு.லீக் கூட்டணி அமைத்து ஏணி சின்னத்தில் போட்டி போட்டியிட்டது.
அப்துல் லத்தீப் சாஹிபை கையில் எடுத்து முஸ்லிம்லீக்கை இரண்டாக உடைத்து மு.லீக்(ல)வுக்கு 5 இடங்கள் என அறிவித்து ஒரு இடத்தை லத்தீப்பை கொண்டே திருப்ப கொடுக்க வைத்தார்.

5 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்கச் சொல்வது. அல்லது திரும்ப கொடுக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் தொகுதி பார்த்து கொடுப்பது. 3 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்க வைத்தது இதையெல்லாம் கலைஞர் அன்றே செய்து விட்டார்.

அதற்கு நாசமாகப் போன நம்மவர்களும் துணை நின்றார்கள். எந்த துரை முருகனைக் கொண்டு பிறருக்கு கேடு விளைவித்தார்களோ அந்த துரை முருகனைக் கொண்டே அவர்களுக்கு அல்லாஹ் கேடு விளைவித்தான் .அல்லாஹ் இருப்பானா?

1989ல் பாளையங்கோட்டை கொடுக்கப்படவில்லை. 1977ல் நாஞ்சில் மனோகரன், 1980ல் கருப்பசாமிபாண்டியன் என அதிமுக கோட்டையாக இருந்த பாளையங்கோட்டையை உடைத்தது மு.லீக். 

எந்த மாதிரி நேரத்தில் உடைத்தது 1984ல் தாய் (இந்திரா) இல்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு வாய் இல்லா பிள்ளை (எம்.ஜி.ஆர்)க்கு ஒரு ஓட்டு என்று தோல்வியைப் பற்றி கருணாநிதி கூறிய அந்த அனுதாப அலை தேர்தலில் ஷம்சுல் ஆலம் பாளையங்கோட்டையில் மு.லீக் சார்பில் வெற்றி பெற்றார். அதுவும் தென்னக நெப்போலியன், மாவீரன் என்றழைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டினை எதிர்த்து.

அந்த மு.லீக் தொகுதியை 1989ல் உடன் இருந்த லத்தீப் மூலம் மொன்னி மைதீன் பிச்சைக்காக கேட்டும் கொடுக்க மறுத்து விட்டார். ராணிப் பேட்டையைக் கொடுத்தார். கடலாடி, அரவாக்குறிச்சி, புவனகிரி, வாணியம்பாடி, ராணிப் பேட்டை என 5 தொகுதிகளை அறிவித்து ராணிப் பேட்டையை திரும்பக் கொடுக்க வைத்தார் கலைஞர். 

திமுகவில் சீட் கிடைக்காத வாலாஜா அசேன் உசேன் என அறியப்பட்டவர் சுயேச்சையாக நின்று திமுகவை தோற்கடித்து பிறகு மீண்டும் திமுகவில் சேர்ந்தார் 1989ல்.

1991ல்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் நடந்த தேர்தலில் பாமகவுடன் மு.லீக் கூட்டணி வைத்தது.

1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் பிப்ரவரியில் இணைந்த மு.லீக்கில் 1993 இறுதியிலேயே மீண்டும் பிளவு பேச்சு வந்தது. 


1993 டிசம்பர் 6ல் அப்துல்ஸமது, அப்துல் லத்தீப், காதர் மைதீன் என எல்லாரும் துபையில் இருந்தார்கள். கீழக்கரை உசேன் காகா வீட்டில் தங்கி டிசம்பர் 2  யுஏஇ நேஷனல் டேய் ஊர்வலத்தை பார்த்தார்கள்.

டிசம்பர் 6ல் தாயகத்திலிருந்து எதிர்ப்பை பதிவு செய்யாமல் இங்கு என்ன வேலை என விமர்சிக்கப்பட்டார்கள். அப்பொழுதே பாபரி மஸ்ஜித் விஷயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அன்றைய அகில இந்திய மு.லீக் தலைவர் இப்றாஹீம் சுலைமான் சேட் கூற மு.லீக் இந்திய அளவில் 2ஆக பிரிந்தது.

பாமக போன்ற அமைப்புகளில் முஸ்லிம்கள் இருப்பார்கள். முலீக் போன்ற அமைப்புகளில் வன்னியர்கள் இருக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் உருவாக்கிய அமைப்பினர் என்னதான் இது பொதுவானது என்றாலும் பதவி கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பிற சமுதாயத்தவர் இருப்பர். பொது மக்கள் தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய அமைப்பில் முஸ்லிம் பொது மக்கள் இருப்பார்கள். பதவி இல்லாவிட்டாலும் அடிமட்ட அடிமாட்டு தொண்டர்களாகவும் முஸ்லிம்கள் இருப்பார்கள்.








Monday, February 18, 2019

மன்னிப்புக் கேட்ட செய்யத் இப்ராஹீமுக்கு உம்மு இப்ராஹீம் என்ற பாதிக்கப்பட்ட பெண் எழுதியது

RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை.


நீங்கள் 
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ? 

PJ யும் செய்யது இபுறாஹிமும் சேர்ந்து இயக்கிய அஹமது கபீர் என்ற கள்ள ID யினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கடிதம் :

சகோதரர்களே! சில நாட்களுக்கு முன் Tntj தலமையினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட செய்யத் இப்ராஹீம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அஹ்மத் கபீர் கள்ள ஐடிய இயக்கியது pj தான் என்றும் அதற்காக ஆலோசனை வழங்கியவர்களில் தானும் ஒருவன் என்றும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சொல்லியிருந்தார்.

https://fazlulilahi.blogspot.com/2019/02/blog-post_18.html
அஹ்மத்கபீர் கள்ள ஐடியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி என்பதால் இது சம்பந்தமாக சில கருத்துக்கள சொல்வதற்காகவே இந்த பதிவு. 

உங்களுடைய இயக்கத்தை எதிர்க்கின்ற ஒரே 
காரணத்திற்காக,
RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை. 


வல்ல அல்லாஹ்விடம் அழுது முறையிட்டு 
நாங்கள் கேட்ட துவாவினால் அல்லாஹ் உங்களுடைய பொய் முகத்தையும், நீங்கள் எப்படிப்பட்ட கேவலமானவர்கள் என்பதையும்  வெளிப்படுத்தினான். 

அதுமட்டுமல்ல , யாருக்காக  அந்த ஐடியை உருவாக்கி சமுதாய  பெண்கள் பலரின் மானதில் விளையாடினீர்களோ அவர் வாயாலயே    உங்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினான். 

மேலும்,   
அஹ்மத் கபீர் கள்ள ஐடியை இயக்கியது நீங்களும் PJவும் தான் என்று பல தடவை பல சகோதரர்கள் சொன்ன போதிலும் , உங்கள் நண்பர் அல்தாபி பகிரங்கமாக சொன்ன போதெல்லாம் அதை மறுத்து மவ்னம் காத்த நீங்கள் உங்களுக்குள் பிரச்னை வந்து pj உங்கள் மீது சேற்றை வாரி பூசிய பின் இப்போது மன்னிப்பு கேட்டு கபட நாடகமாடுகீறிர்கள்.

இது தெருவில் போரவர்களை கூப்பிட்டு செருப்பால் அடித்து விட்டு மன்னிப்பு கேட்பது போல் இருக்கு

நீங்கள் 
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ? 

நிச்சயமாக, அஹ்மத் கபீர் கள்ள ஐடியில் எழுதிய, ஆலோசனை சொன்ன, மூளையாக செயல்பட்ட, அதற்க்கு லைக் கொடுத்த, ஷேர் செய்த, அந்த ஐடியை இயக்கியது யார் என்று தெரிந்தும் கண்டு கொள்ளாமல் கண்டிக்காத அனைத்து Tntj நிர்வாகிகள் அனைவருக்கும் எதிராக மறுமையில் என்னைப் போன்ற சகோதரிகள் வந்து  நிற்போம். 

இப்படிக்கு

உம்மு இப்ராஹீம்.
18-02-19

நன்றி 

Iqbal Hasan

https://www.facebook.com/100004971520469/posts/1286444988197873/

Friday, February 15, 2019

"எதையும் செய்ய துணியும் M.S.சையது இப்ராஹிமை நம்பலாமா?

👹 "எதையும் செய்ய துணியும் M.S.சையது இப்ராஹிமை நம்பலாமா? " 👹

☠ ரியாத் மைதீன் என்ற பெயரில் கள்ள ஐடி மூலமாக அல்தாபி பற்றி அவதூறு பரப்பி ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சையது இப்ராஹிம் தற்போது வெளியிட்ட வீடியோவில் அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.❓

⁉ பிஜே வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விளக்கம் தரும் கடிதத்தில் ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் சம்மந்தப்பட்ட அல்தாபி பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. 

🤷‍♂ கடும் நெருக்கடியில் உள்ள சையது இப்ராஹிம் வேறு வழியின்றி அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டார் என்று நாம் சொல்ல வரவில்லை. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

❓ இப்போது நம் கேள்வி என்னவென்றால்....

⁉ அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டவுடன் இதனால் அவர் நல்லவராகி விட மாட்டார். அவர் மீது நான் குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது என்றார்.

⁉ அப்படியென்றால் என்ன அர்த்தம்? 
☠ டூவீலரில் அல்தாஃபியை ஒரு பெண்ணுடன் பார்த்ததாக பொய்ச் சத்தியம் செய்தார், சையது இப்ராஹிம். ஆனால் அல்தாபி ஆட்டோவில் முன் பக்கம் டிரைவர் அருகில் அமர்ந்து தன் உறவுக்கார பெண்ணை பயணமேற்றி விட வந்ததை தெளிவுபடுத்தினார். டூவீலர் அல்ல, ஆட்டோ என்றதும் ஆட்டோ என்றால் இன்னும் வசதி என்றும் அப்போதைய மாநிலத் தலைவர் மூலமாக சொல்ல வைத்தார்.

❗ அல்தாபி மீது குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளது என்றால் இன்னும் கூட பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சுமத்தியது நிலுவையில் தான் உள்ளது என்கிறார்.

✅ ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் 4 சாட்சிகள் கொண்டு வராதவர்களை 80 கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம் புரிபவர்கள். - அல்குர்ஆன் 24:4

🚫 அல்லாஹ்வின் இந்த வார்த்தையின் அடிப்படையில் சையது இப்ராஹிமின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. அல்தாபி, பிஜே மட்டுமல்ல யாருக்கு எதிராக சையது இப்ராஹிம் சாட்சி கூறினாலும் அதை தவ்ஹீத்வாதிகள் ஏற்றுக்கொள்ள கூடாது. இது நம் கருத்து அல்ல, இஸ்லாத்தின் கருத்து.

🚫 சையது இப்ராஹிம் அல்தாபியிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தால் மீண்டும் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறியிருக்க கூடாது.

⁉ அல்தாபி நல்லவர், கெட்டவர் என்று சர்டிபிகேட் தர சையது இப்ராஹிமுக்கு வஹி வருகிறதா?

✅ எந்தத் தவறுக்கு என்ன பரிகாரம் என அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாக கூறி விட்டனர். ஒருவர் திருடினால் அவருக்கு மனோ இச்சைப்படி தலையை சீவி மரண தண்டனை வழங்க முடியாது.  திருடியவருக்கு கைகளை மட்டும் தான் வெட்ட முடியும்.

‼ பலருக்கும் ஆத்திரம் வருகிறது தான். அல்தாபி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பலருடன் கள்ளக் கூட்டணி அமைத்து ஒட்டுமொத்த பேரியக்கத்தை சீரழித்த சையது இப்ராஹிமுக்கு மாறு கை, மாறு கால் வாங்கி கழுமரத்தில் தொங்க விட வேண்டும் என்று. ஆனால் மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு பொருந்திப் போகிறார்களே..

✅ அந்த வகையில் அல்தாபி ஒரு அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தாலும் பெரும்பாவம் செய்யவில்லை என அல்லாஹ்வை சாட்சியாக்கி முபாஹலாவில் நிரூபித்து விட்டார். சம்மந்தப்பட்ட அந்தப்பெண்ணும் பெரும்பாவம் எதுவும் நடக்கவில்லையென தன் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

✅ இந்த நிலையில் அல்தாஃபிக்கு இஸ்லாம் கூறும் பரிகாரம்:
✅ பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை. - திருக்குர்ஆன்  11:114

✅ இந்த வசனம் மதீனாவின் புறநகரில் விபச்சாரத்தை தவிர அனைத்தும் செய்து விட்டு வந்த அப்துல்லா (பின்) மஸ்ஊத் என்ற மதீனாவாசி நபியவர்களிடம் பரிகாரம் கேட்ட போது அல்லாஹ் அருளிய வசனம். அந்த மதீனாவாசிக்கு மட்டுமல்ல, சமுதாய மக்கள் அனைவருக்கும் தான் இது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பார்க்க : முஸ்லிம்

🚫 ஆனால் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு பரப்பிய, இன்றும் அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற சையது இப்ராஹிமுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனை என்ன? 80 கசையடிகள் + சாட்சியத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள கூடாது.

⁉ பொதுமக்கள் மத்தியில் 80 கசையடி தண்டனை பெற வேண்டிய, மதிப்பில்லாத இவரையா ததஜ மாநில தலைமை மீண்டும் அரவணைக்க போகிறது?

👹💀 நான் வளர்த்த ஜமாத் என்று அதிர்ச்சி காமெடி செய்கிறார் சையது இப்ராஹிம். மாநில பொதுச் செயலாளராக இவர் இருந்த போது ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக எண்ணிக் கொண்டு விசாரிக்காமல் ஜமாத்தை விட்டு நீக்கம் செய்து கையெழுத்திட்ட பட்டியலின் நீளம் தெரியுமா? தினம் ஒரு தகராறு செய்து உட்பட இவரால் வெருண்டு ஒடியவர்கள் என புள்ளி விவரத்தை நம்மால் தர முடியும். ஒரே ஒரு நபராவது இவர் பயான் கேட்டு கொள்கைக்கு வந்ததாக இவரால் காட்ட முடியுமா? 👹💀

☠ உலக ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் (யாருனுடன் வேண்டுமானாலும் கள்ள கூட்டு வைக்குமளவுக்கு) செல்ல துணிபவர் சையது இப்ராஹிம். ததஜ நடவடிக்கைக்குப் பின் பிஜேவிடம் அடைக்கலமானார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீண்டும் ததஜவை நாடுகிறார்.❗

‼ பிறரின் மான, மரியாதையோடு விளையாடுவதென்றால் எந்த அளவுக்கு மனம் வலிக்கும் என்பதை உணர செய்வதற்காக கூட அல்லாஹ் சையது இப்ராஹிமுக்கு இந்த நிலையை வழங்கியிருக்கலாம். 

☠ ஆனால் இன்றும் தவறை உணராமல் ஆணவமாக உள்ள சையது இப்ராஹிமுக்கு ததஜவின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு கிடைத்தால் அவரும் பக்குவப்பட மாட்டார். மேலும் பலரின் மான, மரியாதையை சாதாரணமாக நாறடிக்கும் சுபாவத்திலிருந்து விடுபடவும் மாட்டார். ☠

💀💀 தே.... புகழ் விவாதத்திலிருந்து இன்று வரை நார், நார், டார், டார் என பக்குவமின்றி பேசி திரிகிறார். இவருக்கு ததஜ வலுவான பின்னணியில் இருப்பதால் தான் இப்படி குதிக்கிறார். 💀💀

‼ அல்தாபி, செங்கிஸ்கான், ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், கொள்கை சொந்தங்கள் என அனைவரிடமும் சையது இப்ராஹிம் கேட்ட உதட்டளவிலான மன்னிப்பு பிஜேவிடம் சென்று மண்டியிட்டதற்கு ஒப்பானது. பதவியும் உதவியும் பெற பல்லிழித்து பாசாங்கு செய்வதாக கருதவே அதிகம் வாய்ப்புள்ளது. ‼

‼🤷🏻‍♂‼ உழைக்காமல் உடம்பை வளைக்காமல் ததஜ மூலமாக ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை (Luxury Life) வாழ்ந்தவரால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலவில்லை. இனி இவரால் கடலை மிட்டாய், முறுக்கெல்லாம் விற்க முடியாது. ததஜவின் தற்போதைய பரிதாப நிலையை பயன்படுத்தி தம்மை பெரிய ஜாம்பவானாக காட்டி தலைமையில் தஞ்சம் புக பார்க்கிறார். ‼🤷🏻‍♂‼

✅ "ஒரு மூமீன் இரண்டு முறை குட்டுப்பட மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ✅

‼❗ எனவே சையது இப்ராஹிமை சில வருடங்களாவது தனித்து விட்டு இயக்க அநாதையாக்குவதே அவரின் இம்மை, மறுமைக்கும் நம் சமூகத்திற்கும் பலனுள்ளதாக அமையும். ❗‼

❗🧠 அதை விடுத்து, தொலைநோக்கு சிந்தனை இல்லாமல், பக்குவமோ அனுபவமோ இல்லாமல் பிஜேவின் தொடர் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சையது இப்ராஹிமை களத்தில் இறக்க ததஜ தலைமை நினைத்தால் கொள்ளிக்கட்டை எடுத்து தலையை சொறிவதற்கு சமம். எதிர்காலத்தில் படுபயங்கரமான விளைவுகளை ததஜ சந்திக்க நேரிடும். இது ஆருடம் அல்ல, அனுபவம்.

🔯 அமெரிக்கா, இஸ்ரேலை உருவாக்கியது போல் ததஜ சையது இப்ராஹிமை உருவாக்க விரும்பினால் - பாம்புக்கு பால் வார்த்தால் சையது இப்ராஹிம் தலைமைக்கு செய்த மேலும் பல விபரீதங்களை ஆதாரத்துடன் உரித்துக் காட்டுவோம். 🔯

💪🏻 உதாரணம்: கடந்த ஜனவரி 27 விழுப்புரம் ததஜ மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ததஜவுக்கு எதிராக சையது இப்ராஹிம் செய்தது என்ன என்பது உட்பட அனைத்தையும் சாட்சிகளுடன் அம்பலப்படுத்துவோம்.

😱 ததஜ தலைமை தனது நிலைப்பாட்டை அறிவிக்குமா? அல்லது வழக்கம் போல் மயான அமைதியை தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம். 😱

💥❗குறிப்பு: ததஜ தலைமையின் மயான அமைதியும் தலைமைக்கு எதிராகவே திரும்பும். பகிரங்க அறிவிப்பு செய்யாவிட்டால் ததஜவும் சையது இப்ராஹிமும் கள்ள கூட்டணி அமைத்து விட்டதாகவே பலரும் கருதுவர். ஏனெனில் ததஜ ஹிக்மத் செய்வதில் கைதேர்ந்தது என்பது தான் அனைவரின் மதிப்பீடாகும். ❗💥

Saturday, February 02, 2019

மௌலவி காஜா முகையத்தீன் பாகவியின்நழுவல் பேச்சு! - மஹ்ழரி உலமாக்கள் சங்கமம்

மௌலவி காஜா முகையத்தீன் பாகவி‌ சாதாரணமான ஒருவர் அல்ல!  தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் .! ஆவார்.
சாதாரணமான.ஒருவரைப்போல் அவர் பேசக்கூடாது.அவரின்‌ பேச்சும்,தீர்ப்பும்;அங்கீகாரமும் மார்க்கத்தின் தீர்ப்பாகவே பார்க்கப்படும்.

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்.அதனால் ஷரீஅத்தின் காவலர்களாக இருக்கின்றனர்.

ஷரீஅத்தின் காவர்கள் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் , முன்மாதிரியிலும் வீரர்களாக இருக்க வேண்டும்.
சாதாரணபாமரன்உலமாக்களை.வெளிப்படையாகவேபார்த்து அவர்களைப் பின்பற்றுகின்றான்.

அதனால்.உலமாக்களின்செயற்பாடுகள்களங்கமில்லாமலும், வெளிப்படைத்தன்மையானசத்தியத்தைபறைசாற்றுவதாகவும் அமைதல் வேண்டும். 

ஈமான், இஸ்லாம்; இஹ்ஸான் உள்ளிட்ட மூன்றும் சேர்ந்ததுதான்.மார்க்கம்.என்று.வாய்ப்பேச்சாக.அன்றி எதார்த்தமாகப்பேசவேண்டும். 

உலமாக்கள் மேடைகளில் மட்டும் வாய்ச்சொல் வீரர்களாக மாத்திரம் இராமல் நடத்தையிலும் 
துணிவானசெயல் வீரர்களாகவும் இருக்க வேண்டும்.

சாதாரணமான ஓர் ஆலிமின்  ஒழுக்கமும் கடமையும் இதுவானால்
உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் உலகத்திற்கும்  பொறுப்பு வாய்ந்தவராக வலம் வருகிறார்.

அதனால், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

எடுப்பார்  கைப்பிள்ளையாக செயல் படக்கூடாது.



தற்காலத்தில் மார்க்கம் முதலீடில்லாத , பெரும் முயற்ச்சியும் செய்யாமல் அதிக இலாபம் தரும் வருவாய்த்துறையாக மாறிவிட்டது.

இதனால் உலமாக்கள் தங்களை சினிமாவின் பாணியில் உள்ளவர்களை போன்று தங்களை மாற்றி விட்டனர்.

சினிமாத்துறையில் உள்ள நடிகர்கள் எழுதிக் கொடுக்கின்ற கதையைப் பாடமாக்கி,  கொடுக்கின்ற பாத்திரத்திற்கேற்றவாறு திறமையாக நடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.

தற்கால உலமாக்களில் அநேகர் இவ்வாறே கொடுக்கின்ற தலைப்பில் பேசி ஏற்பாட்டாளர்களையும், சபையோர்கள் மற்றும் ரசிகர்களையும்திருப்திப்படுத்தி  தனது நிலையைத் தக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர்.

மார்க்கம் மேடைப் பேச்சோடு இப்போது முடங்கி விட்டது.

மேடை.யும் பணமும் இல்லையாயின் மார்க்கம் பிரச்சாரம் மௌனித்து விடும் என்ற நிலையில்தான் இப்போது  தஃவாக்களம் பரிதாபமாக மாறியுள்ளது.


 மேடைப் பிரச்சாரத்தில் களைகட்டி நிற்கும் பலர் பணத்திற்காக எவ்வாறெல்லாம் தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்பதற்கு அண்மைக்காலத்தில் இலங்கையில் அரங்கேறிய சில அனுபவங்களை உதாரணமாகக் கொள்ள முடியும்.

1- சில ஆண்டுகளுக்கு முன்காத்தான்குடியில் மௌலவி அப்துர்ற ஊப் மிஸ்பாஹி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில்  காஜா முகையத்தீன். பாகவியும் இன்னும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

மௌலவி அப்துர் ற ஊபை பாராட்டியும்  ஸூபிஸ உலமா சபையை புதிதாக உருவாக்கி அதற்கு மௌலவி அப்துர் ற ஊபைத்தலைவராகவும் ஆக்கினார்.

இதே காஜா‌முகையத்தீன் பாகவி சில வாரங்களுக்கு முன் கல்முனையில் நடந்த. ற ஊப் மௌலவிக்கெதிரான கூட்டத்தில் கலந்து ஏற்பாட்டாளர்களுக்கேற்றார் போல்  பேசியுள்ளார்.

மௌலவி அப்துர் ரஹ்மான் ஊப் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கின்றார்.காபிர்களும் அல்லாஹ்வை நம்பியமுஃமின்கள்தான்என்கின்றார்.

படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ்தான் என்கின்றார்.இதுபோன்ற ஷரீஅத்திற்கு விரோதமான பலகருத்துக்களை. பல்லாண்டுகளாக பேசி வருகிறார். 

இவையனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டே அவர் மாநாட்டில் கலந்து உரைநிகழ்த்தியவர்தான் இப்போது அவருக்கான எதிர் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இவ்வாறு.

எல்லாமும் நல்லதுதான். இந்து மதமும்அல்லாஹ்வழங்கிய மதம்தான். புத்தரும், கிறிஷ்ணனுன்,ராமனும் நபிமார்கள் என்றும்,

தான் இறைவனின் அவதாரம் அச்சு என்றும் பிரபஞ்சத்தைத்தான் அல்லாஹ் என்கின்றோம் என்றும் இன்னும் இதுவல்லாத பல டசின் குப்றியத்துக்களைக் கூறிவரும் கலீல் அவுன் மௌலாவை ஆதரித்து அவர் வீட்டில் நடக்கும் கூட்டத்திலும் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

இவ்வாறே தேவ் பந்தி குருமார்களை வழிகேடர்கள் என்றும்,காபிர்கள் என்றும் உரத்துக் கூறுகின்றவர்களின் கூட்டங்களில் உரை நிகழ்த்திக் கொண்டே

 தேவ்பந்திகளின் கூட்டங்களிலும் கூச்சமில்லாமல் வலம் வருகின்றார்.

இவரைப் போன்று ஷேக் அப்துல்லா ஜமாலி ,ஸைபுத்தீன்றஷாதி,சதீதுத்தீன் பாகவி; அபுத்தாஹிர் பாகவி உள்ளிட்டோரும் வலம் வருகின்றனர்.

எதிரும் புதிருமான இருகூட்டத்தாருக்கும் ஏக காலத்தில் சமனாக முகம் காட்டி இருதரப்பாரின் பாராட்டையும் பெறும் திறமை பழுத்த அரசியல் வாதியால் கூட சாதிக்க முடியாது.

சினிமாவில் உள்ள திறமையான நடிகர்களுக்கு இணையாக  செயல்படும் திறமை யாருக்கு வரும் ?

இவர்கள் தானா நபிமார்களின் வாரிசுகள்?

இவர்களால் இஸ்லாம் சிறப்போங்குமா? சீரழியுமா?

அறிவுள்ள முஃமீன்களே! சிந்தியுங்கள்!

தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொள்வது ஹலால் ஹராம் சார்ந்தது அல்ல! என்று த.மா. ஜ. உலமா சபைத்தலைவரின் கூற்றுஉண்மைதான்.

நாங்களும் அதைத்தான் கூறுகிறோம். 

தப்லீக் ஜமாஅத்தினரை
பிரச்சினைக்காக ஹலால் ஹராம் பிரச்சனைக்காக யாரும் எதிர்க்கவில்லை வில்லை

ஹலால் ஹராம் பிரச்சனையால் ஒருவர் ஈமானை இழக்க மாட்டார்.

ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர் ஈமானை இழந்துள்ளனர்.

அப்படியாயின்,

மௌலவி காஜா பாகவியின் கருத்துப்படி

ஹலால் ,ஹறாம் பிரச்சினை இருந்தால் அங்கே கலந்து கொள்ளக் கூடாது .

குப்று,ஷிர்க்கு, நயவஞ்சகம் இருக்கும் இடத்தில் கலந்து கொள்ளலாம்.

ஹலால்,ஹறாம் வெளிப்படையானது.

ஈமான்,குப்று, நயவஞ்சகம்
அந்தரங்கமானது.

அதனால்தான் சமுகத்தில் திறமையாக இவர்களால் நடிக்க முடிகின்றது.

இந்த நடிகர்களின் திறமையால் படித்தவர்களும் பாமரர்களும்  ஈமானை இழந்துதவிக்கின்றனர்.

இப்படியான நடிகர்கள் திலங்களை இனம்கண்டு சமுகம் விளிப்படைந்தால் மட்டுமே இஸ்லாமும் முஸ்லிம்களும்  கௌரவத்தோடும் மானத்தோடும் வாழ முடியும்.

நன்றி  காசிம் மஹ்ழரி +91 9843660115