Saturday, February 02, 2019

மௌலவி காஜா முகையத்தீன் பாகவியின்நழுவல் பேச்சு! - மஹ்ழரி உலமாக்கள் சங்கமம்

மௌலவி காஜா முகையத்தீன் பாகவி‌ சாதாரணமான ஒருவர் அல்ல!  தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் .! ஆவார்.
சாதாரணமான.ஒருவரைப்போல் அவர் பேசக்கூடாது.அவரின்‌ பேச்சும்,தீர்ப்பும்;அங்கீகாரமும் மார்க்கத்தின் தீர்ப்பாகவே பார்க்கப்படும்.

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்.அதனால் ஷரீஅத்தின் காவலர்களாக இருக்கின்றனர்.

ஷரீஅத்தின் காவர்கள் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் , முன்மாதிரியிலும் வீரர்களாக இருக்க வேண்டும்.
சாதாரணபாமரன்உலமாக்களை.வெளிப்படையாகவேபார்த்து அவர்களைப் பின்பற்றுகின்றான்.

அதனால்.உலமாக்களின்செயற்பாடுகள்களங்கமில்லாமலும், வெளிப்படைத்தன்மையானசத்தியத்தைபறைசாற்றுவதாகவும் அமைதல் வேண்டும். 

ஈமான், இஸ்லாம்; இஹ்ஸான் உள்ளிட்ட மூன்றும் சேர்ந்ததுதான்.மார்க்கம்.என்று.வாய்ப்பேச்சாக.அன்றி எதார்த்தமாகப்பேசவேண்டும். 

உலமாக்கள் மேடைகளில் மட்டும் வாய்ச்சொல் வீரர்களாக மாத்திரம் இராமல் நடத்தையிலும் 
துணிவானசெயல் வீரர்களாகவும் இருக்க வேண்டும்.

சாதாரணமான ஓர் ஆலிமின்  ஒழுக்கமும் கடமையும் இதுவானால்
உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் உலகத்திற்கும்  பொறுப்பு வாய்ந்தவராக வலம் வருகிறார்.

அதனால், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

எடுப்பார்  கைப்பிள்ளையாக செயல் படக்கூடாது.



தற்காலத்தில் மார்க்கம் முதலீடில்லாத , பெரும் முயற்ச்சியும் செய்யாமல் அதிக இலாபம் தரும் வருவாய்த்துறையாக மாறிவிட்டது.

இதனால் உலமாக்கள் தங்களை சினிமாவின் பாணியில் உள்ளவர்களை போன்று தங்களை மாற்றி விட்டனர்.

சினிமாத்துறையில் உள்ள நடிகர்கள் எழுதிக் கொடுக்கின்ற கதையைப் பாடமாக்கி,  கொடுக்கின்ற பாத்திரத்திற்கேற்றவாறு திறமையாக நடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.

தற்கால உலமாக்களில் அநேகர் இவ்வாறே கொடுக்கின்ற தலைப்பில் பேசி ஏற்பாட்டாளர்களையும், சபையோர்கள் மற்றும் ரசிகர்களையும்திருப்திப்படுத்தி  தனது நிலையைத் தக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர்.

மார்க்கம் மேடைப் பேச்சோடு இப்போது முடங்கி விட்டது.

மேடை.யும் பணமும் இல்லையாயின் மார்க்கம் பிரச்சாரம் மௌனித்து விடும் என்ற நிலையில்தான் இப்போது  தஃவாக்களம் பரிதாபமாக மாறியுள்ளது.


 மேடைப் பிரச்சாரத்தில் களைகட்டி நிற்கும் பலர் பணத்திற்காக எவ்வாறெல்லாம் தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்பதற்கு அண்மைக்காலத்தில் இலங்கையில் அரங்கேறிய சில அனுபவங்களை உதாரணமாகக் கொள்ள முடியும்.

1- சில ஆண்டுகளுக்கு முன்காத்தான்குடியில் மௌலவி அப்துர்ற ஊப் மிஸ்பாஹி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில்  காஜா முகையத்தீன். பாகவியும் இன்னும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

மௌலவி அப்துர் ற ஊபை பாராட்டியும்  ஸூபிஸ உலமா சபையை புதிதாக உருவாக்கி அதற்கு மௌலவி அப்துர் ற ஊபைத்தலைவராகவும் ஆக்கினார்.

இதே காஜா‌முகையத்தீன் பாகவி சில வாரங்களுக்கு முன் கல்முனையில் நடந்த. ற ஊப் மௌலவிக்கெதிரான கூட்டத்தில் கலந்து ஏற்பாட்டாளர்களுக்கேற்றார் போல்  பேசியுள்ளார்.

மௌலவி அப்துர் ரஹ்மான் ஊப் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கின்றார்.காபிர்களும் அல்லாஹ்வை நம்பியமுஃமின்கள்தான்என்கின்றார்.

படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ்தான் என்கின்றார்.இதுபோன்ற ஷரீஅத்திற்கு விரோதமான பலகருத்துக்களை. பல்லாண்டுகளாக பேசி வருகிறார். 

இவையனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டே அவர் மாநாட்டில் கலந்து உரைநிகழ்த்தியவர்தான் இப்போது அவருக்கான எதிர் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இவ்வாறு.

எல்லாமும் நல்லதுதான். இந்து மதமும்அல்லாஹ்வழங்கிய மதம்தான். புத்தரும், கிறிஷ்ணனுன்,ராமனும் நபிமார்கள் என்றும்,

தான் இறைவனின் அவதாரம் அச்சு என்றும் பிரபஞ்சத்தைத்தான் அல்லாஹ் என்கின்றோம் என்றும் இன்னும் இதுவல்லாத பல டசின் குப்றியத்துக்களைக் கூறிவரும் கலீல் அவுன் மௌலாவை ஆதரித்து அவர் வீட்டில் நடக்கும் கூட்டத்திலும் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

இவ்வாறே தேவ் பந்தி குருமார்களை வழிகேடர்கள் என்றும்,காபிர்கள் என்றும் உரத்துக் கூறுகின்றவர்களின் கூட்டங்களில் உரை நிகழ்த்திக் கொண்டே

 தேவ்பந்திகளின் கூட்டங்களிலும் கூச்சமில்லாமல் வலம் வருகின்றார்.

இவரைப் போன்று ஷேக் அப்துல்லா ஜமாலி ,ஸைபுத்தீன்றஷாதி,சதீதுத்தீன் பாகவி; அபுத்தாஹிர் பாகவி உள்ளிட்டோரும் வலம் வருகின்றனர்.

எதிரும் புதிருமான இருகூட்டத்தாருக்கும் ஏக காலத்தில் சமனாக முகம் காட்டி இருதரப்பாரின் பாராட்டையும் பெறும் திறமை பழுத்த அரசியல் வாதியால் கூட சாதிக்க முடியாது.

சினிமாவில் உள்ள திறமையான நடிகர்களுக்கு இணையாக  செயல்படும் திறமை யாருக்கு வரும் ?

இவர்கள் தானா நபிமார்களின் வாரிசுகள்?

இவர்களால் இஸ்லாம் சிறப்போங்குமா? சீரழியுமா?

அறிவுள்ள முஃமீன்களே! சிந்தியுங்கள்!

தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொள்வது ஹலால் ஹராம் சார்ந்தது அல்ல! என்று த.மா. ஜ. உலமா சபைத்தலைவரின் கூற்றுஉண்மைதான்.

நாங்களும் அதைத்தான் கூறுகிறோம். 

தப்லீக் ஜமாஅத்தினரை
பிரச்சினைக்காக ஹலால் ஹராம் பிரச்சனைக்காக யாரும் எதிர்க்கவில்லை வில்லை

ஹலால் ஹராம் பிரச்சனையால் ஒருவர் ஈமானை இழக்க மாட்டார்.

ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர் ஈமானை இழந்துள்ளனர்.

அப்படியாயின்,

மௌலவி காஜா பாகவியின் கருத்துப்படி

ஹலால் ,ஹறாம் பிரச்சினை இருந்தால் அங்கே கலந்து கொள்ளக் கூடாது .

குப்று,ஷிர்க்கு, நயவஞ்சகம் இருக்கும் இடத்தில் கலந்து கொள்ளலாம்.

ஹலால்,ஹறாம் வெளிப்படையானது.

ஈமான்,குப்று, நயவஞ்சகம்
அந்தரங்கமானது.

அதனால்தான் சமுகத்தில் திறமையாக இவர்களால் நடிக்க முடிகின்றது.

இந்த நடிகர்களின் திறமையால் படித்தவர்களும் பாமரர்களும்  ஈமானை இழந்துதவிக்கின்றனர்.

இப்படியான நடிகர்கள் திலங்களை இனம்கண்டு சமுகம் விளிப்படைந்தால் மட்டுமே இஸ்லாமும் முஸ்லிம்களும்  கௌரவத்தோடும் மானத்தோடும் வாழ முடியும்.

நன்றி  காசிம் மஹ்ழரி +91 9843660115

No comments: