Tuesday, July 18, 2006

இதைச் செய்தவன் முஸ்லிமா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18-07-2006
ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள்?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்லாஹ்வையோ ரசூலையோ ஈமான் (நம்பிக்கை) கொள்ளாத யாரோ ஒருவன் இஸ்லாத்தை விமர்சிக்கிறான். அப்படிப்பட்டவன் அவனது கூற்றுக்கு ஆதாரமாக நம்முடைய எழுத்தையும் எடுத்துக் கொண்டான். இதையொட்டி கண்ணியத்திற்குரிய சகோதரர்களில் சிலர் வருத்தப்பட்டு கடிதம் எழுதி இருந்தனர். அல்லாஹ்வை நம்புகிறோம். அவனது தூதரை நம்புகிறோம். என்று சொன்னால் போதுமா? அல்லாஹ்வும் அவனது தூதருமா இந்த மாதிரி அநியாயம் செய்யச் சொன்னார்கள்.

இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அநியாயமாக பொய் சொல்பவனுக்கும் அநியாயமாக பொய் சாட்சி சொல்லுபவனுக்கும் பெயர்தான் முஸ்லிமா? சமாதானம் செய்து வைக்கும் நல்ல நோக்கிலோ, நிர்ப்பந்தத்திலோ பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அந்த பொய் அநியாயமானதாக பிறரை பாதிக்கும்படியானதாக இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது.

நேசகுமார் என்பவன் அல்லாஹ்வையும் ரசூலையும் தீவிரவாதிகள் போல் கிண்டல் செய்து மண்டை ஓடுகளுடன் கார்டூன் போட்டிருந்தான். அது பற்றி கடந்த மாதம் எல்லாருக்கும் மெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும்படி எழுதி இருந்தோம். ரசிகவ் ஞானியார் என்ற ஒருவரைத் தவிர வேறு யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை. அவன் கார்டூன் போடுகிறான் என்பதற்காக அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அது போல இந்த மாதிரி தீவைத்து தெரியும் தீவட்டி தடியன்களை, குட்டி ஷய்த்தாகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

நேசகுமார் என்பவனுக்கு http://kirukku.blogspot.com/2005_05_01_kirukku_archive.html என்ற நிறைய கேள்விகளும் விமர்சனங்களும் உள்ளன. அதற்கு பதில் சொல்லாமல் இஸ்லாத்தின் மீது அவன் புழுதி வாரி வீசுகிறான். ஆதமுடைய மக்களில் அவனும் ஒருவன் என்ற முறையில் அவனுக்கு நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

சமீபத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்கள் வீட்டில் தீ வைக்கப்பட்ட செய்தியை நமது என்ற http://mdfazlulilahi.blogspot.com/ பிளாக்கில் வெளியிட்டிருந்தோம். பத்திரிக்கையில் வந்துள்ள அவர் குடியிருக்கும் வீட்டின் போட்டோவையும் த.மு.மு.க. மாநில செயலாளர் என்ற பொறுப்பையும் வைத்துக் கொண்டுதான் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பற்றி பொது மக்கள் பெரிதாக கணக்கிட்டுள்ளார்கள். ரிபாஈ அவர்களின் உண்மையான பொருளாதார நிலை என்ன? என்பது யாருக்கும் தெரியாது. காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எவனோ ஒரு அயோக்கியனின் தூண்டுதலில் யாரோ ஒருவர் பார்சல் குண்டுகள் அனுப்பினார். அதில் அநியாயமாக கைது செய்யப்பட்டவர் காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக இருந்த மவுலவி ஜே.எஸ். ரிபாஈ. 06-09-1995 புதனன்று கைது செய்யப்பட்டவர் 90 நாட்களுக்குப் பிறகு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாகை கோர்ட் ஜாமீன் கொடுத்த மறு நிமிடமே நாகப்பட்டிணம் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.

90 நாட்களுக்குப் பிறகு விடுதலை கனவோடு இருந்தவருக்கு மீண்டும் சிறைவாசம் அழைத்துக் கொண்டது. இதை ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த கஷ;டமும் நஷ;டமும் தெரியும். உள்ளம் கனத்து கண்கள் குளமாவது புரியும். இறையருளால் அடுத்த 90 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். ஆக 180 நாட்கள் சிறையிலிருந்தார். இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.
மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

இந்தச் செயலை எந்த தெரு நாய் தூண்டி விட்டதோ, அந்த தெரு நாய் மாடியில் உல்லாச வாழ்வு வாழ்கிறது. சம்பந்மில்லாத அப்பாவி ரிபாஈ 11 வருடங்களாக நெல்லை – நாகை, நெல்லை- சென்னை என கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் வேலை வாய்ப்பை இழந்தார். வேலை வாய்ப்பை இழந்த அவருக்கு அவரது சகோதரர்கள்தான் உதவியாக இருந்து வருகிறார்கள். அவரது பொருளாதாரத்துக்காக ஒரு கடை வைத்துக் கொடுத்தார்கள். அது நன்றாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

அவரது பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் பணியில் த.மு.மு.க. மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் முழுமையாக ஈடு பட்டார்கள். அப்போது மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த ரிபாஈ அவர்களும் தன்னை பிரச்சாரப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அவரது கடையை அவரால் சரியாக கவனிக்க முடிந்ததில்லை. இழப்பு ஏற்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

பத்திரிக்கையில் வந்துள்ள ரிபாஈ குடியிருக்கும் வீட்டின் போட்டோவை பார்த்து விட்டு ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பலர் பலமானதாக எடை போட்டுள்ளனர். அது ரிபாஈ அவர்களின் சொந்த வீடு கிடையாது. ரிபாஈ அவர்களுக்கு சொந்தமாக வீடும் கிடையாது. குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கும் அவரது தம்பியின் வீட்டில்தான் ரிபாஈ குடி இருக்கிறார். சமூக விரோதிகள் தீ வைத்ததால் எரிந்து போன மோட்டார் பைக்கும் சைக்கிளும் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு சொந்தமானதுதான். இந்த சம்பவத்தால் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது எவ்வளவு பெரிய பாதிப்பு. ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள். இந்த நிகழ்வின் நோக்கம் என்ன. ஒருவனின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தினால் அவன் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவான். இது ஷய்த்தான்களின் தலைவன் அடிக்கடி சொல்லும் தத்துவம். இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

எந்த நோக்கத்தில் நடந்தாலும் இதைச் செய்தவன் முஸ்லிமா? முஸ்லிம் பெயர் தாங்கியா? என்பதை பிறகு பார்ப்போம். இவன்களையெல்லாம் மனித இனத்தில் சேர்க்க முடியுமா? மாற்றுக் கருத்து இருந்தால் நேருக்கு நேர் பேசாமல் இந்த மாதிரி அயோக்கியத்தனம் செய்யும் தெரு நாய்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டக் கூடாதா? மவுலவி ரிபாயிக்கு ஏற்பட்டுள்ள நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? இதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள். எனவே இந்த மாதிரி ஈனத்தனமான வேலைகளை செய்து திரியும் பொறுக்கித் தெரு நாய்களை நான் தனித்து நின்றாலும் அடையாளம் காட்டாமல் விட மாட்டேன். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

அறிவுரைக்கு நன்றி.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18-07-2006

சகோதரி அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. தங்கள் அறிவுரைப்படி தொழுது துஆச் செய்கிறேன். கடைச் சூழலைப் பொறுத்து உம்ரா செல்வேன் இன்ஷh அல்லாஹ். உங்கள் அறிவுரைக்கு நன்றி.
அன்புடன்: உங்கள் சகோதரன் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

இஸ்லாமிய சகோதரியின் கடிதம்.


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மதிப்பிற்குரிய இலாஹி காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது மெயில் படித்தேன். பதில் அனுப்புவதற்கு முன் வழக்கம் போல் கம்ப்யூட்டரின் Cpuவில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. தங்களிடமிருந்து forward செய்யப்படும் மெயில்கள் சிலவற்றை printout எடுத்துப் படித்துப் பார்ப்பேன். (P.J. பற்றி வரும்விமர்சனக்கடிதங்களைத் தவிர), காரணம் தங்களது மெயிலில் பார்த்துதான் அந்த மனிதரைப் பற்றி தெரிய வண்டியதில்லை.)
தங்களது மெயிலைப் படித்த போது தங்களின் மன வருத்தம் புரிந்தது. அது மட்டுமல்ல! பல்வேறு நபர்களுக்கு நீங்கள் தரும் பதில்கள், மறுபடி அவர்கள் கொடுக்கும் கேள்வி கணைகள், பல பொய்யான குற்றச்சாட்டுகள், அதன் பின் அக்குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆதார பூர்வமாக தரும் பதில்கள் இவற்றையெல்லாம் படிக்கும் போது தங்களிடம் தான் நியாயமும் ஆதாரமும் இருப்பதாக தோன்றுவது உண்மை.
ஆனால் மேற்சொன்ன தர்க்கங்கள் தொடரும் போது (உதாரணமாக pj உடனான 'முபாஹலா' விஷயம்) மனரீதியாக நீங்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதன்பின் மனம் பலவீனம் அடையும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். உடலில் பல உபாதைகளுக்கு இத்தகைய நிலை charge ஏற்றுவது போல் இருக்கும்.

மேலும் இத்தகைய தாக்கங்கள் நாம் அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் நம்மை தூரமாக்கி விடும். தொழும் போதும் இத்தகைய நினைவுகளால் விரைவில் தொழுகையை முடிக்கத் தூண்டும். தஸ்பீஹ் செய்.ய நேரம் இருக்காது. நம்மில் பலர் சமுதாய சேவை என்ற களத்தில் இறங்கி இறை கடமைகள் பலவற்றை ஏனோதானோவென்று செயல்படுத்துவதை தற்போது காண முடிகிறது.
இதயத்தை கடினமாக்க இதை விட வேறு என்ன வேண்டும்.? எனவே காக்கா நான் தங்களுக்கு இத்தகைய குழப்பங்கள் மனச்சோர்வையும் உடல் பலஹீனத்தையும் அதிகப்படுத்தி விடுமோ என்றுதான் கவலைப்படுகிறேன்.
அதனால் இரண்டொரு மாதங்கள் எந்த சமூகப்பணியையும் மேற்கொள்ளாமல் முடிந்தால் உம்ரா செய்யுங்கள். தொழுகையில் அதிக நேரம் இறைவனிடம் முறையிடுங்கள்.
அவரவர் அள்ளிப்போடும் அவதூறுப்புழுதிகள் அவர்கள் மீதே விழுவதை காண்பீர்கள். சூழ்ச்சிக்காரர்கள் வெட்டும் குழியில் அவர்களே விழுந்து தத்தளிப்பதை நீங்களே காண்பீர்கள். ஏன்னதான் உண்மையை வெளிக்கொண்டு வர நாம் பாடுபட்டாலும் தர்க்கவாதிகள் தங்களது வாதத்திறமையால் உண்மையை பொய்என்றும் பொய்யை உண்மையென்றும் நம்ப வைத்துவடுவார்கள் என்பது நாம் அறிந்ததே!
எனவே நாம் அனைத்தையும் அறிந்த ரப்பில் ஆலமீனிடம் முறையிட்டு விடுவோம். சூழ்ச்சிக்காரர்கள் அவர்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு உண்மைகளை கக்கும் போது இலாஹி காக்கா அன்று சொன்னது உண்மையாகிவிட்டதே என சமுதாயம் உணரும் காலம் வரும். காக்கா நான் இப்படி சொல்வது தங்களுக்கு போரடிக்கலாம். ஆனாலும் எப்போதும் பலஹீனர்களாகவே உள்ள நாங்கள் எங்களது வாழ்வில்அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை இது.
எல்லாம் வல்ல அல்லாஹ் பொய்யர்களின் அவதூறுகளிலிருந்து தங்களை காப்பானாக! ஆமீன்!
வஸ்ஸலாம்
இங்ஙனம்
அன்புடன்
இஸ்லாமிய சகோதரி

Tuesday, July 11, 2006

துட்டுக்கு ஒரு கொள்கை. மேடையில் பேசுவதற்கு ஒரு கொள்கையா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
முஸ்லிம்களை 'நஜீஸாக' ஆக்கிய கூட்டம் விமான ஓடு தளத்தில் தலை வைக்குமா?
கலிமாச் சொன்ன முஸ்லிம்களில் ஒரு சாராரை காபிர்கள் என்று கூறி சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சிந்தனை தவறானது குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதை உணர்த்தி, நபி வழியா நமது பாலிஸியா, சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது கூடுமா? ஆகிய தலைப்புகளில் சரியான கருத்தை எழுதி இருந்தோம். அதில் ஆட்கள் பெயரை குறிப்பிட்டு எழுதாமல் அவர்கள் கூறி வரும் தவறான கருத்துக்களை மட்டும் விமர்சித்து எழுதி இருந்தோம். அந்த மாதிரி கருத்துக்களை கூறுபவர்களின் பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும் என சில சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டு சின்னா பின்னமாக சீரழித்து விடும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணான கருத்துக்களை மட்டும்தான் அவற்றில் அடையாளம் காட்டி விமர்சித்திருக்கிறோம். முஸ்லிம்களின் பலம் குன்றிடச் செய்திடும் இஸ்லாத்தில் இல்லாத இந்த தவறான கருத்துக்களை சமுதாயத்தில் பரவச் செய்து வருபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சித்தாலும் தவறு இல்லை. பெயர்களை குறிப்பிட்டு எழுதி அவர்கள் பரப்பி வரும் தவறான கருத்துக்களை மட்டும் விமர்சித்தாலும் ஆட்களை விமர்சித்துள்ளதாக திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது. அதனாலும் பெயர்களை தவிர்த்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த விரோத குரோதங்கள்தான்.

நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என்று சொன்னார்கள். அந்த ஒற்றுமைக்கும் குர்ஆன் ஹதீஸ்களைத்தான் ஆதாரமாகக் காட்டினார்கள். இப்பொழுது அவர்களை காபிர்கள் என்று கூறி விட்டதற்கும் அவர்களை விட்டுப் பிரிந்து தனித்து விட வேண்டும் என்று கூறி வருவதற்கும் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்துதான் ஆதாரங்களை கூறி வருகிறார்கள். எனவே இதை கொள்கை அடிப்படையிலானது என்று கூற முடியாது என்று முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு ஆதாரமாக கடந்த காலங்களில் நடந்துவிட்ட சம்பவங்களில் சிலவற்றை பட்டியலிட்டு இவற்றையெல்லாம் கொள்கைப் பிரச்சனை என்று கூற முடியுமா என்று கேட்;டிருந்தோம். கொள்கைப் பிரச்சனை அல்ல சொந்த விரோத குரோதங்கள்தான் ஒருவரை ஒருவர் பகைத்து விரோதிக்க காரணமாக இருந்தது என்பதற்குரிய ஆதாரங்களாகவே அவை இருந்தன.

சுன்னத் ஜமாஅத்தினரை இமாமாக முன்னிறுத்தி தொழக் கூடாது.

அல் குர்ஆன் 9:28 வது வசனத்தை வாதமாக எடுத்து வைத்து ஷpர்க் செய்யும் சுன்னத் ஜமாஅத்தினரை இமாமாக முன்னிறுத்தி தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். இந்த வாதம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதை நமது அடுத்தடுத்த வெளியீடுகளிலும் விளக்குவோம். அந்த வசனம் இந்த வாதத்தைத்தான் கூறுகிறதா? என்பதை இந்த வெளியீட்டிலேயே பிறகு பார்ப்போம். முன்னதாக, பல அணிகளாக ஆகிவிட்ட தவ்ஹீது அணிகளில் உள்ள ஒரு அணியின் கூட்டத்தில் இன்னொரு அணியை நோக்கி கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

பெயரை தவிர்த்து விடுவோம்.

கடந்த காலங்களில் நடந்த சம்பவம்களுக்கு கொள்கைப் பிரச்சனை காரணம் அல்ல சொந்த விரோத குரோதங்களே காரணம் என்ற நமது கருத்துக்கு வலு சேர்த்திடும் வகையில்தான் அந்த விமர்சனங்கள் உள்ளன. எனவே அவற்றை முதலில் பார்ப்போம். யாரை விமர்சித்துள்ளார்களோ அவர்களது பெயரை தவிர்த்து விடுவோம். இதில் விமர்சித்துள்ளவர் யார் என்பதை குறிப்பிடாவிட்டால் விமர்சனத்தை நாமே உண்டு பண்ணி எழுதியுள்ளதாக பரப்ப வாய்ப்பு உள்ளது. எனவே விமர்சித்து பேசியவர் யார் என்பதை அறியத் தருகிறோம். மேலப்பாளையம் ஹாமீம்புரம் மஸ்ஜித் தவ்பா கதீப் கண்ணியத்திற்குரிய காஸிம் பிர்தவ்ஸி அவர்கள்தான் அந்த விமர்சகர். அவர் ஆற்றிய உரையின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதை நாம் சி.டி.யாக ஆக்கி வெளியிட்டுள்ளோம். அந்த உரையிலிருந்து சிலவற்றைத் தருகிறோம்.

கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறேன்.

(தவ்ஹீதுவாதியாகிய) என்னை (இன்;னொரு அணியைச் சார்ந்த) தவ்ஹீதுவாதிகள்? என்போர் அடித்து விட்டார்கள். அடிபட்டவன் நான் ஆனால் அடித்தவன் உடனடியாகப் போய் தான் அடிபட்டதாக போலீஸில் பொய் கேஸ் பதிந்து விட்டான். இப்பொழுது நான் எனது வேலைகளை பார்க்க முடியாமல் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் முன் மட்டும் கைகட்டி நிற்க வேண்டிய முஸ்லிமை (என்னை) கோர்ட்டில் கைகட்டி நிற்க வைத்து விட்டார்கள்.

க்கா க்கா, தூ தூ, ஹஹ்ஹா ஹஹ்ஹா.

எதிர் அணியாக ஆகி விட்ட அந்த தவ்ஹீதுவாதிகள் என்னைப் போன்றவர்களைக் கண்டால் க்கா க்கா என்று சப்தமிட்டு காரி தூ தூ என்று துப்புகிறார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டால் ஹஹ்ஹா ஹஹ்ஹா என சப்பதமிட்டு சிரிக்கிறார்கள், விசிலடிக்கிறார்கள் (கழுதைபோல்) கனைக்கிறார்கள். ஒரு முஃமினை சிரித்த முகத்தோடு பார்ப்பது தர்மம் என்றார்கள் நபி (ஸல்) இன்று அது கூட கிடையாது. ஸலாம் சொல்வதும் இல்லை சொன்னால் பதில் சொல்வதும் இல்லை. கேட்டால் கொள்கையிலிருந்து அப்பால்பட்டவர்கள் என்கிறார்கள். என்னப்பா முஸ்லிம்கள்தானப்பா குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்கிறார்கள். அல்லாஹ்வை ஏற்று இருக்கிறார்கள். அவனது தூதரை ஏற்று இருக்கிறார்கள். பிறகு ஏன் ஸலாம் சொல்லக் கூடாது என்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் ஏற்றுள்ள கொள்கையை (தலைமையை) அவர்கள் ஏற்கவில்லை. அதனால் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனவே ஸலாம் சொல்ல மாட்டோம் என்கிறார்கள்.

பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள்.

குர்ஆன் ஹதீஸ்களை பின் பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஜும்ஆ மேடைகளில் நின்று கழிசடைகள் என்று பேசுகிறார்கள். சுன்னத் ஜமாஅத் பெண்களை கழிசடைகள்தான் திருமணம் செய்வார்கள். எங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்ட கழிசடைகள் (சுன்னத் ஜமாஅத்தாராகிய) உங்களிடம் பெண் எடுக்க தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள் என்று (ஒரு தவ்ஹீது அணியின் மாநில நிர்வாகியாக உள்ள) ஒரு தவ்ஹீது மவுலவி(?) திருமண நிகழ்ச்சியில் பேசியுள்ளார். யாரிடம் போய் தோலுக்கு நிற்கிறார்களோ, யாரிடம் போய் அஸ்ஸலாமு அலைக்கும் என்று உண்டியல் குலுக்குகிறார்களோ அவர்களைப் பார்த்து உங்களிடம் பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள் என்கிறார்.

துட்டுக்கு ஒரு கொள்கை. மேடையில் பேசுவதற்கு ஒரு கொள்கையா?

வரதட்சணை வாங்காமல் யாநபி பைத் ஓதாமல் முடிந்த வரை பித்அத்களை தவிர்த்து விட்டு கூட்டு துஆ மட்டும் ஓதப்பட்டு விட்டாலும் அந்த திருமண விருந்தை புறக்கணிப்போம் என்கிறார்கள். அவன் கபுர் வணங்கி அதனால் அவனுக்கு நரகம். அவன் முஷ;ரிக் அதனால் அவனுக்கு நரகம். அவன் காபிர் அதனால் அவனுக்கு நரகம் என்று சுன்னத் ஜமாஅத் பற்றி (அவர்களுக்கு நரகம் என்று) டிக்லர் பண்ணி விட்டார்கள் ஆனால் அவர்களால் அறுக்கப்படும் ஆடு மாடுகளின் தோல்களை தாருங்கள் என்று கேட்டு வாங்குகிறார்கள். நண்டு உறவாதாம் நண்டு சாறு மட்டும் உறவுமாம். (சரா சரா மக்ரூஹு அதன் சாற்றை கொஞ்சம் இறத்து ஊத்து) அதுபோல் இருக்கிறது இவர்களது செயல். இது என்ன கொள்கை? துட்டுக்கு ஒரு கொள்கை. மேடையில் பேசுவதற்கு ஒரு கொள்கையா? காபிர் என்று சொல்லி விட்டு அவர்கள் அறுத்ததை வாங்கி சாப்பிடலாமா?

3 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்ட தவ்ஹீதுவாதி(?)

இன்று தவ்ஹீது அணியின் மாநில பொறுப்பில் இருக்கிறார் ஒருவர். அவர் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். (நாம்தான் இதை மூடலாக எழுதுகிறோம். எந்த ஊர்க்காரர் பெண்ணிடம் எது மாதிரி நடந்து கொண்டார் என்பதை மேடையில் பகிரங்கமாக தெளிவாகவே சொல்லிக் காட்டி உள்ளார். கேஸட்டிலிருந்து கேட்டுத்தான் எழுதியுள்ளோம்.) இது பிரிவுக்கு முன்னால் நடந்த சம்பவம். இது சம்பந்தமாக கம்ளைண்ட் மாநில தலைமைக்கு வந்தது. விசாரித்ததில் சம்பந்தப்பட்ட அந்த தவ்ஹீதுவாதியே? பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளதை ஒப்புக் கொண்டு விட்டார். பிறகு நடந்த மாநில செயற்குழுவுக்கு அவர் வரவில்லை. அந்த ஊர்க்காரர்கள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தவே அவர் (2003லிருந்து) 3 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டார். இதை எல்லாரும் ஆதரித்தார்கள்

கொள்கை அடிப்படையிலான முடிவு என்பதெல்லாம் கிடையாது.

அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற விபரத்தை பத்திரிக்கையில் போட வேண்டும் என்ற கருத்து வந்தபோது கடுமையாக எதிர்த்தோம். கடைசியில் பத்திரிக்கையில் போடுவதா? வேண்டாமா? என்பதற்கு என்ன அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா? அவர் ஹாமித் பக்ரியை சந்தித்துப் பேசி (அவருடன் உறவாக) இருப்பதாகத் தெரிந்தால் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட விஷயத்தால் நீக்கப்பட்டார் என்று பத்திரிக்கையில் போட்டு விடுவோம். அவர் ஹாமித் பக்ரியை சந்திக்கவில்லை என்றால் பத்திரிக்கையில் போட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. (3 ஆண்டுகள் கழியவில்லை) இப்பொழுது அவரை சேர்த்துக் கொண்டார்கள். மாநில நிர்வாகிகளில் ஒருவராக இருக்கிறார். ஆக நியாயம் அநியாயம் என்பது கிடையாது. கொள்கை அடிப்படையிலான முடிவு என்பதும் கிடையாது என்பதற்குத்தான் இதனைச் சொல்லிக் காட்டுகிறேன்.

இனி எப்படி நம்ப முடியும்?

இந்த குற்றச்சாட்டுக்களை நாம் சொல்லவில்லை. நேற்று வரை ஒன்றாக கை கோர்த்து இருந்து ஒரே மேடையில் பேசி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே காரில் பயணித்து, ஒரே பாயில் படுத்து வந்த தவ்ஹீது அணியின் மவுலவிகளில் ஒருவரான காசிம் பிர்தவ்ஸி அவர்கள் பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் இது. பிரிவுகளுக்கு கொள்கைப் பிரச்சனை காரணம் அல்ல சொந்த விரோத குரோதங்களே காரணம் என்று நாம் எழுதியதை இவரது உரை வலு சேர்த்துள்ளது குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் தீர்வு காணாமல் ஹாமித் பக்ரியை சந்தித்தால் ஒரு தீர்வு. சந்திக்கவில்லை என்றால் வேறு தீர்வு என முடிவு எடுத்தவர்கள் கூறும் மார்க்க தீர்ப்புகளெல்லாம் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் இருக்கும் என இனி எப்படி நம்ப முடியும்? (கேஸட்டைப் பார்த்து உறுதி செய்து கொள்ள விரும்புவோர். அந்த கூட்டத்தை நடத்திய மஸ்ஜித் தக்வா ஜமாஅத்திற்கு தொடர்பு கொண்டால் வீடியோ, சி.டி. கிடைக்கலாம்.
மஸ்ஜித் தக்வா ஜமாஅத், 134.பி. அபுல்கலாம் ஆஸாத் ரோடு, மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005. இது மஸ்ஜித் தக்வா ஜமாஅத் முகவரி.)

மக்கா காபிர்கள் வழியில் விசிலடிக்கும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா?

அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாத, அந்த ஜமாஅத்தாரை பின் பற்றி தொழாதே இந்த ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழாதே என்பதை பரவ விட்டால் இனி என்ன மாதிரி எல்லாம் வரும்? அடித்து விட்டு அடித்ததாக பொய் கேஸ் பதிய சொல்லும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா? அல்லாஹ்வின் முன் மட்டும் கைகட்டி நிற்க வேண்டிய முஸ்லிம் மீது பொய் கேஸ் போட்டு மனிதர்களுக்கு முன் கைகட்டி (ஷpர்க்) வைத்த வண்ணம் நிற்க வைத்துவிட்ட ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழலாமா? ஜும்ஆ மேடைகளில் அசிங்கமாக பேசுவதை அனுமதித்து ரசிக்கும் ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழலாமா? விசிலடித்தல் என்பது மக்கா காபிர்கள் வணக்க முறையாகும் (அல்குர்ஆன் 8:35) எனவே மக்கா காபிர்கள் வழியில் பக்காவாக விசிலடிக்கும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா? என்றெல்லாம் கேள்விகள் வருமா வராதா?

கருத்து தவறானது என்றாலும் நல்லவர்கள்.

இந்த வெளியீட்டில் தவறான கருத்துக்களை மட்டும்தான் சுட்டிக் காட்டி விமர்சிப்போம்.. தவறான கருத்தை கூறியவரின் பெயரை குறிப்பிட்டு எழுதி அவர் விமர்சிக்கப்படுவது போன்ற தோற்றத்தைக் கூட ஏற்படுத்தி விட மாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம். அதே நேரத்தில் கலிமாச் சொன்னவர்களை காபிர்கள் என்று கூறுபவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்து பார்க்க முடியாது. ஒரு சாரார் தாங்கள் கூறுவது தவறுதான் என்று தெரிந்து கொண்டே இஸ்லாத்தில் ஹராமாக்கப்படாததை ஹராம்போல் வெறுத்துக் காட்டினால்தான் தமது அணியின் இமேஜ் கூடும் என்று செயல்பட்டு வருகிறார்கள். அதாவது இமேஜை கூட்டுவதற்காகவே ஹராம்போல் காட்டி வருகிறார்கள். இவ்வாறு இமேஜ் தேடும் அணியின் பெயரையோ ஆட்கள் பெயரையோ குறிப்பிட்டு எழுத மாட்டோம். இமேஜ் தேடும் இந்த அணியின் உள் நோக்கம் புரியாமல் அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று தவறாக விளங்கிக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கருத்து தவறானது என்றாலும் இவர்கள் நல்லவர்கள் என்பதை அடையாளம் காட்ட பெயரை குறிப்பிட்டே எழுதுவோம்.

ரஹ்மதுல்லாஹ் இம்தாதி.

உதாரணமாக ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களும் ஷஇன்னமல் முஷ;ரிக்கூன நஜஸுன் என்ற ஆயத்தின் அடிப்படையில் இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது என்று கூறி வருவதை அறிகிறோம். ரஹ்மதுல்லாஹ் இம்தாதியைப் பொறுத்த வரையில் மனதில் பட்டதை பேசக் கூடியவர். இந்த நற்சான்றை கண்ணியத்திற்குரிய கமாலுத்தீன் மதனி அவர்களும் பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி அவர்களும் மனம் விட்டு பேசிய 38 மவுலவிகள் கூட்டதில் கூறியுள்ளார்கள். அதில் கலந்து கொண்ட அனைத்து மவுலவிகளும் அந்த நற்சான்றை அங்கீகரித்துள்ளார்கள். நாமும் ரஹ்மதுல்லாஹ் இம்தாதியைப் பொறுத்த வரையில் மனதில் பட்டதை பேசக் கூடியவர் என்ற நல்ல எண்ணத்தில்தான் உள்ளோம். சுய நல நோக்கில் கூறப்படும் கருத்து வருவாய்க்காக கூறப்படும் கருத்து என்று விமர்சிக்கப்பட்டால் அது ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களையும் அவரைப் போன்றுள்ள நல்லவர்களையும் குறிக்காது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

தொழுதால் தொழுகை கூடுமா?

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். 'இன்னமல் முஷ;ரிக்கூன நஜஸுன்' என்ற ஆயத்தை படித்துக் காட்டி முஷ;ரிக்குகளையெல்லாம் நஜீஸ் - அசுத்தமானவர்கள் என்று அல்லாஹ் கூறி விட்டான். நமது ஆடையில் அசுத்தம் பட்டிருந்தால் அந்த அசுத்தத்துடன் தொழுவோமா? தொழுதால் தொழுகை கூடுமா? நஜீஸுடன் தொழுதால் தொழுகை கூடாது எனும்போது அல்லாஹ் நஜீஸ் என்று கூறிவிட்டவர்களை முன்னிறுத்தி தொழ முடியுமா? தொழுதால் தொழுகை கூடுமா? என்று வாதம் வைக்கிறார்கள். சுன்னத் ஜமாஅத்தினரை முன்னிறுத்தி தொழக் கூடாது என்பதற்கு அல் குர்ஆன் 9:28 வது வசனத்தின் நேரடியான அர்த்தத்தை ஆதாரமாகக் காட்டவில்லை, காட்ட முடியாது. எனவே விளக்கம் என்ற பெயரில் வாதம்தான் வைக்கிறார்கள். அந்த வாதத்தைத்தான் ஆதாரம் போல் காட்டி சுன்னத் ஜமாஅத்தினரை முன்னிறுத்தி தொழக் கூடாது என்கிறார்கள். அந்த ஆயத்து கூறும் நேரடி அர்த்தம் இது அல்ல. அவர்கள் கூறும் வாதப்படி (ஆதாரப்படி அல்ல) இதுதான் அர்த்தம் என்றால் அந்த வாதத்தின் அடிப்படையிலும் அவர்கள் கூறும் கருத்தும் தவறானதே.

ஒட்டி உரசி நின்று தொழுதால் தொழுகை கூடுமா?

ஒருவர் தொழும் இடம் சுத்தமாக இருக்கிறது. அவருக்கு முன்னால் 'நஜீஸ்' இருக்கிறது. இப்பொழுது அவரது தொழுகை கூடுமா கூடாதா? என்றால் கூடும் என்பார்கள். அந்த 'நஜீஸ்' அவர் மீது பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதாவது நஜீஸுடன் ஒட்டி உரசி நின்று தொழுதால் தொழுகை கூடுமா? என்றால் நிச்சயமாகக் கூடாது என்பார்கள். இவர்கள் யாரை ஷநஜீஸ் என்று கூறி முன் வைத்து தொழக் கூடாது. தொழுதால் தொழுகை கூடாது என்கிறார்களோ, அவர்களை பக்கத்தில் நிறுத்தி தொழுதால் அவர்கள் வாதப்படி பக்கத்தில் நிற்பவர்கள் தொழுகைதான் கூடாது.

அவர்கள் வாதப்படி முஷ;ரிக்குகளான நஜீஸ்களா.

எனவே இந்த ஆயத்தை கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஆயத்தை எழுதிப் போட்டு இந்த ஆயத்து அடிப்டையில் அவர்கள் யாரையெல்லாம் நஜீஸ் என்கிறார்களோ அவர்களையெல்லாம் தங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்குள் நுழைய விட மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். 4 மத்ஹபுகளை பின் பற்றாதவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று போர்டு வைத்த மாதிரி வெறும் போர்டுகளுடன் நிற்கக் கூடாது. இவர்கள் நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரக் கூடியவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி முஸ்லிம்களா அல்லது அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதப்படி முஷ;ரிக்குகளான நஜீஸ்களா என செக் பண்ணி உள்ளே விட வேண்டும். அப்படி செய்வார்களா? செய்கிறார்களா இல்லை. இதை கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள்.

அது மாதிரிதான் இதுவும் என்பதில் சந்தேகம் இல்லை.

குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணான சட்டத்தை சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் கூறிவிட்டார்கள் என்று கூறி அவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் - கேவலப்படுத்தினார்கள். அதில் ஒன்றுதானே மவுலவிகளின் வருவாய் நோக்கில் கூறப்பட்ட சுய நல சட்டம் என்ற விமர்சனம். அப்படியானால் இதை தவ்ஹீது இமாம்கள் வருவாய் நோக்கில் கூறப்பட்ட சுய நல சட்டம் என்றுதானே விமர்சிக்க வேண்டும். இவர்கள் யாரை நஜீஸ் என்கிறார்களோ அவர்கள் பள்ளிக்கு வந்தால்தான் உண்டியல் நிறையும். எனவே அவர்களை தடுக்க மாட்டார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். இது துட்டுக்கு ஒரு கொள்கை. மேடைப் பேச்சுக்கு ஒரு கொள்கை என்றார்களே அது மாதிரிதான் இதுவும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சொல்லலாம் அல்லவா.

எப்படி கொள்கை முடிவு என கூற முடியும்.

அல் குர்ஆன் 9:28 வசனத்தின் மூலம் இடப்படும் நேரடியான கட்டளையே முஷ;ரிக்குகள் மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது என்பதுதான். அது எந்த முஷ;ரிக்குகள் பற்றி கூறுகிறது என்பதை பிறகு பார்ப்போம். அந்த ஆயத்தில் மற்ற பள்ளிகள் பற்றி கூறவில்லை. 'இன்னமல் முஷ;ரிகூன நஜஸுன்' என கூறிவிட்டு 'பலா யக்ரபுல் மஸ்ஜிதல் ஹராம' என்றுதான் அதன் தொடரே உள்ளது. (கஃபாவை உள்ளடக்கி இருக்கும் மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதல் ஹராமை' நெருங்கக் கூடாது என்றுதான் கட்டளை இடப்பட்டுள்ளது. எனவே நேரடி கட்டளையை கண்டு கொள்ளாமல். அவர்கள் மக்கா செல்வதை தடுக்காமல். வருவாய் தரும் இமாமத் பணிக்கு மட்டும் 'ஹராம்' என்பதும் உண்டியலில் காசு போட வரும் மஃமூம்களாக வரலாம் என்பதுமான இந்த நிலையை எப்படி கொள்கை முடிவு என கூற முடியும்.

விமான மறியல்.

அதில் கூறப்பட்டுள்ள நஜீஸ் என்பது இவர்கள் கூறும் பின்பற்ற முடியாத சுன்னத் ஜமாஅத்தினருக்கு என்றால், அதை இவர்கள் கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அவர்களை மக்கா செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவரை அதைச் செய்யவில்லை. அவ்வப்போது உம்ரா செல்கின்ற செய்திகள் கிடைக்காமல் போகலாம். ஹஜ்ஜுக்கு செல்வது பகிரங்கமானது. டிசம்பர் 6 போராட்டத்தை விட இதுக்குத்தான் இந்த கருத்துடையவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமானம் ஓடு தளத்தில் போய் படுத்துக் கொண்டு விமான மறியல் செய்தாவது அவர்களது இந்த கொள்கையை உலகறியச் செய்திருக்க வேண்டும். வருமான நோக்கில் சொல்லாமல் கொள்கை அடிப்படையில் சொல்லி இருந்தால் இதைச் செய்திருப்பார்கள். முஸ்லிம்களை 'நஜீஸாக' ஆக்கிய கூட்டம் விமான ஓடு தளத்தில் இனியாவது தலை வைக்குமா?

ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள்.

அங்கு (இந்துக்களிடம்) சப்பரம், இங்கு பஞ்சா. அங்கு தேர், இங்கு சந்தனக் கூடு. அங்கு துவஜா ரோகணம் எனும் கொடி ஏற்றம் இங்கும் கொடி ஏற்றம். அங்கும் உண்டியல் இங்கும் உண்டியல் வசூல். இந்த உண்டியல் வசூல் ஒளிக்கப்பட்டு விட்டால் ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள். கடவுளை வணங்கச் சென்றால் காணிக்கை செலுத்த வேண்டும் என்பது மாற்று மத கலாச்சாரம். இது முஸ்லிம்களிடமும் புகுந்து விட்டது. உண்டியல் கலாச்சாரம் இன்று பள்ளிவாசல்களையும் ஆக்ரமித்து வருகிறது. தொழுகைக்கு வந்தவர்களிடம் தொழுத பின் செய்யப்படும் வசூல் கடவுளை வணங்கி விட்டு காணிக்கை செலுத்தப்படும் கலாச்சாரத்தை ஒட்டியதாகவே இருக்கிறது.

இவர்களுக்கான வசூலை நிறுத்தி விட்டால்.

பள்ளிவாசல் நிர்வாகச் செலவுக்கு என்றால் மஹல்லாவாசிகளிடம் போய் கேளுங்கள். அல்லது மஹல்லாவாசிகள் அல்லாஹ்வுடைய பள்ளிக்கு என்று நிர்வாகிகளை தேடி வந்து தரட்டும். இது தவ்ஹீது மவுலவிகள் என்போர் 1986ல் ஆரம்ப காலகட்டத்தில் செய்த பிரச்சாரமாகும். இதில் குறிப்பாக வசூல் ஒளிக்கப்பட்டு விட்டால் ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள் என்று அன்று கூறியதை ஒவ்வொரு நிர்வாகிகளும் இன்று நினைவுபடுத்தி இவர்களுக்கான வசூலை நிறுத்தி விடவேண்டும். இவர்களுக்கான வசூலை நிறுத்தி விட்டால் இந்த ஹக்குதாரர்களும் அல் குர்ஆன் 9:28 வசனத்திற்குரிய ஹக்கான விளக்கத்தைச் சொல்லி விடுவார்கள் அப்படித்தானே.

அவர்கள் வாதப்படி அந்த திருமணங்களின் நிலை என்ன?

இந்த ஆயத்து அடிப்படையில் சுன்னத் ஜமாஅத் பெண்களை தவ்ஹீதுவாதிகள் என்போர் திருமணம் செய்யக் கூடாது என்றால் ஏற்கனவே திருமணம் செய்து விட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள். இவர்கள் வாதப்படி அவர்கள் காபிர்கள் என்றால் அவர்களுடன் நடத்துவது இல்லறமா? வேறு எதுவுமா? தவ்ஹீதுவாதி என்று சொன்னால் பெண் தர மாட்டேன் என்று சொன்ன காலம் இருந்தது. அப்பொழுது திருமணம் செய்த தவ்ஹீது மவுலவிகள் என்போர் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாத லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூட சொல்லத் தெரியாத பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் வாதப்படி அந்த திருமணங்களின் நிலை என்ன? இவர்கள் கூற்றுப்படி புதிதாக ஒருவர் தவ்ஹீதுவாதியாக ஆகிறார் என்றால் கலிமாச் சொல்லித்தான் சேர்ப்பார்களா? ஏற்கனவே சேர்ந்தவர்களை கலிமாச் சொல்லித்தான் சேர்த்தார்களா? புதிதாக சேர்ந்தவரின் மனைவி மாறவில்லை பழைய கொள்கையில்தான் உள்ளார் என்றால் தலாக் சொல்லச் சொல்வார்களா?

அல்லாஹ் நஜீஸ் என குறிப்பிட்டுள்ளது யாரை?.

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்ல (ஏற்க) மறுத்து இஸ்லாத்தை நிராகரித்தவர்கள். தங்களுக்கு தாங்களே காபிர்கள் என சாட்சி கூறி இணைவைப்பாளர்களாக முஷ;ரிக்குகளாக ஆகிவிட்டவர்கள் அன்றைய மக்காவாசிகள். அல்லாஹ்வை மறுத்து விட்ட அந்த முஷ;ரிக்குகளைத்தான் அந்த ஆயத்தில் நஜீஸ் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது கஃபாவை நிர்வகித்து வந்த காபிரான அந்த முஷ;ரிக்களுக்கு கஃபாவை நிர்வகிக்கும் தகுதி கிடையாது என்பதை அதற்கு முந்தைய ஆயத்துகளான 9:17,18,19 ஆகியவற்றில் தொடராக குறிப்பிட்டுள்ளான். அந்த தொடரில்தான் இந்த ஆண்டுக்குப் பின் மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது என்று கட்டளை இட்டு அவர்களை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ் யாரை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான்? லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லாது அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது நிராகரித்து காபிராகி விட்டவர்களைத்தான் நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான். இதற்கு 9:28 ஆயத்தின் முன் பின்னுள்ள ஆயத்துகளே தெளிவான ஆதாரங்களாக உள்ளன.

ஒரே வசனத்திற்கு 2 வித விளக்கம் கூறி வரும் நிலை.

தாங்கள் கூறி விட்ட பொய்களை உண்மைப்படுத்த ஆடியோ வீடியோக்களில் முன்பின் எடிட் செய்து தங்கள் வாதத்தை நிலை நிறுத்தியவர்கள் குர்ஆனிலும் முன்பின் எடிட் செய்ய துணிந்து விட்டனர். உண்மைக்குப் புறம்பான எடிட்டர்களை கண் மூடித்தனமாக பின் பற்றுபவர்கள் இந்த வாதத்தை ஏற்கலாம். சிந்திக்கக் கூடிய முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள். அல் குர்ஆன் 9:28வது வசனத்தை குறிப்பிட்டு, ''முஸ்லிம் அல்லாதவர்களை மக்கா பள்ளிக்கு செல்ல ஏன் அனுமதிப்பது இல்லை'' என்று இந்து சகோதரர்கள் கேட்டார்கள். உடனே உங்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்களிலுள்ள சுன்னத் ஜமாஅத்தினரையும்தான் குறிக்கும் என்றா பதில் சொன்னார்கள். அவர்களின் இந்த வாதம் உண்மை என்றால் இப்படித்தான் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஒரே வசனத்திற்கு இந்துக்களிடம் ஒரு விதமாகவும் முஸ்லிம்களிடம் வேறு விதமாகவும் விளக்கம் கூறி வருகிறார்கள். ஒரே வசனத்திற்கு 2 விதமான விளக்கம் கூறி வரும் நிலையே அவர்களை அடையாளம் காட்டி விடுகிறது.

காரணங்களை இட்டுக் கட்டி கூறுகிறார்கள்.

அல் குர்ஆன் 9:28வது வசனத்தில் கூறப்பட்டுள்ள தெளிவான நேரடி கட்டளையை முஸ்லிம் அல்லாதவர்களிடம் சொல்லத் தயங்குகிறார்கள். அவர்களை சமாளித்து திருப்திபடுத்தும் விதமாக விளக்கம் என்ற பெயரில் காரணங்களை இட்டுக் கட்டி கூறி வருகிறார்கள். இட்டுக் கட்டிக் கூறிடும் இவர்களது செயலை நியாயப்படுத்த இந்த வசனம் கூறும் உண்மையைச் சொல்லி விட்டால் மனித நேயமற்ற செயல் என்று சொல்லி விடக் கூடும் என்று காரணமும் கற்பிக்கிறார்கள். கடவுள் விஷயத்தில் ஒரே கொள்கை உடைய மனிதர்;களில் ஒரு சாராரை மட்டும் மூலம் வரை அனுமதித்து மற்ற சாரார் செல்லக் கூடாது என்று தடுத்து பாகுபடுத்தும் சித்தாந்தம்தான் மனித நேயத்திற்கு எதிரானது. இறைவன் ஒருவனே அந்த இறைவன் அல்லாஹ்தான் என்ற உண்மையை ஏற்றுள்ள மனிதர்கள் அனைவரும் இங்கு சமமாக நடத்தப்படுகிறார்கள். எனவே இதில் மனித நேயம் என்ற பிரச்சனைக்கே இடமில்லை.

பொய்களைப் புனைந்து கூறுவது ஏன்?

வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நிராகரித்து விட்டவர்கள். தாங்கள் விரும்பியதையெல்லாம் கடவுள்களாக ஆக்கி வணங்கி பல தெய்வ கொள்கை உடையவர்களாக ஆகி விட்டவர்கள். கொள்கை அடிப்படையில் அசுத்தமானவர்கள். அதனால்தான் அல்லாஹ்வை வணங்க முதன் முதலில் கட்டப்பட்ட பைத்துல்லாஹ்வாகிய (அதாவது அல்லாஹ்வின் வீடாகிய) அந்தப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்பது அவன் இட்ட கட்டளை. இந்த உண்மையை போட்டு உடைக்காமல் பொய்களைப் புனைந்து கூறுவது ஏன்? அங்கே புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது போன்ற விதிகள் உள்ளன. இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால்தான் கடைப்பிடிக்க இயலும் என்று தவறான விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன? அல்லாஹ் கூறியுள்ள காரணத்தை ஏன் மறைக்க வேண்டும்?

ஏன் இப்படி குழப்ப வேண்டும்?

கேள்வி கேட்பவர்கள் தன் முகம் டி.வி.யில் வரவேண்டும் என்ற நோக்கில் கேட்பவராகவும் சிந்தனை திறன் இல்லாதவராகவும் உள்ளதால் தலையாட்டி விட்டுப் போகிறார்கள். கேள்வி கேட்பவர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால், நோன்பு மாதத்தில் பகலில் பகிரங்கமாக உண்ணக் கூடாது பருகக் கூடாது என்ற சிறப்பு சட்டங்கள் அரபு நாடுகளில் உள்ளன. அங்கு பணிக்கு சென்றுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த சிறப்பு விதிகளை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். சிறப்பு விதிகளை மக்காவுக்கு செல்லும் முஸ்லிம்களுக்கு சொல்கிற மாதிரி எங்களுக்கும் சொல்லுங்கள் கடைப்பிடிப்போம் என்று கூறி இருப்பார்கள். புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பது நிரந்தரச் சட்டமா? இஹ்ராம் ஆகி விட்டவர்கள் இஹ்ராம் நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமா? ஏன் இப்படி குழப்ப வேண்டும்?

உண்மைக் காரணத்தை சொல்ல பயந்து.

இந்த ஆயத்தில் அல்லாஹ் யாரை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளானோ அவர்களை நஜீஸ் என கூற தெம்பு இல்லாதவர்கள். என்ன காரணம் கூறி தனது இல்லத்திற்கு வரக் கூடாது என்று அல்லாஹ்வே சொல்லி உள்ளானோ அந்த உண்மைக் காரணத்தை சொல்ல பயந்து இல்லாததை சொல்லி வருபவர்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லிவிட்ட முஸ்லிம்களில் ஒரு சாராரைப் பார்த்து காபிர், நஜீஸ் என கூறி வருகிறார்கள். அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்றும் பத்வா வழங்கி வருகிறார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் பின் நின்று தொழக் கூடாது என்பதற்கு இன்னும் என்ன என்ன ஆயத்து ஹதீஸ்களை கூறி வாதம் வைத்துள்ளார்கள் என்பதையும் அந்த வாதங்கள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதையும் அடுத்தடுத்த வெளியீகளில் பார்ப்போம் இன்ஷh அல்லாஹ்.

முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள்.

இஸ்லாம் எளிமையானது அதை கடினப்படுத்தி விட்டார்கள். இஸ்லாம் தூய்மையானது அதை களங்கப்படுத்தி விட்டார்கள். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை. இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளை உண்டு பண்ணி முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள். எனவே இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புதியவைகளை நீக்கி விட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டி முஸ்லிம்களை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் தங்கள் சொந்த விரோத குரோதங்களால் ஏற்பட்ட பகைமையை தீர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் பெயரால் இன்னும் பல பிரிவுகளை உண்டு பண்ணி முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் உண்டு பண்ணிவிட்ட பிளவுகளை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கு தகுந்தவாறு வளைத்து விளக்கம் கூற வசதியான ஆயத்து ஹதீஸ்களை தேடி அலைகிறார்கள். அது மாதிரியான ஆயத்து ஹதீஸ்களை தேடிப் பிடித்து வளைத்து விளக்கம் கூறி வருகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாத சட்டங்களை உருவாக்கி அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறாத புதியவைகளை நுழைத்து இஸ்லாத்தை கடினமானதாக ஆக்கி களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்பொழுது இவர்களிடமிருந்துதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்ட வேண்டிய கட்டாயமான கால கட்டத்தில் உள்ளோம். வஸ்ஸலாம்

வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

Monday, July 10, 2006

சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நபி வழியா? நமது பாலிஸியா?

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்த ஆக்கம் இறையச்சம் உடையவர்களால் மட்டுமே ஜீரணிக்க முடியும் என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம். நமது சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒற்றுமை, பிளவுகள் ஏன்? ஒன்றுபட என்ன வழி? இப்படி ஏதாவது ஒரு தலைப்பில் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறும் ஒற்றுமை பற்றி எழுதுமாறு பல சகோதரர்கள் வற்புறுத்தினார்கள். நாம் அவற்றை தலைப்பாகக் கொண்டு எழுத விரும்பவில்லை. காரணம், பிரிவுகளை தவிர்க்க என்ன வழி? ஒற்றுமையின் அவசியம் ஒன்றுபடுவது எப்படி? என்பது பற்றியெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் ஆய்வுரைகளையும் ஆக்கங்களையும் தந்தவர்களே பிளவுகளுக்கு காரணமாக இருந்து பல பிரிவுகளை உண்டு பண்ணி விட்டனர். எனவே அந்த தலைப்பில் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள். அந்த அளவக்கு ஒற்றுமை சம்பந்தமான தலைப்புகள் மீது சமுதாய மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. எனவே நபி வழியா நமது பாலிஸயா? என்ற தலைப்பை நாம் தேர்வு செய்துள்ளோம்.

இரண்டு முனாபிக்குகளும் சமமானவர்களா?

முனாபிக்குகள் என்றால் யார்? என்பது பற்றி விளக்கம் தரும் ஹதீஸ்களை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே முனாபிக்குகள் என்றால் யார்? என்ற விரிவான விளக்கம் தேவை இல்லை. இன்று நமது சமுதாயத்தில் முனாபிக்குகள் இருப்பதுபோல் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் முனாபிக்குகள் இருந்தார்கள். இந்த இரண்டு முனாபிக்குகளும் சமமானவர்களா? என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். முனாபிக்குகளின் அடையாளங்களில் ஒன்றான பேசினால் பொய்யே பேசுவான் என்ற முனாபிக்குகளின் பண்புப்படி இன்றைய முனாபிக்குகளின் பொய்யும் அன்றைய முனாபிக்குகளின் பொய்யும் சமமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய முனாபிக்குகளின் பொய்யும் அன்றைய முனாபிக்குகளின பொய்யும்.

இன்று நம் சமுதாயத்தில் உள்ள முனாபிக்குகள் அவர்களின் பண்புப்படி மற்ற மற்ற விஷயங்களில் பொய் சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வுடைய விஷயத்திலும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய விஷயத்திலும் பொய் சாட்சி சொல்வதில்லை. லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை உண்மையிலேயே நம்பி மனதால் ஏற்று ஈமான் கொண்டுள்ள முஸ்லிம்கள்தான் இன்று நம் சமுதாயத்தில் உள்ள முனாபிக்குகள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகளின் பொய் எப்படிப்பட்டதாக இருந்தது? லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற கலிமாப்படி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மனதால் நம்பி ஈமான் கொள்ளாமல் நாங்களும் ஈமான் கொண்டுள்ள முஸ்லிம்கள்தான் என்ற பொய்யைச் சொன்னார்கள்.

அன்றைய முனாபிக்குகள் பற்றி அல்லாஹ்.

தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது வாய்களால் கூறினர். 3:167, நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்ற உள்ளான். 4:142 தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம் நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை அஞ்சுகின்றனர். 9:64, ''அல்லாஹ்வையும் இத்தூதரையும் நம்பினோம், கட்டுப்பட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 24:47, நம்பிக்கை கொண்டோரை சந்திக்கும்போது நாங்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது ஷய்த்தான்களுடன் தனித்திருக்கும்போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே .. என்கின்றனர் 2:14. இதுபோன்று இன்னுமுள்ள பல வசனங்களும் ஹதீஸ்களும் நபி(ஸல்) காலத்து முனாபிக்குகளை அதாவது முஸ்லிம்களாக நடித்த காபிர்களை அடையாளம் காட்டுகின்றன.

குராபிகள், முகல்லிதுகள்.

நபி வழியே நல் வழி அவ்வழியே நம் வழி என பிரச்சாரத்தை துவங்கிய நாம் நபி வழி என்ன நம் நிலை என்ன? என்பதை மேற்கண்ட ஆயத்து ஹதீஸ்களுடன் உரசிப்பார்க்க வேண்டும். தர்கா, தரீகாக் கொள்கைகளை மார்க்கம் என நம்பி செயல்பட்ட முஸ்லிம்களுக்கு குராபிகள் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தோம். மத்ஹபு கொள்கை உடையவர்களை முகல்லிதுகள் தக்லீது பேர்வழிகள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்று விமர்சித்து நம்மை நபி வழி நடப்போராக பிரகடனப்படுத்தினோம்.

பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.

நாம் சிறுபான்மையாக இருந்தபோது பள்ளிக்கு வரக் கூடாது என்று தீர்மானம் போட்டு அவர்கள் நம்மை தடுத்தார்கள். அப்பொழுது அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:114 என்ற ஆயத்தைக் கூறி பழமைவாய்ந்த அந்த பள்ளிகளில் அவர்களது பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம். பிறகு சற்று வலிமை ஏற்பட்டதும் தவ்ஹீது பள்ளிகள் எனும் பெயரில் தனிப்பள்ளிகள் கட்டினோம். அல்லாஹ்வோ, ஷபள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன என்று 72:18 வசனத்தில் கூறுகிறான். நாமோ, தனிப்பள்ளிகள் கட்டும் வரை எந்த பள்ளிகளில் நின்று தொழ உரிமை கோரி போராடி வந்தோமோ அந்த பழமைவாய்ந்த பள்ளிகளை குராபி பள்ளிகள் என்று பெயர் சூட்டி புறக்கணித்தோம்.

இணை வைக்கும் இமாம்கள்.

தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழலாமா? என்ற சர்ச்சையை கிளப்பி நமக்குள்ளேயே கூடும் என்று ஒரு அணியும் கூடாது என்று ஒரு அணியும் ஆனது. தொழக் கூடாது என்ற முடிவை எடுத்தவர்கள் தர்கா, தரீகா கொள்கை உடையவர்கள் இணை வைப்பவர்களே. எனவே அவர்களை பின்பற்றி தொழக் கூடாது. அதாவது இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழக் கூடாது. மத்ஹபு கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழலாம் என்று அறிவித்தார்கள். அடுத்து மத்ஹபுகாரன் பின்னால் நின்று தொழலாமா? என்ற சார்ச்சை வந்து அதிலும் 2 அணி ஆனது. மத்ஹபுகளும் பித்அத்துகள்தான். பித்அத்காரனின் அமல்கள் யாவும் பாழாகி விடும் என ஹதீஸ் உள்ளது. எனவே பாழாகி விடும் அமலைச் செய்பவன் பின் நின்று தொழக் கூடாது. குர்ஆன் ஹதீஸ்கள் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கை உடையவர்கள் பின்னால்தான் தொழ வேண்டும் என்றார்கள்.

அந்த பள்ளிகளுக்கு போகாதே.

குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கை உடையவர்களிடையே ஏற்பட்ட மனக் கசப்புகள் பிளவுளாக ஆகி பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் மனக்கசப்புகளின் காரணமாக ஒரு சாராரின் பொறுப்பில் உள்ள பள்ளிகளுக்கு போகாமல் தவிர்த்து வந்தார்கள். பிறகு போகாதே என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தவ்ஹீது ஜமாஅத்தினர் என்று ஆகி அதில் பல பரிவுகளாக ஆகி விட்டாலும் அடிப்படைக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் என்றுதான் அனைவரும் கூறுகிறார்கள். எனவே சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் உள்ள இமாம்களை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு கொள்கைப் பிரச்சனைகளை காரணமாக காட்டியவர்களால், தங்களுக்கு பிடிக்காத தவ்ஹீது ஜமாஅத் பள்ளிகளுக்கு போகக் கூடாது என்பதற்கு கொள்கைப் பிரச்சனையை காரணமாக கூற முடியவில்லை. எனவே சொந்த விவகாரங்களைக் கூறி அந்த பள்ளிகளுக்கு போகக் கூடாது என்பதை ஒரு பாலிஸியாக வைத்திருக்கிறோம். இது நமது பாலிஸி என்கிறார்கள்.

குர்ஆன் ஹதீஸை நிலை நாட்டவா? நமது பாலிஸியை நிலை நாட்டவா?

பிரிந்து சென்று தனிப்பள்ளிகள் கட்டக் கூடாது என்றவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி பெறமாட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள் நிலை என்ன? கட்டப்பட்ட தனிப் பள்ளிகளை வெளிநாட்டு நிறுவனங்களின் உதவி பெற்று கட்டப்பட்ட பள்ளிகளை அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கைப்பற்றினார்கள். பிறகு இதிலிருந்து தனிப்பள்ளி கூடாது என்றார்கள். இப்படி பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் நிலை என்ன? அடமான இடத்தை பள்ளியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தலைமையோ தங்கள் தனித்தன்மையைக் காட்ட வாடகை கட்டிடத்தில் தனி ஜும்ஆ நடத்தி வருகிறார்கள். இவை எல்லாம் எதற்காக? குர்ஆன் ஹதீஸை நிலை நாட்டவா? அவர்களின் நமது பாலிஸியை நிலை நாட்டவா?

இணை வைக்கும் பெண்கள்.

தர்காக்காரன் பள்ளிக்கு போகாதே என்று ஆரம்பித்து மத்ஹபுகாரன் பள்ளிக்கும் போகாதே என்றவர்கள் தவ்ஹீதுகாரன் பள்ளிக்கும் போகாதே என்று கூறிவிட்டார்கள். நமது பாலிஸியை நிலை நாட்ட நமது ஆபீஸில் நடக்கும் தொழுகைக்கு மட்டும் வா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதுமாதிரி சுன்னத் ஜமாஅத்திலுள்ள பெண்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் தர்காக்களுக்குச் செல்வதன் மூலம் இணை வைப்பவர்களாக ஆகி விட்டார்கள். எனவே 2:221 வது வசனப்படி சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்பதை மார்க்க அடிப்படையில் கூறுவதாகச் சொன்னார்கள்.

சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது.

2:221வது வசனம் அல்லாஹ் ரசூலை ஏற்காது ஈமான் கொள்ளாது கலிமாச் சொல்லாது நிராகரித்த முஷ;ரிக்கீன்களான காபிர்களைப் பற்றித்தான் சொல்கிறது. சுன்னத் ஜமாஅத்தவர்கள் அல்லாஹ் ரசூலை ஏற்று ஈமான் கொண்டு கலிமாச் சொன்ன முஸ்லிம்கள். இதைச் சுட்டிக் காட்டினால், மக்கா காபிர்கள் சிலைகளை நாங்கள் கடவுள் என்று சொல்லவில்லை. சிலைகளாக உள்ள அந்த பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்றுதான் சொன்னார்கள். இதனால்தான் அல்லாஹ் அவர்களை முஷ;ரிக்குகள் என்று 10:18வது வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். சுன்னத் ஜமாஅத்தினரும் தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்று சொல்வதால் அவர்களும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாக - முஷ;ரிக்களாக ஆகி விட்டார்கள் எனவே 2:221வது வசனப்படி சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்றார்கள்.

யூத, கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்யலாம்.

தர்கா, சடங்கு போன்ற செயல்களால் சுன்னத் ஜமாஅத் பெண்களை முஷ;ரிக் ஆகி விட்டார்கள் என்று கூறி, அவர்களை திருமணம் செய்யக் கூடாது என்கிறீர்கள். அப்படிச் சொல்லும் நீங்கள்தான் யூத கிறிஸ்தவ பெண்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் திருமணம் செய்யலாம் என்று கூறுகிறீர்கள். சுன்னத் ஜமாஅத்தினரோ அல்லாஹ் அல்லாத எவரையும் கடவுள் என்று சொல்லவில்லை. தர்காக்களில் அடங்கப்பட்டுள்ளவர்களை அவ்லியாவுல்லாக்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர அல்லாக்கள் என்று யாரும் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கொள்கையைச் சொல்கிறார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனை வேதமாகவும் ஏற்க மறுத்து பொய்ப்பிக்கிறார்கள். அந்த யூத, கிறிஸ்தவ பெண்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் திருமணம் செய்யலாம் என்று கூறுகிறீர்கள்.

நாங்கள் இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கிறோம்.

அல்லாஹ்வை கடவுளாகவும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் திருக்குர்ஆனை வேதமாகவும் ஏற்று ஈமான் கொண்டு கலிமாச் சொன்ன முஸ்லிம் பெண்கள் அறியாமல் செய்யும் தவறுகளுக்காக அவர்களை திருமணம் செய்யக் கூடாது என்ற உங்களின் கூற்று யூத, கிறிஸ்தவ பெண்கள் விஷயத்தில் உள்ள உங்கள் கூற்றுடன் முரண்படுகிறது. எனவே சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்பதற்கு சரியான ஆதாரம் வேண்டும் என்று கேட்டால், தவ்ஹீது பெண்கள் நிறைய தேங்கி விடுவதால் நாங்கள் இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கிறோம் என்கிறார்கள். தங்கள் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கு தக்கவாறு ஆயத்து ஹதீஸ்களை வளைத்துக் கூறுவது கொள்கைப் பிரச்சனைகள் பெயரால் புதிய அமைப்புகள் துவங்குபவர்களின் பாலிஸியாக ஆகிவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

வேறு என்ன நோக்கம் இருக்க முடியம்?

சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்று சொன்னவர்கள் அத்தோடு நின்றார்களா? தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் நாங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் படித்தவர்களாக இருக்க வேண்டும். நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த திருமணங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் என்றார்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இப்படி ஒரு பாலிஸியை நாங்கள் வைத்திருக்கிறோம் இது நமது பாலிஸி என்கிறார்கள். இந்த பாலிஸியின் நோக்கம் என்ன? அப்பொழுதுதான் நமது பாலிஸியினர் நடத்தும் பெண்கள் மதரஸாவுக்கு மாணவிகள் சேருவார்கள். அதை வைத்து நமது பாலிஸி அமைப்பில் உள்ள உஸ்தாதுகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இதைத் தவிர இதில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியம்?

இந்த நமது பாலிஸி எங்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது?

ஏதாவது ஒரு திருமண வீடு கிடைக்காதா? அதை ஒட்டியாவது நபி வழியில் மார்க்கத்தை சொல்லலாமே என்று நபி வழியை நிலை நாட்ட பாடுபட்ட உண்மையான கொள்கைவாதிகளை ஓரங்கட்டினார்கள். எனவே நமது பாலிஸியை நிலை நாட்டி வாழ்வை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நமது கல்லூரியில் பயிலாத பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் என்ற இந்த நமது பாலிஸி எங்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது? ஜாக் கல்லூரியில் பயின்ற பெண்கள் திருமணத்திற்கு நாங்கள் வர மாட்டோம். நிக்காஹ் புத்தகம் தர மாட்டோம் என்ற ஜாஹிலிய்யா செயலில்தான் கொண்டு போய் சேர்த்துள்ளது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) காலத்து முனாபிக்குகள் பற்றி மீண்டும் சிந்திப்போம்.

முஸ்லிம்களோடு முஸ்லிம்களாக.

உள்ளத்தால் ஈமான் கொள்ளாது நடிப்பவர்களை நாம் என்ன சொல்வோம். காபிர்கள் என்றுதானே சொல்வோம். உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல் வார்த்தைகளால் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த காலத்து முனாபிக்குகளை அதாவது அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்த (காபிர்)களின் உள்ளத்தை ஊடுருவி நன்கறிந்தவன் அல்லாஹ். அந்த அல்லாஹ், இவர்கள் முஸ்லிம்களாக நடிக்கும் முனாபிக்குகள் ஜமாஅத் தொழுகையை தவற விட்டவர்கள் இவர்களைப் பற்றி அறியாமல் 2வது ஜமாஅத்தாக இவர்கள் பின்னால் நின்று தொழுது விடக்கூடாது என்று கூறினானா? ஈமான் கொள்ளாது முஸ்லிம்கள் போல் நடித்தவர்களை பெயர் வாரியாக அடையாளம் காட்டினானா? உள்ளத்தால் ஈமான் கொள்ளாது நடித்தவர்களை முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு நீக்கி விடும்படியோ அல்லது அவர்களை விட்டும் முஸ்லிம்கள் நீங்கி விடும்படியோ வஹி தொடர்புடைய தனது நபிக்கு கட்டளை இட்டானா? இல்லை. வெளிப்பார்வைக்கு முஸ்லிம்களாக காட்டிக் கொண்ட அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வந்து முஸ்லிம்களோடு முஸ்லிம்களாக நின்று தொழக்கூடிய உரிமையுடன்தான்; இருந்துள்ளார்கள். இதை ''அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேரிகளாகவும் மக்களுக்கு காட்டுவோராகவும் நிற்கின்றனர்..'' 4:142 என்ற வசனத்தின் மூலம் அறிகிறோம்.

மற்றவர்களின் பார்வையில் முஸ்லிம்கள்.

முஸ்லிம்களாக நடித்த இந்த முனாபிக்குகள் பிரித்து ஒதுக்கப்படாமல் போர்க்களங்களுக்கு கூட அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம். முனாபிக்குகளை அடையாளம் காட்டுங்கள் அவர்கள் தலையை சீவி விடுகிறேன் என நபி(ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கொதித்தெழுந்து கேட்டார்கள் என்ற சம்பவத்தை அறிந்திருக்கிறோம். அதற்கு உடனே நபி(ஸல்) அவர்கள், பெயர் வாரியாக அடையாளம் காட்டி வெட்டி விட சொன்னார்களா? அவர்களை விட்டு விலகி தனித்து இருக்கச் சொன்னார்களா? அல்லது அவர்களை தனிமைப்படுத்தச் சொன்னார்களா? இறைத் தூதர் முஹம்மது நபி நபி(ஸல்) என்ன பதில். சொன்னார்கள்? அவர்கள் நமது பார்வையில் முனாபிக்குகள். மற்றவர்களின் பார்வையில் முஸ்லிம்கள். அவர்களை நாம் வெட்டினால் முஸ்லிம்களை முஸ்லிம்கள் வெட்டிவிட்டார்கள் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விடுகிறார்கள். இந்த ஹதீஸை சிந்தித்தால் உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல் வாயால் மட்டும் கலிமாச் சொல்லி இருந்தவர்களைக் கூட நபி (ஸல்) பிரித்துக் காட்டவில்லை. பிரித்துக் காட்டி இருந்தால், எதிரிகளின் பார்வையில் பிளவுபட்டு பலஹீனப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த படிப்பினையைத்தான் இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. இறையச்சமுடையவர்கள் இந்த ஹதீஸின் மூலம் இந்த படிப்பினையைத்தான் பெறுவார்கள்.

பிரிவுகளாக ஆகி சிதறி கிடக்கிறோம்.

தர்கா, தரீகாக் கொள்கைகளை மார்க்கம் என நம்பி செயல்பட்ட முஸ்லிம்களிருந்து நம்மை பிரித்துக் காட்ட நமக்கு தவ்ஹீதுவாதிகள் என அடையாளம் இட்டோம். அவர்களுக்கு குராபிகள் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தோம். மார்க்க மஸாயில்களில் சிறந்த ஆய்வுகளைத் தந்த அறிஞர் பெருமக்களை இமாம்களாக ஏற்று செயல்பட்டவர்களை பிரித்துக் காட்ட அவர்களுக்கு முகல்லிதுகள் தக்லீது பேர்வழிகள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் என்ற பட்டப் பெயர் சூட்டினோம். நம்மை நபி வழி நடப்போராக பிரகடனப்படுத்தினோம். முஸ்லிம்களுக்கு மத்தியில் அல்லாஹ்வோ அவனது தூதரோ பிரித்துக் காட்டி ஒதுக்காத இந்த மாதிரியான செயலை தவ்ஹீதின் பெயரால் பிரித்துக் காட்ட ஆரம்பித்தோம். அதன் விளைவு தவ்ஹீது ஜமாஅத்களின் பெயராலும் ஏராளமான பிரிவுகளாக ஆகி சிதறி கிடக்கச் செய்து விட்டோம். அதன் மூலம் முஸ்லிம்களின் ஜமாஅத்தை, வலிமையை பலவீனப்படச் செய்தவர்களாகவும் ஆகி இருக்கிறோம்.

வெறித்தனமான ஆலிம்களை எந்த மத்ஹபுகளிலாவது காண முடியுமா?

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறி 1100 ஆண்டுகளாக உள்ள 4 மத்ஹபுகளை நபி வழி என்ற ஒரே மத்ஹபாக ஆக்கப்போகிறோம் என்றோம். 20 ஆண்டுகளில் 40 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறோம். மத்ஹபு, தர்கா, தரீகாக் கொள்கை உடையவர்களை விமர்சிக்கும்போது மத்ஹபு வெறி பிடித்தவர்கள், தர்கா வெறி பிடித்தவர்கள் என்று விமர்சித்தோம். ஒரு மத்ஹபில் உள்ள மார்க்க பிரச்சாரகரை பேச கூப்பிட்டால் நீ வேறு மத்ஹபுக்காரன் அதனால் நான் வரமாட்டேன். உங்கள் ஊரில் நான் சார்ந்துள்ள மத்ஹபு அமைப்பை ஏற்படுத்து. இல்லாவிட்டால் நான் பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என்று சொன்ன கீழ்தரமான பிரச்சாரகர்கள் எந்த மத்ஹபுகளிலாவது இருக்கிறார்களா? எங்கள் மத்ஹபு பெயரால் கூட்டம் போடு என்று மத்ஹபு வெறி பிடித்துக் கூறிய கீழ்த்தரமான மவுலவிகளை எந்த மத்ஹபுகளிலாவது பார்க்க முடியுமா? அந்த மத்ஹபு ஆலிம் பேச வருவதால் எங்கள் மத்ஹபு ஆலிம்கள் பேச வரமாட்டோம் எனக் கூறிய வெறித்தனமான ஆலிம்களை எந்த மத்ஹபுகளிலாவது காண முடியுமா? அந்த மத்ஹபு பிரச்சாரகர்களை கூப்பிடாதே. இந்த மத்ஹபு பிரச்சாரகர்களை கூப்பிடாதே என்று சொன்ன மட்ட ரகமான கேடுகெட்ட பிரச்சாரகர்கள் எந்த மத்ஹபுகளிலாவது இருக்கிறார்களா?

இறையச்சமுடையவர்களாக இருந்தால் சிந்தியுங்கள்.

எங்கள் அமைப்பை உங்கள் ஊரில் பார்ம் பண்ணினால்தான் நாங்கள் பேச வருவோம். எங்களை பேச அழைத்தால் அவர்களை அழைக்கக் கூடாது. அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம் என்ற நிலைக்கு போய் விட்டவர்கள் யார்? குர்ஆன் ஹதீஸ்களை நிலை நாட்ட புறப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த நிலையில் உள்ளார்கள். எந்த முடிவு எடுத்தாலும்; குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் அவர்களிடம், அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம். அடுத்த அமைப்பின் பேனரின் கீழ் பேச மாட்டோம் என்கிறீர்களே, எந்த ஆயத்து ஹதீஸ்களின் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்? ஆதாரம் கூறுங்கள் என்று கேட்டால். இப்படி ஒரு பாலிஸியை நாங்கள் வைத்திருக்கிறோம் இது நமது பாலிஸி என்கிறார்கள். நபி வழியா நமது பாலிஸியா என்றால் இங்கு நபி வழி தூக்கி வீசப்பட்டு நமது பாலிஸி நிலை நிறுத்தப்படுகிறது. இது பவாவமா இல்லையா? இந்த மாதிரி பாவமான காரியத்தை செய்து வரும் அமைப்புக்கு ஆதரவளித்தால் இந்த பாவத்தில் பங்கு உண்டா? இல்லையா? இறையச்சமுடையவர்களாக இருந்தால் சிந்தியுங்கள். அல்லாஹ்வின் தண்டனைகளுக்குப் பயந்து திருந்துங்கள்.

இதுவே ஒற்றுமைக்கான சரியான வழி.

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்முதுர்ரசூலுல்லாஹ் என்று கலிமாச் சொல்லி விட்டால் அவர் முஸ்லிம். ஷஹக்குல் முஸ்லிம் அலல் முஸ்லிம் சித்துன் என்ற ஹதீஸ்படி முஸ்லிம்களுக்குரிய அத்தனை உரிமைகளுக்கும் சொந்தக்காராக ஆகி விடுகிறார். இந்த அடிப்படையில் கலிமாச் சொன்ன ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காகவும் பாடுபட்டுக் கொண்டு அவர்களிடம் ஏற்படும் தவறுகளின் பெயரால் பிரித்துக் காட்டாமல் முறையான உபதேசம் செய்யும் ஜமாஅத்துதான் முஸ்லிம்களின் ஜமாஅத். முஸ்லிம்கள் இருக்க வேண்டிய ஜமாஅத். நபி(ஸல்) அவர்கள் வழியில் உள்ள ஜமாஅத். எனவே பிரிவினைகளை விரும்பாதவர்கள். ஒற்றுமையை விரும்பக் கூடியவர்கள் இப்படி நபி வழியில் உள்ள ஜமாஅத்தை தெளிவாக தெரிந்து கொண்டால் கொள்கையின் பெயரால் முஸ்லிம்களை கூறு போட்டு சமுதாய ஒற்றுமையை குலைத்து. சமுதாய வலிமையை பலவீனப்படுத்திடும் தீய சக்திகளிடமிருந்து மீண்டு ஒற்றுமையாக வாழலாம். இதுவே ஒற்றுமைக்கான சரியான வழி. முஸ்லிம்களை மார்க்கத்தின் பெயரால் பிளவுபடுத்தி முஸ்லிம்களின் ஜமாஅத்களை பலவீனப்படுத்திடும் iஷத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக ஆமீன்.

அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.

புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா?


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது கூடுமா?

தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழக் கூடாது. சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது. நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள் என்பன போன்ற நூதன பிரச்சாரங்கள் பற்றி நபி வழியா? நமது பாலிஸியா? ஏன்ற தலைப்பில் நமது கருத்தை வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்டிருந்த அந்த ஆக்கம் முஸ்லிம்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் முஸ்லிம்கள் என்று சொல்வதில் தங்களுக்கு பெருமை இல்லை என்று கருதக் கூடிய சிலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அந்த விமர்சனங்கள் 4 வகையாக உள்ளன.
1. கடுமையான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டுள்ளது.
2. பெயர் குறிப்பிடபடாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது.
3.தனிப்பள்ளி என்று மேலப்பாளையம் தக்வா பள்ளியை விமர்சிக்கப்பட்டுள்ளது.
4.என்ன இருந்தாலும் முஸ்ரிக்குகள் முஸ்ரிக்கள்தான் அவர்கள் பின்னால் எப்படி தொழ முடியும்?. இவைதான் அந்த விமர்சனங்கள்.

புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா?

இதில் முதலாவதான கடுமையான வார்த்தைகள் என்பது உண்மைதான். ஆனால் அவை மாற்று கருத்துடையவர்களை விமர்சிக்க நாம் பயன்படுத்தியவைதான். எனவே மாற்று கருத்துடையவர்கள் இந்த மாதிரி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தது தவறு என்பதை நாம் அனைவரும் இதன் மூலம் உணர்ந்து திருந்த வேண்டும். அந்த அடிப்படையில் இந்த வெளியீட்டில் அந்த கடுமையான வார்த்தைகளை முடிந்தவரை நேரடியாக பயன்படுத்தாமல் மீண்டும் நாம் உணரும் வகையில் இந்த இடத்தில் மாற்று கருத்துடையவர்களை நாம் எப்படி விமர்சித்திருந்தோம் என்பதை நினைவூட்டிடும் வகையில் அந்த விமர்சனங்கள் இடம் பெறும். இனி பிறரை நாம் இது மாதிரி விமர்சிக்கக் கூடாது விமர்சித்தால் அவர்களது மனமும் இப்படித்தான் புண்படும். நமது நோக்கம் அவர்கள் பண்பட வேண்டுமா? அவர்கள் மனம் புண் பட வேண்டுமா? என்பதை இந்த இடத்தில் ஒவ்வொருவரும் சிந்தித்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமது இந்த நிலைப்பாடு. இரண்டாவதாக உள்ள குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது என்பது. அதில் நாம் அந்த கருத்தைக் கூறக் கூடிய எல்லார் நிலைகளையும்தான் விமர்சித்து இருந்தோம். இருந்தாலும் நமது அன்றைய நிலை அந்த எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் அந்த எண்ணம் ஏற்படாது என்று நம்புகிறோம்.

முஸ்ரிக்குகள் முஸ்ரிக்கள்தான்.

மூன்றாவதாக உள்ள மேலப்பாளையம் தக்வா பள்ளி. இது பற்றி நமது நிலைப்பாட்டை த.மு.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற தலைப்பிலான வெளியீட்டிலேயே விளக்கி விட்டோம். முதலில் பிரிவுப் பள்ளி என்று எண்ணி எதிர்த்தோம். இனாயதுல்லாஹ் அவர்கள் அளித்த விளக்கத்திற்குப் பின் அந்த பள்ளி தேவைதான் என்பதை புரிந்து கொண்டோம். அதற்கு உதவுமாறும் கூறுகிறோம். நான்காவதாக உள்ள முஷ;ரிக்குகள் முஷ;ரிக்கள்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. யாரை முஷ;ரிக்குகள் என்று புறக்கணிக்கச் சொல்கிறார்கள் என்பதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. கருத்து வேறுபாடு நமக்கு மட்டும் அல்ல. யாரையெல்லாம் முஷ;ரிக்குகள் என்று அடையாளம் காட்டி அவர்களை பின் பற்றி தொழக் கூடாது என்கிறார்களோ அந்த விஷயத்தில் அவர்களே வேறுபடுகிறார்கள். அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள். எப்படி முரண்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் மீண்டும் ஒரு நினைவூட்டல்.

அவர்கள் பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம்.

குர்ஆன் ஹதீஸ்கள் மட்டும்தான் மார்க்கம் என்ற பிரச்சாரம் துவங்கியதும் சிறுபான்மையாக இருந்த நாம் பள்ளிக்கு வரக் கூடாது என தடுக்கப்பட்டோம். 4 மத்ஹபுகளை பின் பற்றாதவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கு முரணானவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்படி வித விதமாக போர்டுகள் போட்டுத் தடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் தரீகா, கபுர்தர்கா, பஞ்சா, கத்தம் பாத்திஹாக்களுடன் சுன்னத் ஜமாஅத் எனும் பெயரில் என்ன செய்தாலும் அவர்கள் பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

நமக்கு சற்று மக்கள் பலம் சேர்ந்ததும் தனிப் பள்ளிகள் கட்டினோம். இது பற்றிய சிலவற்றை முந்தைய வெளியீட்டிலும் நினைவூட்டிருந்தோம். மேலும் சிலவற்றை இங்கு நினைவூட்டிக் கொள்வோம். தனிப் பள்ளிகள் கட்டி சமுதாயத்தை கூறு போடலாமா? என்ற கேள்வி கட்டிய நமக்குள்ளேயே கூடுமா கூடாதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளிக்கு வரக் கூடாது என தடுக்கப்படுவதால்தான் தனிப்பள்ளி காண்கிறோம் என்றும் இதை பள்ளி என சொல்லக் கூடாது பிரச்சார பணிகளுக்கான மர்க்கஸ் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் வக்து வந்ததும் தொழுகிறோம். அதுவும் அவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று தடுப்பதால்தான் நமது மர்க்கஸ்களில் தொழுகிறோம். தடை நீங்கி விட்டால் அங்குதான் போய் தொழுவோம். இவை குர்ஆன் ஹதீஸ் பிரச்சார மர்க்கஸ்களாகவே செயல்படும் என்று கூறிக் கொண்டோம். சரியாகச் சொல்வதென்றால் நமக்கு நாமே சமாதானம் கூறி சமாளித்துக் கொண்டோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

காபிர்கள்.

நமது இந்த நிலைப்பாடுதான் நம்மை சிறிது சிறிதாக மாற்றியது. ஷpர்க் என தெரிந்து மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழக் கூடாது. ஷpர்க் என தெரியாமல் மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழலாம். மவ்லிது விளங்கி ஓதினாலும் விளங்காமல் ஓதினாலும் மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழக் கூடாது. தர்கா வழிபாடுடையவர்களை பின் பற்றி தொழக் கூடாது. இப்படியாக நிலைப்பாடுகள் மாறி மாறி அவர்கள் இணை வைக்கும் முஷ;ரிக்குகள். ஷpர்க் வைக்கும் இமாம்கள் என்று கூறி இப்பொழுது தெளிவாக காபிர்கள் என்று சொல்லி விட்டார்கள் என்றும் அறிகிறோம்.

அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.

தன்னை முஸ்லிம் என்று சொல்லுபவரை காபிர் என்று சொல்லலாமா? என்ற எதிர் கேள்விகள் வந்த பின் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சிலர் ஜகா வாங்கி விட்டதாகவும். காபிர்களே என்பதில் சிலர் உறுதியாக இருப்பதாகவும் அறிகிறோம். காபிர்கள் என சொல்லி விட்டது செவி வழிச் செய்தியாகவே உள்ளதால் எந்த ஊரில் யார் சொன்னார்கள் என்ற விபரத்தை விட்டு விடுவோம். யாருமே காபிர்கள் என்று சொல்லவில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு சாராரை முஷ;ரிக்கள் என்று கூறி அவர்களை பின் பற்றி தொழக் கூடாது என்றால் என்ன அர்த்தம் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதுதானே. காபிர் என்று வார்த்தையால் சொல்லாமல் செயலால் காட்டுவதுதான் ஒரு சாராரை பின் பற்றி தொழாமல் இருப்பது.

தவ்ஹீது பாய்யா தவ்ஹீது அல்லாத பாயா.

இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது, தொழுதால் நமது தொழுகை கூடாது என்கிற இந்த கொள்கை உடையவர்கள் கூற்றுப்படி அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று ஆகி விடுகிறது. அவர்கள் பின்னால் நின்று தொழாத, தொழக் கூடாது என்கிற தவ்ஹீதுவாதிகள் என்போர் அந்த இமாம்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளைத்தான் சாப்பிடுகிறார்கள். வெளியூர் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் யார் அறுத்தது என கேட்கிறோம். இன்ன பள்ளி இமாம் அல்லது முஅத்தின் அறுத்தார் அல்லது பாய்தான் அறுத்தார் என்பார்கள். எந்த பாய் தவ்ஹீது பாய்யா தவ்ஹீது அல்லாத பாயா என்று இந்த கருத்துடையவர்கள் கேட்பதில்லை. பாய் அறுத்ததா சரி கொண்டு வா பாயாவை என்றுதான் ஒரு பிடி பிடிக்கிறார்கள்.

அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள்.

ஹோட்டல்காரர்கள்; குறிப்பிடும் இமாம் முஅத்தின்கள் கண்டிப்பாக தர்காக்களுக்கும் கபுர்களுக்கும் வீடுகளுக்கும் சென்று பாத்திஹா ஓதக் கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். இதை தெரிந்து கொண்டுதான் அதாவது இவர்கள் யாரை பின்பற்றி தொழக் கூடாது மக்கா காபிர்களுக்கு ஒப்பான பக்கா முஷ;ரிக்குகள் என்று கூறுகிறார்களோ அவர்கள் அறுத்ததுதான் என்று தெரிந்து கொண்டுதான் சாப்பிடுகிறார்கள். இதுவும் அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

நமது தரப்பின் வருவாய்க்காக.

அவர்கள் இணை வைப்பவர்கள் முஷ;ரிக்குகள் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடக் கூடாது என்று இதுவரை எந்த தவ்ஹீது அணியும் சொல்லவில்லை. எப்பொழுது சொல்வார்கள். தவ்ஹீதுவாதிகளோ அல்லது தவ்ஹீது இயக்கங்களோ ஆடு, மாடு, கோழிக் கறிக் கடைகள் தனியாக துவங்கியபின் அல்லது தவ்ஹீது பள்ளி இமாம் முஅத்தின்களின் வருவாய்க்காக ஆடு, மாடு, கோழிகள் அறுக்கும் வேலையில் தவ்ஹீது பள்ளி இமாம் முஅத்தின்கள் ஈடுபட்ட பின்தான் ஷpர்க் வைக்கும் இமாம்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடக் கூடாது என்பார்கள் என்று சொல்லலாம் அல்லவா. இப்படித்தானே கடந்த காலங்களில் அவர்களை விமர்சித்தோம். நமது தரப்பின் வருவாய்க்காக என்று அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம் என்பது என்ன நிச்சயம்.

அது கொள்கை ரீதியான எதிர்ப்பா?

கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்பதைவிட நமது தரப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நிலைதான் ஆரம்பம் முதல் நம்மிடம் இருந்து வந்துள்ளது. 1986 முதல் 87 வரையில் அந்நஜாத்தைப் படிக்கக் கூடாது என்பதற்காக சுன்னத் ஜமாஅத்தவர்கள் கடுமையான எதிர்ப்புகளை மேற்கொண்டார்கள். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணானது என நம்பியதால் அதை அவர்கள் கொள்கை ரீதியாக எதிர்த்தார்கள். 1987 க்குப் பிறகு அதே அந்நஜாத்தை குர்ஆன் ஹதீஸ்கள்தான் என்ற கொள்கையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் புறக்கணித்தோம். அது கொள்கை ரீதியான புறக்கணிப்பா? நேற்று வரை குர்ஆன் ஹதீஸ் கொள்கையை எழுதி வந்த அந்நஜாத் அதிலிருந்து மாறி விட்டது என்று கூறியா புறக்கணித்தோம்? முதலில் புறக்கணிப்பு என்ற நிலையிலிருந்த நாம் காலப் போக்கில் அதை படிக்கக் கூடாது என்று எதிர்க்கக் கூடியவர்களாக ஆனோhம். அதுவும் கொள்கை ரீதியான எதிர்ப்பா?

இது கொள்கை ரீதியான புறக்கணிப்பா?

அடுத்து புரட்சி மின்னல் என்ற பத்திரிக்கையை எடுத்துப் பிடித்தோம். 1987 முதல் 88 வரை இந்த புரட்சி மின்னல் நிலைப்பாடு இருந்தது. பிறகு அந்நஜாத்தை பகிரங்கமாக புறக்கணித்த மாதிரி புறக்கணிக்க முடியாமல் புரட்சி மின்னல் என்ற பெயர் சரி இல்லை என்று கூறி புறக்கணிக்க ஆரம்பித்தோம். அது அல் முபீன் என பெயர் மாற்றப்பட்ட பிறகும் புறக்கணித்தோம். இது கொள்கை ரீதியான புறக்கணிப்பா? அடுத்து அதி தீவிர முயற்சி எடுத்து அல்ஜன்னத் பத்திரிக்கையை பரப்பும் பணியை மேற்கொண்டோம். இதில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்க 2 அணிகளும் பரங்கிப் பேட்டையில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று பேசினார்கள். இதற்கு மரத்தடி ஒப்பந்தம் என்ற பெயரும் வைத்துக் கொண்டோம்.

அது மட்டும் என்ன கொள்கை ரீதியானதா?

உணர்வு வார இதழ் வந்த பின் உணர்வு விற்கப்படும் இடத்தில் அல் ஜன்னத் விற்க முடியாது. அல் ஜன்னத் விற்கும் இடத்தில் உணர்வு விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதற்கும் பல அமர்வுகள் கூடிப் பேசி ஒப்பந்தம் எழுதி கையெழுத்தும் போடப்பட்டது. அதற்குப் பிறகும் அதே நிலைதான் இருந்தது. இதற்கு கொள்கைதான் காரணமா என்றால் இல்லவே இல்லை. இதழ்களின் நிலைகள் மட்டும்தான் இப்படியா? புத்தக வெளியீட்டாளர்கள் விற்பனையாளர்கள் விஷயத்தில் மேற்கொண்ட நிலைப்பாடுகள். அது மட்டும் என்ன கொள்கை ரீதியானதா?

அனுமதி மறுத்தது கொள்கை ரீதியானதா?

தஞ்சை மஸ்தான் அலி என்பவரிடம் புத்தகங்கள் வாங்கக் கூடாது அவரது விளம்பரங்களை பத்திரிக்கைகளில் போடக் கூடாது என்று அவரை புறக்கணித்தோம். அது கொள்கைப் பிரச்சனையா? எங்கள் முடிவை மீறி மஸ்தான் அலி விளம்பரம் வெளியிட்டதால் அல் முபீனுக்கு கட்டுரை தர மாட்டோம் என்றோம். அது கொள்கைப் பிரச்சனையா? இவ்வாறு ஆரம்பித்த அந்த புறக்கணிப்பு அல்முபீன் ஆசிரியராக இருந்த முஹைதீன் உலவியை விட்டு வைத்ததா? நாம் நடத்தும் மாநாட்டில் அவர் புத்தக ஸ்டால் போட இடம் தர மாட்டோம் என்றோம். அவர் என்ன குமுதம், குங்குமம், ராணி, போன்ற புத்தகங்களை விற்பனை செய்யவா அனுமதி கேட்டார். குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையிலான நூல்கள் என எதை நாமே நமது இதழ்களில் அறிமுக உரை எழுதி விளம்பரங்களும் செய்தோமோ அந்த புத்தகங்களின் ஸ்டால் போடத்தானே அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி மறுத்தது கொள்கை ரீதியானதா?

கொள்கைப் பார்வையா? கோபப் பார்வையா?

நீண்ட நெடுங்காலமாக குர்ஆன் ஹதீஸ் பிரச்சார நிகழ்ச்சிகள் சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் ஒன்று விடாமல் புத்தகங்களை பரப்பி வைத்தவர் முஸ்லிம் பெண்மணி, ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா. விற்கிறதோ இல்லையோ இத்தனை தலைப்புகளில் குர்ஆன் ஹதீஸ் நூல்கள் உள்ளன என்ற புத்தக கண்காட்சிகளை சளைக்காமல் நடத்தி வந்தவர் முஸ்லிம் பெண்மணி, ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா. இன்று அவரது முஸ்லிம் பெண்மணியை வாங்காதே ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவை கடை போட தடை போடு என அறிவித்தது கொள்கைப் பார்வையா கோபப் பார்வையா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது என்ற கருத்து கொள்கைப் பார்வையாகத் தெரியவில்லை.

அவர்களும் மக்கத்து காபிர்களும் சமம்.

இப்பொழுதாவது காபிர்கள் என்று விமர்சித்து விட்டு அந்த கருத்தில் சொல்லவில்லை என்று மாறிப் பேசுவதாக அறிகிறோம். 2:114 என்ற ஆயத்தைக் கூறி பழமைவாய்ந்த அந்த பள்ளிகளில் அவர்களது பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோமே அப்பொழுது அவர்களை எப்படி விமர்சித்தோம்? நபி(ஸல்) அவர்களது ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை எதிர்த்த மக்காவாசிகள் சிலைகளை கடவுள் என்று சொல்லவில்லை. சிலைகளாக வடிக்கப்பட்டுள்ள அந்த பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்றுதான் சொன்னார்கள்;. அப்படிச் சொன்ன அவர்களைத்தான் அல்லாஹ் காபிர்களே என்று அழைக்கிறான். அதே மாதிரிதான் சுன்னத் ஜமாஅத்தினர் தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்று சொல்கிறார்கள். எனவே அவர்கள் கொள்கையும் மக்கா காபிர்கள் கொள்கையும் ஒன்றுதான் என்று விமர்சித்து அவர்களும் மக்கத்து காபிர்களும் சமம் என்று கூறினோம். அவர்களை மக்கா காபிர்கள் என்று கூறிக் கொண்டேதான் அவர்கள் பின்னால் நின்று தொழ அன்று உரிமை கோரினோம்.

ஆடு, மாடு, கோழி கறி சாப்பாட்டுக்கு திண்டாட்டம்.

நாம் தனிப் பள்ளிகள் கட்டிய பின் நம்மவர்கள் அங்கு சென்றால் நமது உண்டியல் வசூல் பாதிக்கும் நமக்கு வரவேண்டிய வசூல் அங்கு போய் விடும். இதை தடுக்க வேண்டும் என்றால் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று சொல்வதுதான் ஒரே வழி. அந்த அடிப்படையில்தான் இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழலாமா? இஞ்சி விற்கும் இமாமை பின் பற்றி தொழலாமா? என்பன போன்ற புதிய மஸாயில்கள் வந்துள்ளன என்ற விமர்சனங்களை மறுக்க முடியுமா? மவ்லிது ஓதுபவர்கள் மவ்லிது ஹராம் என்றால் கறி, கோழி சாப்பாடு கிடைக்காது. அதனால் அதை ஹராம் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள் என்றோம். அது மாதிரி இணை வைக்கும் இமாம் முஅத்தின் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகள் ஹராம் என்றால் நமக்கு ஆடு, மாடு, கோழி கறி சாப்பாட்டுக்கு திண்டாட்டம் வந்து விடும். எனவேதான் இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழக் கூடாது என்கிற நாம் இணை வைக்கும் இமாம்கள் அறுப்பதை ஹராம் என சொல்லாமல் இருக்கிறோம் என்றும் விமர்சிக்கலாம் அல்லவா.

தடுக்க வேண்டும் அல்லவா.

இன்ன இன்ன மவுலவிகள் தங்கள், ஸாஹிபு தர்கா வழிபாடுடையவர்களாக இருப்பதால்; முஷ;ரிக் ஆகி விட்டார்கள். ஆகவே முஷ;ரிக்களான அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று பெயர் குறிப்பிட்டு கூறி வருகின்றனர். இவர்கள் யாரையெல்லாம் முஷ;ரிக்கான மவுலவிகள் என்று அறிவித்துள்ளார்களோ அந்த மவுலவிகளில் பெரும்பாலோர் ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள். சிலர் கடமையாகிவிட்ட ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். மவுலவிகள் மட்டுமல்ல தங்கள், ஸாஹிபு தர்கா கொள்கை உடையவர்களில் வசதி உள்ளவர்களும் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். அவர்களெல்லாம் மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்குகள் என்று கூறி அவர்;கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சொல்பவர்கள் அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதை தடுக்க வேண்டும் அல்லவா.

கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக இணை கற்பிப்போர் (முஷ;ரிக்குகள்) அசுத்தமானவர்;களே (நஜீஸ்களே), எனவே அவர்கள் சங்கை மிகுந்த இப் பள்ளியை (மஸ்ஜிதுல் ஹராமை) இவ்வாண்டுக்குப் பின் அவர்;கள் நெருங்கக் கூடாது.

இது அல் குர்ஆன் 9:28 வசனத்தில் உள்ள கட்டளையாகும். இந்த ஆயத்துபடியும் இன்னுமுள்ள ஹதீஸ்கள்படியும் அவர்கள் ஹரம் எல்கைக்குள் செல்வதை தடுக்கும் முயற்சிகளில் ஏன் ஈடுபடவில்லை? அவர்கள் மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்கள் எனவே அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று கூறி உள்ளது குர்ஆன் ஹதீஸ்களின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் என்பது உண்மையானால் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

பத்திரிக்கைகளில் படம் போட்டு காட்டிடும் பகட்டுக்காகவா?

உடனே ஆயத்து ஹதீஸ் ஆதாரங்களுடன் சவூதி அரசுக்கு தகவல் தெரிவித்து. இவர்களெல்லாம் முஷ;ரிக்குகள் ஹரம் எல்கைக்குள் நெருங்க விடாமல் தடுக்கப்பட வேண்டியவர்கள் என்று அடையாளம் காட்டாமல் இருப்பது ஏன்? யாரை மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்கள் என்று கூறினார்களோ அவர்களையும் அழைத்து வந்து நபி வழியில் ஹஜ் செய்வது எப்படி என்ற பயிற்சி முகாம்கள் அல்லவா நடத்துகிறார்கள். பயிற்சி முகாம்கள் நடத்துவது ஏன்? நன்மைக்காகவா? பத்திரிக்கைகளில் படம் போட்டு காட்டிடும் பகட்டுக்காகவா? இது அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு அவர்களே முரண்படுவதாக இல்லையா?

சுற்றி வளைத்திடும் வியாக்கியான வித்தைகள்.

ஒருவர் பள்ளிக்கு தொழ வரும்போது யாரை தொழ வருகிறார். அல்லாஹ்வை தொழ வருகிறாரா? அவ்லியாவை தொழ வருகிறாரா? இன்ன அவ்லியாவுக்காக தொழப் போகிறேன். இன்ன பெரியாரை தொழப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால் அவனை பின் பற்றி தர்கா டிரஸ்டிகளும் தொழ மாட்டார்கள். அல்லாஹ்வைத்தான் தொழப் போகிறார் எனும்போது அவரை பின் பற்றக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டும். சினிமா, டி.வி, கேமரா போன்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகள் சம்பந்தமான ஹராம் ஹலால்களுக்கு யாரும் நேரடி ஆதாரங்கள் கேட்க மாட்டார்கள். தொழுகை இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்பு அல்ல. அல்லாஹ்வின் தூதர் மூலம் அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி கட்டளையாகும். இதில் யாரையாவது பின் பற்றி தொழக் கூடாது என்று சொல்வதாக இருந்தால் அதற்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து நேரடி ஆதாரங்கள்தான் தர வேண்டும். சுற்றி வளைத்திடும் வியாக்கியான வித்தைகள் காட்டி சமுதாயத்;தை கூறு போட்டிடும் விளக்கங்கள் கூறக் கூடாது. இது மாதிரியான விளக்கங்களை எதன் பெயரிலாவது அணிகளை உருவாக்கி தங்கள் தரப்பை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ஏற்கலாம். நபி வழியில் உள்ள முஸ்லிம்கள் ஏற்க முடியுமா?

ஈமான் கொள்ளாது நடித்த முனாபிக்குகள்.

ரசூலுல்(ஸல்) காலத்தில் இது மாதிரியான முஷ;ரிக்குகள் இருக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அல்லாஹ் ரசூலை நம்பி ஈமான் கொண்டுவிட்டு தவறான விளக்கங்களால் தவறு செய்பவர்களைவிட ஈமான் கொள்ளாது நடிக்கும் ஈமான் கொண்டதாக நடித்த முனாபிக்குகளைத்தான் முஸ்லிம்கள் இல்லை முஷ;ரிக்குகள் என்று தெளிவாகச் சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்களையே நபி(ஸல்) அடையாளம் காட்டி அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று சொல்லவில்லை. என்பதை முந்தைய வெளியீட்டில் சுட்டிக் காட்டி இருந்தோம். ஈமான் கொள்ளாது நடித்த அந்த முனாபிக்குகளை அல் குர்ஆன் 9:28 வசனத்தின் கட்டளைப்படி ஹரம் எல்கைக்குள் வரக் கூடாது என்று நபி(ஸல்) தடுக்கவும் இல்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டிக் கொள்கிறோம்.

இது நமது விமர்சனம் அல்ல.

மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர்கள் கூட தவறான வாசகங்களை உபயோகித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். மக்கள் நேர் வழி பெறுவதும் வழி கெடுவதும் மார்க்க அறிஞர்கள் கையில்தான் இருக்கின்றது. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஷஷஎனது உம்மத்தில் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களை நான் பயப்படுகிறேன் என்று கூறினார்கள். இது நமது விமர்சனம் அல்ல. ஏகத்துவம் 2004 ஆகஸ்ட் இதழில் 39 ஆம் பக்கத்தின் முதல் பாராவில் இடம் பெற்றுள்ள விமர்சனமாகும். இந்த விமர்சனம் இந்த தலைப்பின் பல இடங்களில் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி, துபை

Sunday, July 09, 2006

மத்ஹபு அடிப்படையில் தொழுபவர்களைப் பின்பற்றி தொழலாமா?

? எங்கள் ஊரில் மத்ஹபு அடிப்படையில் தொழுகை நடத்துகின்றனர். அவர்களைப் பின்பற்றி தொழும் போது நாம் அவர்களைப் போன்றுதான் தொழவேண்டுமா? அல்லது நபி வழியில் தொழவேண்டுமா? அல்லது வீட்டில் தனியாகத் தொழுது கொள்ளலாமா?!

''(இமாமாக நியமிக்கப்படுபகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி 694
இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாமத் செய்பவர் இணை வைக்காமல் இருந்தால் அவருக்கப் பின் நின்று தொழுவதற்குத் தடை இல்லை. இமாமுடைய தவறுகள் குறித்து மஃமூம்களை அல்லாஹ் கேட்கமாட்டான். ஆனால் அதே சமயம் தவறு செய்தாலும் பின்பற்றித் தொழுபவர்கள் நபிவழிப்படியே தொழ வேண்டும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மேலும், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே நீங்கள் தொழுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நம்முடைய தொழுகை முறையை மாற்றிக் கொள்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.
இறை மறுப்பாளர்களையோ அல்லது இணைவைப்பவர்களையோ முஸ்லிம்கள் தங்களது பொறுப்பாளர்களாக - 'வலீ'யாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80,9:23) எனவே இமாம் இணைவைப்பவராக இருந்தால் அவரைப்பின்பற்றித் தொழக்கூடாது. பள்ளியிலேயே இரண்டாவது ஜமாஅத் நடத்தியோ, தனியாகவோ தொழுது கொள்ளலாம். அதற்கும் வழியில்லை என்றால் வீட்டில் தனியாகத் தொழலாம்.
ஏகத்துவம் 2004 செப்டம்பர் கேள்வி பகுதியிலிருந்து எடுத்தெழுதி அனுப்பியவர் முஃமின் பில்லாஹ்

Saturday, July 08, 2006

ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டுமா?

இமாமத் செய்பவருக்குரிய தகுதிகள் யாவை?

1. இறைவனுக்குச் சமமாக பிறரை அழைக்கின்ற இமாமைப் பின்பற்றி தொழலாமா?

2. சமாதிகளுக்கு நேர்ச்சை செய்வோரிடம் மாடு, சேவல், தங்கம், வெள்ளி சாமான்களைக் காணிக்கையாகப் பெறுகின்ற இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

3. ஸிர்க்ர்க், பித்அத் ஆகியவற்றில் ஈடுபடும் இமாமை பின்பற்றித் தொழலாம?
4. தாடி இல்லாத இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

5. பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

6. 20 ரக்அத் இமாமைப் பின்பற்றி எட்டு ரக்அத்கள் தொழலாமா?

7. பித்அத் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

8. சம்பளம் வாங்கிக் கொண்டு தொழவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

9. வழிகெட்ட ஆலிம்களைப் பின்பற்றித் தொழ மனம் இடம் கொடுக்காத நிலையில் வீட்டில் தொழலாமா?

10. பெண்கள் இமாமாகத் தொழ வைக்கலாமா? அவர்களுக்கு ஜமாத் தொழுகை உண்டா?

11. கயிறு மந்திரித்தல், தாயத் கட்டுதல், மவ்லீது ஓததல்போன்ற வேலையில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா?

12. தாயத் கட்டியுள்ள இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

13. கப்ரிலேயே காலத்தை ஓட்டும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா?

14. புகை பிடிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

15. பிஸ்மில்லாஹ்வை விட்டுவிட்டு பாதிஹா சூராவை ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

16. பஜ்ருத் தொழுகையில் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? தொழலாம் என்றால் நாமும் ஓதவேண்டுமா?

17. தொழுகையின் கடமைகளையும், சுன்னத்களையும் முறையாக நிறை வேற்றாத இமாமைப் பின்பற்றலாமா?

18. மக்கா காபிர்களின் அதே கொள்கையை ஆதரிக்கும் இமாம்களைப் பின்பற்றித் தொழலாமா?

பதில்

இந்த வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு முன் இந்த வினாக்கள் தோன்றுவதற்குரிய காரணங்களை அறிந்து கொண்டு அந்தக் காரணங்கள் சரியா என்பதை முடிவு செய்துவிட்டால் விடை கிடைத்துவிடும்.
மனித உள்ளங்களில் பதிந்துள்ள நம்பிக்கையே

இமாம்களாக இருப்பவர்கள் மற்ற மனிதர்களைப் போல் தவறு செய்பவர்களல்ல மற்ற மனிதர்களிடம் உள்ள பலவீனங்கள் இமாம்களிடம் இருக்க முடியாது பின்பற்றித் தொழுபவர்களை விட இமாமாக இருப்பவர்கள் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள் என்று மனித உள்ளங்களில் பதிந்துள்ள நம்பிக்கையே இது போன்ற கேள்விகள் எழக் காரணமாகின்றது.
மனிதர்களில் எவருக்குமே அந்த தகுதி கிடையவே கிடையாது.

எந்த ஒரு தவறும் செய்யாதவர்கள் மாத்திரம்தான் இமாமாக இருக்க வேண்டும் என்று கூறினால் - எதிர்பார்த்தால் - மனிதர்களில் எவருக்குமே அந்த தகுதி கிடையவே கிடையாது எந்த ஒருவரையும் எந்த காலத்திலும் இமாமாக ஏற்கவே முடியாது போய்விடும்.

தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்களை எண்ணுவதும் எல்லா மக்களையும் விட இமாம்கள் மிக உன்னதமானவர்கள் என்று கருதுவதும் தான் தனி மனித வழிபாட்டின் ஆணிவேராகும்.

''ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான் தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் அதற்காக வருந்தி திருந்திக் கொள்பவர்களே'' என்பது நபிமொழி. (திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, அஹ்மது)
உத்திரவாதம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

மற்ற மனிதர்களிடம் தவறுகளைக் காணும் போது சுட்டிக் காட்டித் திருத்தும் கடமை நமக்கு இருப்பது போலவே இமாம்களாக இருப்பவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதும் கடமையாகும். மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்த அவதாரம் எடுத்தவர்கள் இமாம்கள் அவர்கள் தவறு எதுவும் செய்யமாட்டார்கள் என்ற உத்திரவாதம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை.
இமாம்களை மனிதப் புனிதர்களாக கருதிவிட வேண்டாம்.

இமாம்களாக இருப்பவர்கள் தவறுகள் செய்து கொண்டே இருக்கலாம் என்று ஆதரிப்பதாக எவரும் கருதிவிடக்கூடாது. தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது தங்களைத் திருத்திக் கொள்ள அவர்கள் முன் வர வேண்டுமென்பது மிகமிக அவசியமே! இங்கே நாம் சொல்ல வருவது என்ன வென்றால் இமாம்களை மனிதப் புனிதர்களாக கருதிவிட வேண்டாம். எத்தனையோ இமாம்களைவிட, அவர்களைப் பின்பற்றித் தொழுவோர் சிறந்தவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டால் இந்தக் கேள்விகளில் பல எழாமல் போய்விடும்.
நபி (ஸல்)அவர்கள் நிர்ணயித்துச் சொன்ன தகுதிகள்

இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் இமாமத் செய்பவருக்குரிய தகுதிகளைக் குறிப்பிடும் போது 'ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டும்' என்று கூறவில்லை மாறாக அவர்கள் நிர்ணயித்துச் சொன்ன தகுதிகளை காண்போம்.

''மூன்று பேர் ஓரிடத்தில் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும். இமாமத் செய்ய அவர்களில் மிகவும் தகுதியானவர் அதிகம் ஓதுபவராகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
தகுதியில் பலர் சம நிலையிலிருந்தால்.

''அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் ஒரு சமுதாயத்துக்கு இமாமத் செய்யட்டும்! அல்லாஹ்வின் வேதத்தை அறிந்து கொள்ளும் தகுதியில் பலர் சம நிலையிலிருந்தால் அவர்களில் சுன்னத்தை (நபிவழியை) நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும்! அதிலும் பலபேர் சம நிலையிலிருந்தால் யார் முதலில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜிரத் செய்தாரோ அவர் தகுதியுடையவராவார். அதிலும் பலபேர் சம நிலையிலிருந்தால் அவர்களில் வயது அதிகமுள்ளவர் இமாமத் செய்ய வேண்டும்'' என நபி (ஸல்) கூறினார்கள். உக்பா இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
மூத்த வயதுடையவர் இமாமத் செய்யட்டும்?

நானும் எனது தோழர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திரும்பும் போது ''தொழுகை நேரம் வந்து விடுமானால் நீங்கள் பாங்கு இகாமத் கூறுங்கள்! உங்களிருவரில் மூத்த வயதுடையவர் இமாமத் செய்யட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். மாலிக் இப்னு ஹூலைரிஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் வேறொரு அறிவிப்பின்படி கிராஅத் (குர்ஆன் ஓதுவ)தில் அவ்விருவரும் சமமான தகுதிகளைப் பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகின்றது.

இமாமத் செய்வதற்குரிய முக்கிய தகுதிகள் எவை என்பதை இந்த நபிமொழிகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. ஓரு சமுதாயத்தில் இருப்பவர்களில் யார் குர்ஆனை நன்கு ஓதுபவர்களாக, அதை அறிந்தவர்களாக, நபிவழியைத் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இமாமத் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

இது பற்றி இன்னமும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றையும் கவனித்தால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெளிவாகும்.
அவர்களுடனும் தொழுங்கள்!

''தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக்கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரும். அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால் உங்கள் இல்லங்களில் (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள்! பின்பு அவர்களுடனும் தொழுங்கள்! அவர்களைப் பின்பற்றித் தொழும் தொழுகையை உபரியான (நபில்) தொழுகையாக கருதிக் கொள்ளுங்கள்.'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இப்னு மஸ்ஊது (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
அவர்களைப் பின்பற்றாதீர்கள் என்று நபி (ஸல்) கூறவில்லை.

தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் நேரம் கழித்து தொழுவது போன்ற பித்அத் எதுவும் இருக்க முடியாது. தொழுகைக்கான நேரம் முடிந்துதான் அவர்கள் தொழுவார்கள் என்றால் நம் தொழுகையை உரிய நேரத்தில் நிறை வேற்றி விட வேண்டும். ஆனால் அவர்களுடனும் சேர்ந்து நபிலாக எண்ணிக் கொண்டு தொழுது விட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள். அவர்கள் தொழுகையை நேரம் தவறிச் செய்யும் பித்அத்தைச் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைப் பின்பற்றாதீர்கள் என்று நபி (ஸல்) கூறவில்லை.
இந்த ஹதீஸ் மூலம் பித்அத் செய்வோர், தவறான காரியங்களில் ஈடுபடுவோர் ஆகியவர்களைப் பின்பற்றி சுன்னத்கள் தொழலாம். பர்ளு தொழக்கூடாது என்று சிலர் கருதுவது சரியானதல்ல.
நபிலாகக் கருதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில் ஒவ்வொரு தொழுகைக்கும் நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த தொழுகையை அந்த நேரத்தில் தொழும்போதுதான் அது அந்த தொழுகையாக நிறை வேறும். உதாரணமாக லுஹர் தொழுகையை அதற்குரிய நேரம் முடிந்த பின் ஒரு இமாம் தொழ வைத்தால் அதைப் பின்பற்றி நாம் லுஹர்த் தொழுகையைத் தொழுதால் நாமும் நேரம் தவறித் தொழுதவர்களாக நேரும். இதன் காரணமாகவே வீட்டிலேயே உரிய நேரத்தில் தொழுது கொண்டு அவர்களுடன் தொழும் தொழுகையை நபிலாகக் கருதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்களைப் பின்பற்றித் தொழுவது கட்டாயமில்லை. விரும்பினால் அவர்களைப் பின் பற்றித் தொழலாம். விரும்பினால் அவர்களைப் பின் பற்றித் தொழுவதை தவிர்க்கலாம்.
அவர்களுடன் நான் தொழலாமா?

''எனக்குப் பின் சில தலைவர்கள் தோன்வார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டும் அவர்களைப் பல காரியங்கள் தடுத்து விடும். எனவே நீங்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்!'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது ஒருமனிதர் ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நான் தொழலாமா?'' என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! நீங்கள் விரும்பினால் தொழுதுகொள்! என்று பதிலளித்தார். உபாதா இப்னுஸ்ஸாமித் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
தொழ தடையில்லை.

இந்த நபி மொழி மூலம் இத்தகையோரைப் பின் பற்றித் தொழுவது கட்டாயமில்லை என்று உணரலாம். மேற்கூறிய ஹதீஸ்கள் மூலம் பித்அத்தான, மார்க்கமுரணான செயல்களில் ஈடுபடுவோரை பின் பற்றித் தொழ தடையில்லை என்று அறிகிறோம்.
உங்களுக்கு நன்மையாகவும், அவர்களுக்கு கேடாகவும் அது அமையும்.

சிலபேர் உங்களுக்கு (இமாமாக) தொழுகை நடத்துவார்கள் அவர்கள் (தொழுகையைச்) சரியான முறையில் நடத்தினால் உங்களுக்கும், அவர்களுக்கும் பயனுள்ளதாகும். அவர்கள் (தொழுகையில்) தவறுதலாக நடந்து கொண்டால் (நீங்கள் சரியாகத் தொழுதுவிடும் போது) உங்களுக்கு நன்மையாகவும், அவர்களுக்கு கேடாகவும் அது அமையும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
பஜ்ரில் இமாம் குனூத் ஓதினால்.

இமாமாக இருப்பவர் பாதிஹா சூராவுடன் பிஸ்மில்லாவை ஓதாவிட்டாலோ, கைகளை உயர்த்துவது போன்ற சுன்னத்துகளை விட்டு விட்டாலோ, பஜ்ரில் குனூத் ஓதினாலோ பின்பற்றித் தொழுவோர் சரியாகத் தங்களின் கடமைகளை நிறை வேற்றும் வரை அவர்களின் தொழுகை பாதிக்காது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து அறிகிறோம். பஜ்ரில் இமாம் குனூத் ஓதினால் பஜ்ருத் தொழுகையில் இல்லாத ஒரு அம்சத்தை அவர் ஏற்படுத்துகிறார் நாம் அதில் பங்கெடுக்காமல் மவுனமாக நின்றுவிட்டால் நமது தொழுகை பயனுள்ளதாகும். என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிகிறோம்.
சிந்திக்கும் போது விளங்கமுடியும்.

இமாம்கள் நேரம் தவறி பர்ளுத் தொழுகையை நிறை வேற்றிக் கொண்டிருக்கும் போது அவரைப் பின்பற்றி நாம் நபிலாகத் தொழலாம் என்ற ஹதீஸ் மூலம் 20 ரக்அத்கள் தொழவைக்கும் இமாமைப் பின்பற்றி 8 ரக்அத்கள் தொழலாம் என்பதை சிந்திக்கும் போது விளங்கமுடியும்.
பின்பற்றாது புறக்கணிப்பது கட்டாயமல்ல.

இமாம்களாக இருப்பவரின் தவறான நடத்தைகளின் காரணமாக அவர்களைப் பின்பற்றாது புறக்கணிப்பது கட்டாயமல்ல என்ற அடிப்படையில் தான் நபித் தோழர்களின் வாழ்விலும் சான்றுகள் உள்ளன.
'பித்னா' (குழப்பம்) உடைய இமாம் எங்களுக்குத் தொழுகை நடத்துகிறார்.

உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டபோது அவர்களிடம் உபைதுல்லாஹ் இப்னு அதீ அவர்கள் வந்து ''நீங்கள் பொது மக்களின் இமாமாக இருக்கின்றீர்கள். முற்றுகை இடப்படும் நிலைமைக்கு நீங்கள் ஆளாகியுள்ளீர்கள்! 'பித்னா' (குழப்பம்) உடைய இமாம் எங்களுக்குத் தொழுகை நடத்துகிறார். (அவரைப் பின்பற்றித் தொழுதால்) நாங்கள் குற்றவாளிகளாவோமா என்று அஞ்சுகிறோம் என்று கூறினார்.
அவர்களின் தவறுகளை நீ தவிர்த்துவிடு.
அதைக் கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் ''மனிதர்கள் செய்யும் நல்லறங்களில் தொழுகை மிகவும் சிறந்ததாகும். மக்கள் அதை அழகிய முறையில் நடத்தும் வரை அவர்களுடன் நீயும் அழகிய முறையில் அதை நடத்திக்கொள்! அவர்கள் தவறிழைத்தால் அவர்களின் தவறுகளை நீ தவிர்த்துவிடு'' என்று கூறினார்கள். புகாரியில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

கொடுமையான ஆட்சி புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபைப் பின்பற்றி இப்னு உமர் (ரலி) தொழுத நிகழ்ச்சி புகாரியில் இடம் பெற்றுள்ளது. மர்வான் என்ற மன்னரைப் பின்பற்றி அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் பெருநாள் தொழுகை தொழுது அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டிய ஹதீஸ் முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது. மேலே சொன்ன நபி மொழிகளுடன் இந்த நபித்தோழர்களின் செயல்களும் பொருந்தும் விதமாக அமைந்து இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
தவறுகள் புரிவோரை இமாம்களாக ஏற்றுத்தொழ தடை இல்லை.

ஆனால் எவர்கள் மக்கா காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப்பது திட்டவட்டமாகத் தெரிகின்றதோ, இணை வைத்தலை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றதோ, அத்தகையோரை இமாமாக ஏற்பதற்கு மேற்கூறிய ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. இறைவன் எத்தகைய காரியங்களைச் செய்பவர்களைக் காபிர்கள் என்று அறிவிக்கிறானோ அவர்களை இமாம்களாக தலைவர்களாக ஏற்கலாகாது, ஏனைய தவறுகள் புரிவோரை இமாம்களாக ஏற்றுத்தொழ தடை இல்லை.
பெண்கள் இமாமத்.

'பெண்கள் ஆண்களுக்கு இமாம்களாகத் தொழ வைக்கலாகாது' என்று இப்னுமாஜாவில் இடம் பெற்ற ஹதீஸ் ஆதாரமற்றதாகும் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அத்தபீபீ, என்பவர் இட்டு க்கட்டி கூறக்கூடியவர். இவர் இந்த ஹதீஸின் அறிப்பாளர்களில் ஒருவராக இடம் பெறுகிறார். எனவே இது சரியான ஹதீஸ் அல்ல. பெண்கள் இமாமத் செய்யலாம். தன குடும்பத்தைச் சேர்ந்த ஆண் சிறுவர்களுக்கு கூட இமாமத் செய்யலாம். என்பதற்கு ஆதாரம் உள்ளது.
அந்தப் பெண்மணி இமாமத் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் செல்லும்போது உம்மு வரகா என்ற பெண்மணி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் சேர்ந்து போரில் கலந்து கொள்ள எனக்கும் அனுமதியளியுங்கள்!' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினருக்கு இமாமாக நின்று தொழவைக்கு மாறும் நபி (ஸல்) கட்டளையிட்டனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறுமியும், ஒரு சிறுவரும் இருந்தார்கள். அவ்விருவரையும் தனக்குப்பின்னால் நிறுத்தி அவ்விருவருக்கும் இமாமாக அந்தப் பெண்மணி இமாமத் செய்தார்கள் என்ற ஹதீஸ் அபூதாவூத், இப்னுகஸைமா, ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் மூலம் பெண்களும் இமாமத் செய்யலாம் என அறிகிறோம்.

அல் ஜன்னத் 1989 ஜனவரி கேள்வி பதில்பகுதியிலிருந்து இதை எடுத்தெழுதி அனுப்பியவர்
முஃமின் பில்லாஹ்

தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

மார்க்கத்தில் உள்ளது அல்ல.

From: Mohamed Abuthageer
To: mdfazlulilahi@hotmail.com
Subject: doubt regarding hajj of foreigners
Date: Fri, 7 Jul 2006 12:10:25 -0700 (PDT)

Assalamu alaikkum varah…

I am Mohamed, my native is madurai, Tamilnadu. I came Saudi Arabia before one year. Insha Allah I want to perform the hajj coming year. Somebody told, before four months of dulhajj, anybody not performance umrah, that people no need to give qurbani at the time of hajj performance. I want the detail of rectification of the doubt. If u cannot understand the question, please give the details rules of " hajj performance of foreign workers" ( they came for work ). Please rectify my doubt. I will expect your result.

My email id is : mthageer@yahoo.com

Vassalam.

Mohamed
Saudi Arabia
07.07.2006
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 08-07-2006

அன்புள்ள முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எனக்கு இங்லீஸ் தெரியாது. தமிழில் கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

ஹஜ்ஜுக்கு செல்பவர் துல்ஹஜ்ஜுக்கு நான்கு மாதத்திற்கு முன் உம்ரா செய்யக் கூடாது. அப்படி உம்ராச் செய்தால் ஹஜ்ஜின் போது அவர் குர்பானி கொடுக்கத் தேவை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.

இஸ்லாமிய சட்டங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில்தான் சொல்ல வேண்டும். மேற்கண்டவாறு சொல்பவர்கள் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும். அவர்களால் தர முடியாது. காரணம் அந்தக் கூற்றுக்கு குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணாகவே உள்ளது.

ஹஜ்ஜுடைய கிரியைகள் துல்ஹஜ் 8முதல் 13 வரையிலான 6 நாட்கள்தான். ஆனால் அல்லாஹ் ஹஜ்ஜுக்குரிய காலம் தெரிந்த மாதங்களாகும் என திருக்குர்ஆன் 2:197இல் கூறியுள்ளான். நாட்கள் என கூறவில்லை. காரணம் ஹஜ்ஜுடைய 3 வகைகளில் ஹஜ் 'தமத்துவ்' என்பதும் ஒன்று. இந்த ஹஜ் 'தமத்துவ்' செய்பவர் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட வேண்டும். ஹஜ்ஜுடைய நாட்கள் வந்ததும் மீண்டும் இஹ்ராம் ஆகி ஹஜ் செய்ய வேண்டும்.

இந்த 'தமத்துவ் ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்புபவர்கள் ஷவ்வால் மாதமே உம்ராவுக்காக இஹ்ராம் ஆகி உம்ராவை நிறைவேற்றி இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்கள். பிறகு ஷவ்வால், துல்காயிதா இரு மாதங்கள் மக்காவிலேயே தங்கி விடுவார்கள். துல்ஹஜ் வந்ததும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் ஆகி ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். இவ்வாறு ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் மூன்று மாதங்களை செலவிடுகிறார்கள். அதனால் ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களை ஹஜ்ஜுக்குரிய அறியப்பட்ட மாதங்களாக திருக்குர்ஆன் 2:197இல் அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலும், ரமழானில் உம்ரா செய்வது என்னுடன் ஹஜ் செய்வது போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி கூறியுள்ள நபி(ஸல்) அவர்கள் ரமழானில் உம்ராஜ் செய்தவர் அதற்கடுத்த மாதம் ஹஜ் செய்ய இருப்பவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஹஜ் செய்யக் கூடாது என்றும் கூறவில்லை. நீங்கள் கேட்டுள்ளது மக்களிடம் பரவி விட்ட எத்தனையோ தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. மார்க்கத்தில் உள்ளது அல்ல.