Wednesday, April 19, 2006

போன் செய்தவன் பக்கா பொய்யன்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 19-04-2006

'முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது' என்று பேசிய முஸ்லிம் லீகர்.

கண்ணியத்திற்குரிய வளைகுடா வாழ் சகோரர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 11-04-2006 அன்று தூய திட்டமும் சதி திட்டங்களும். ( நடந்தது என்ன? ) பாகம் -1 என்ற தலைப்பில் மெயில் அனுப்பி இருந்தேன். 14-04-2006 அன்று பாளையங்கோட்டை தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் வந்திருந்தார்கள். அப்பொழுது ''தாவூத் பாஷhவை விமர்சித்து நீங்கள் மெயில் அனுப்பியுள்ளதாக தாவூத் பாஷhவுக்கு போன் வந்துள்ளது. உங்களை விமர்சித்து பஸ்லுல் இலாஹி நிச்சயமாக எழுதி இருக்க மாட்டார் என்று தாவூத் பாஷhவிடம் சொன்னேன். உங்களைத்தான் மெயில் போடாதீர்கள் என்று சொன்னேனே. ஏன் போட்டீர்கள். காலம் வரும்போது உண்மை தானாக வெளி வரும். எனவே இனி மெயில் போடாதீர்கள்'' என்றார்கள்.

போன் செய்தவன் பக்கா பொய்யன் என்பதை அறிந்து விட்டார்கள்.

மேலப்பாளையம் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்பொழுது நமது வெளியீட்டின் காப்பியை அண்ணன் ஹைதர் அலி அவர்களிடம் கொடுத்தேன். அதை படித்து விட்டு ராஜகிரி தாவூத் பாஷh அவர்களை விமர்சித்து எழுதியுள்ளதாக போன் செய்தவன் பக்கா பொய்யன் என்பதை அறிந்து விட்டார்கள். ''இனி மெயில் போட வேண்டாம்'' என்று அண்ணன் ஹைதர் அலி அவர்கள் சொன்னதால் மெயிலின் தொடர்ச்சியை அழித்து விட்டேன். 15-04-2006 அன்று மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் கூட்டம் நடந்தது. அதில் த.மு.மு.க. பற்றியும் என்னைப் பற்றியும் பொய்களை புனைந்து பேசியுள்ளார்கள். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்பொழுது நான் அண்ணன் ஹைதர் அலி அவர்களுடன் திருவிதாங்கோடு கூட்டத்தில் இருந்தேன்.

நீங்கள் பேசியதை எழுத்து மூலமாக தருவீர்களா?

போனுக்கு மேல் போன் வந்தது. அசிங்கமாகவெல்லாம் பேசுகிறார்களே என்றார்கள். நான் ''பொறுமையாக இருங்கள்'' என்றேன். திடலுக்கு அருகில் காங்ரஸ் துணைத் தலைவர் முஹம்மது அலி அவர்களின் வீடு உள்ளது. முஸ்லிம் லீக்கினரின் பொய்ப் பிரச்சாரத்தை ஜீரணிக்க முடியாத அலி அவர்கள் மேடை அருகே சென்று கண்டித்து சப்தம் போட்டிருக்கிறார். ''இலாஹி என்ன சொன்னாலும் எழுத்து மூலமாக கைகெழுத்திட்டு தருவார். நீங்கள் பேசியதை எழுத்து மூலமாக தருவீர்களா? பொட்டப் பயல்களா'' என்று இன்னொரு கட்சிக்காரர் கேட்டிருக்கிறார். தகராறு ஆனதும் காவல் துறை புடை சூழ கூட்டம் நடந்துள்ளது. திருவிதாங்கோட்டிலிருந்து பாளையங்கோட்டை வந்து சேர்ந்த பின்னரும் இரவு இரண்டு மணி வரையும் மு.லீக் கூட்டம் சம்பந்தமாக போன்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்தக் கயவர்களை அடையாளம் காட்டியே தீர வேண்டும்.

பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பதே எல்லோருடைய வற்புறுத்தலாகவும் இருந்தது. அண்ணன் ஹைதர் அலி அவர்கள் ''வேண்டாம் பொறுமையாக இருங்கள்'' என்று கூறி விட்டார்கள். எனவே அமைதியாக இருந்தோம். இந்த நிலையில் 17ஆம் தேதி இரவு 10மணிக்கு ஒரு போன் வந்தது. ''11-04-2006 அன்று பழனி ஆயக்குடி தெற்குத் தெருவில் ஒரு வீடு திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தார் மு.லீக் மாநில தலைவர் காதர் மைதீன். வந்ததும் த.மு.மு.க.வை விமர்சித்து பேசினார். பொதுக் கூட்டத்தில் பேசிய காதர் மைதீன் ''தி.மு.க. வற்புறுத்தியதால் பாளையங்கோட்டையை திரும்ப கொடுத்தோம்'' என்று கூறினார். வீட்டில் கூடி இருந்தவர்களிடம் ''ஜவாஹிருல்லாஹ் 60 இலட்சம் வாங்கி விட்டு பாளைத் தொகுதியை தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டார்'' என்று கூறினார்'' என்ற தகவல் கிடைத்தது.. எனவே மு.லீக் பெயரால் சமுதாயத்தை ஏமாற்றும் இந்தக் கயவர்களை அடையாளம் காட்டியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

கோதர் மைதீன் - - ஒரே பெண்ணிடம்தான் போவார்கள்.

உடனே மேலப்பாளையத்தில் நம்மை விமர்சித்தவர்களை அடையாளம் காட்டி ''எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைக்கும் மணியாச்சிகளும் மணி ஆட்டிகளும்'' என்ற பிரசுரத்தை 18ஆம் தேதி மாலை மேலப்பாளையத்தில் வினியோகித்தேன். அது கீழே உள்ளது பார்த்துக் கொள்ளவும். 15-04-2006 அன்று மேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் பேசியதில் மிக முக்கியமானதையும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.


முஸ்லிம் லீக்கை காதர் மைதீன் என்ன தரத்தில் வைத்துள்ளார் என்பதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

எம்.ஜி. காஜா என்பவர் பேசும்போது எல்.கே.எஸ். மீரான் எவ்வளவு நல்ல மனிதர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கூறினார். ''கோதர் மைதீன் எக்ஸ் எம்.எல்.ஏ. அவர்களும் ---- என்பவரும் ஒரே பெண்ணிடம்தான் போவார்கள். அவர்களுக்கு கார் ஓட்டிக் கொண்டு போகும் எல்.கே.எஸ். மீரான் வெளியில்தான் நிற்பார் உள்ளே போக மாட்டார்'' என்று பேசியுள்ளார். அதாவது எல்.கே.எஸ். மீரான் எப்படிப்பட்ட சேவகர் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார். (கோதர் மைதீனுக்குத்தான் சீட்டு கொடுப்பேன் என்று காதர் மைதீன் ஏன் அடம் பிடித்தார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது.) முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எஸ்.கே. காஜா என்பவர் பேசும்போது ''எங்க முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது'' என்று பேசியுள்ளார். (தலைமையின் தரத்தை உணர்ந்த தொண்டர் இவர்தான் போலும்.) இனி இவர்களை அடையாளம் காட்டும் நமது பணி தொடரும். வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி,

No comments: