Sunday, April 16, 2006

எங்களூர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 16.4.06

மு.லீக் தலைமையினர் தாங்கள் செயல்படவும் மாட்டார்கள் செயல்படுகிறவர்களை செயல்பட விடவும் மாட்டார்கள்.

எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைத்தவர்கள் யார்?

கண்ணியத்திற்குரிய மேலப்பாளையவாசிகளுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தமிழக சட்ட மன்ற தேர்தல் நாள் நெருங்கியதும். தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் த.மு.மு.க.வின் ஆதரவைப் பெற முயற்சிகள் செய்தன. இதை பத்திரிக்கைகள் வாயிலாக எல்லோரும் அறிந்துள்ளோம். 

இட ஒதுக்கீடு, அப்பாவி சிறைவாசிகள் விடுதலை உட்பட த.மு.மு.க. வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்றது தி.மு.க. அதனால் த.மு.மு.க. ஆதரவு தரும் என்ற சூழல் உருவானது. த.மு.மு.க. வை அணுகிய தி.மு.க. தலைமையினர் "நீங்கள் போட்டியிடுவதாக இருந்தால் நீங்கள் விரும்பும் 5 தொகுதிகளை தருகிறோம்" என்று கூறியுள்ளனர். 

த.மு.மு.க.வினரோ "நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். எங்களுக்கு தருவதாகக் கூறும் தொகுதிகளை மு.லீக்குக்கு கொடுத்து விடுங்கள்" என்று கூறியுள்ளனர். இதையடுத்து மு.லீக் தலைவர்களுடன் த.மு.மு.க. தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.



துபையிலிருந்த எனக்கு 26-02-06 அன்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். அப்பொழுது "பாளையங்கோட்டைத் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும்" என்றார்கள். 

"முஸ்லிம் லீக் சார்பிலா போட்டியிடச் சொல்கிறீர்கள். என்னை அபுதாபி அப்துல்ரவூப் அவர்கள் நீண்ட நாளாக வற்புறுத்தி வருகிறார்கள். நான் மறுத்து வருகிறேன். மு.லீக் தலைமையினர் தாங்கள் செயல்படவும் மாட்டார்கள் செயல்படுகிறவர்களை செயல்பட விடவும் மாட்டார்கள். அது ஒரு சாபத்துக்குள்ளான தலைமையாக ஆகி விட்டது. 

த.மு.மு.க. சார்பில் என்றால் நிற்கிறேன்" என்றேன். "நீங்கள் முஸ்லிம் லீக்தானே" என்றார்கள். இருந்தாலும் மு.லீக் சார்பில் நான் நிற்க விரும்பவில்லை. எங்களூர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். நீங்கள் நிற்பது சம்பந்தமாக மீண்டும் யோசியுங்கள் என்று கூறி போனை கட் செய்து விட்டார்கள்.



28-02-06 அன்று அதிகாலை துபை நேரம் 5 மணிக்கு மீண்டும் த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி  போன் செய்தார்கள். பாளைத் தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக கேட்டார்கள். "தி.மு.க. ஜெயித்த தொகுதியை கொடுக்காது என பத்திரிக்கையில் எழுதுகிறார்களே எப்படி பாளைத் தொகுதி கிடைக்கும்" என்றேன். 

"அது பற்றி பேச வேண்டாம் பாளைத் தொகுதியை பெறுவது த.மு.மு.க.வின் பொறுப்பு. பெற்று விட்டோம் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போட்டுயிடுவது பற்றி கூறுங்கள்" என்றார்கள். 

"எல்.கே.எஸ். மீரான் மைதீன் மு.லீக் சார்பில் ஒரு முறை நின்று தோற்றவர், இளைஞர் 40 வயது இருக்கும் எனவே எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கே வாய்ப்பு கொடுங்கள்" என்றேன்.


அவர் மு.லீக்கில் தான் தொடர்ந்து இருக்கிறாரா? என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி   கேட்டார். "தேசிய லீக்குக்கு சென்று வந்தவர்தான். அவர் மட்டுமல்ல இன்று மு.லீக்கில் உள்ள அனைவருமே தேசிய லீக்குக்கு சென்று வந்தவர்கள்தான். 

ஏ.எம். யூசுபின் தமிழ்நாடு மு.லீக்கிலிருந்தவர்தான், இஸ்மாயீல் சாகிபையே கீழ்தரமாக விமர்சித்தவர்தான் இன்றைய மு.லீக் தலைவர் காதர் மைதீன். 

எனவே எல்.கே.எஸ். மீரான் தேசிய லீக்குக்கு சென்றது பெரிய விஷயமல்ல. எல்.கே.எஸ். மீரான் நின்றால் நான் நின்ற மாதிரி. எனவே அவருக்கே வாய்ப்பு கொடுங்கள்" என்றேன். உங்களை மாதிரி செயல்படுவாரா? என்று கேட்டார். என்னை மாதிரி என்று சொல்ல முடியாது. ஏதோ செயல்படுவார்" என்றேன்.


பிறகு எல்.கே.எஸ். மீரான் அவர்களுக்கு நானே போன் போட்டு பேசினேன். அவர் "மு.லீக் தலைமைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்" என்று கூறினார். "மு.லீக்கால் பாளைத் தொகுதியை பெற முடியாது. எனவே நீங்கள் சரி என்று சொல்லுங்கள். எனக்கு வந்த வாய்ப்பைத்தான் உங்களுக்கு தருகிறேன். 

த.மு.மு.க. மூலம் இந்த தொகுதியை உங்களுக்கு பெற்றுத் தருகிறேன். கோதர் மைதீன் எனக்கு நண்பர்தான். மேலப்பாளையவாசியான நீங்கள் நிற்பதை நான் விரும்புகிறேன்" என்றேன். மீண்டும் மீண்டும் "தலைமையில் மனுச் செய்துள்ளேன்" என்றே எல்.கே.எஸ். மீரான் கூறினார்.


தொடர்ந்து நான் வலியுறுத்தவே, "பண வசதி இல்லை. எனக்கு கடன் இருக்கிறது. 2 லட்சம்தான் செலவு செய்ய முடியும்" என்றார். "பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் தேர்தல் செலவுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீங்கள் சரி என்று சொல்லுங்கள், சுறு சுறுப்பாக செயல்படுவேன் என்ற வாக்குறுதி மட்டும் தர வேண்டும்" என்றேன். 

திரும்பவும் தலைமையில் மனுச் செய்துள்ளேன் என்றே கூறினார். "எல்.கே.எஸ். நான் கட்சி சார்பில் பேசவில்லை, தனிப்பட்ட முறையில் பேசுகிறேன். மேலப்பாளையவாசி என்ற முறையில் பேசுகிறேன். நமது நட்பில் பேசுகிறேன். 

திரும்ப திரும்ப தலைமை தலைமை என்று சொல்லாதீர்கள். மு.லீக் தலைமையால் பாளை தொகுதியை பெற முடியாது. நீங்கள் நிற்காவிட்டால் மேலப்பாளையவாசியான வேறு யாரை நிறுத்தலாம்? நீங்கள் நிற்பதையே நான் விரும்புகிறேன். உங்கள் முடிவை சொல்லுங்கள்" என்றேன்.


இப்படியாக துபையிலிருந்து 15 நிமிடம் பேசினேன். பிறகு போன் போடுகிறேன் என்றார். போன் போடவில்லை. இந்த உண்மையை எல்.கே.எஸ். மீரான் மறைத்து விட்டார். அதனால் எல்.கே.எஸ். மீரானுக்கு போட்டியாக நான் துபையிலிருந்து வந்த மாதிரி. எல்.கே.எஸ். மீரானுக்கு கிடைக்க வேண்டிய சீட் என்னால் கிடைக்காமல் போய் விட்ட மாதிரி. கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்த விஷமிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

எனவே 9-4-2006 அன்று காலை எல்.கே.எஸ். மீரான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். மேற்கண்டவாறு 15 நிமிடம் துபையிலிருந்தே பேசியதை சொல்லிக் காட்டினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

அவதூறு பரப்பும் பொய்யர்கள் விஷமிகளே அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களே!

அப்பொழுது எல்.கே.எஸ். மீரானுடன் எல்.கே.எஸ். புகாரி, முன்னாள் மு.லீக் எம்.சி. ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், முன்னாள் தி.மு.க. எம்.சி.யும் நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி முன்னாள் பொருளாளருமான அப்துல் லத்தீப், மஞ்சி மக்தூம், பவுசர் ஆட்டோ தாஜ்பாய் ஆகியோர் இருந்தார்கள். 

10-4-2006 அன்று மாலை முன்னாள் எம்.எல்ஏ. ஷம்சுல் ஆலம், ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், ராஜகிரி தாவூத் பாட்சா ஆகியவர்களுடன் இன்ஜினியர் செய்யது அஹ்மது ஆபீஸில் எல்.கே.எஸ். மீரான் இருந்தார். அப்போதும் நானாகவே முன் வந்து பேசியதை சொல்லிக் காட்டி நிரூபித்துள்ளேன். எனவே அவதூறு பரப்பும் பொய்யர்கள் விஷமிகளே அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களே! என்று விளங்கிக் கொள்ளுங்கள்.


இத்துடன் நிற்கவில்லை. 2 மாதங்களுக்கு முன்பே பாளைத் தொகுதியை எல்.கே.எஸ். மீரானுக்கு கிடைக்கச் செய்ய முயற்சித்த நான், இப்பொழுது இன்னொரு முயற்சியும் செய்து வந்தேன். 

பாளைத் தொகுதிக்குப் பதிலாக எம்.எல்.சி. அல்லது அது போன்ற வேறு பதவி தருவதாக தி.மு.க. தலைமை கூறி உள்ளது. அதை பேட்டையைச் சார்ந்த கோதர் மைதீனுக்கே கொடுக்க வேண்டும் என்று மு.லீக் தலைவர்  காதர் மைதீன் கூறி உள்ளார். 

நாம் நமதூர்வாசியான எல்.கே.எஸ். மீரான் மைதீனுக்கே அதை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்காக நான் களம் காணத் தயார். அந்த நேரத்தில் நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று 8-4-06 சனி அன்று த.மு.மு.க. மேலப்பாளையம் மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினேன். 

த.மு.மு.க.வினரும் எல்.கே.எஸ். மீரான் மைதீனுக்காக களம் காண்போம் என்று சபதம் செய்தார்கள்.


இந்தச் செய்தியையும் ஷம்சுல் ஆலம், ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், எல்.கே.எஸ். புகாரி, அப்துல் லத்தீப், மஞ்சி மக்தூம், பவுசர் ஆட்டோ தாஜ்பாய், சாந்து நூர் முஹம்மது, ஸ்டார் இபுறாஹீம் உட்பட பல சமுதாய பிரமுகர்களுக்கும் தெரிவித்துள்ளேன். 

மேலப்பாளையத்தைச் சார்ந்த எல்.கே.எஸ். மீரானுக்கு பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக கூலிக்கு மாரடிப்பவர்கள் பேட்டைக்காரரிடம் பேரம் பேசி விட்டார்கள் போலும். எனவே எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைக்க முடிவு செய்து விட்டார்கள்.  எனவே எல்.கே.எஸ்.க்கு பதவி கிடைக்காமல் செய்வதற்காகவே  கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியாகிய எம்மை விமர்சித்துள்ளார்கள்.


இவர்கள்தான் டிரஸ்டு திருடன்களான பள்ளித் திருடன்கள் கொடுத்த கைக் கூலிக்காக நடு ரோட்டில் கிடந்து மாரடித்துள்ளார்கள். மேலப்பாளையவாசிகள் போட்டியிட வேண்டும் என்பதற்காக சீட் தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். மேலப்பாளையவாசிகள் போட்டியிடுகிறார்கள் என்றதும் ஒதுங்கி வழி விட்டவர் டி.பி.எம். மைதீன் கான். 

மேலப்பாளையவாசிகளுக்கு சீட்டு இல்லை என்று ஆக்கியவர்கள் காதர் மைதீன் போன்றவர்கள்தான் எனவே வருங்காலத்தில் மேலப்பாளையவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், டி.பி.எம். மைதீன் கான் அவர்களை வெற்றி பெறச் செய்வது மேலப்பாளையவாசிகள் கடமையாகும். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, பவுண்டர் மஸ்ஜிதுர் றஹ்மான், முன்னாள் மாவட்ட தலைவர் J.A.Q.H. 11.ஏ. ராவுத்தர் கீழத் தெரு, மேலப்பாளையம்,

No comments: