அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் மத்தியில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்துவது தொடர்பாக கடிதப் பரிமாற்றங்கள் நடை பெற்றது.
மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் முரன்படும் அனைத்து மார்க்க பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிரச்சினைக்குறிய அனைத்துத் தலைப்புகளையும் விவாதிக்க வேண்டும் என்ற வகையில் நம்முடன் அவருக்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்தினதும் பட்டியல் கேட்க்கப்பட்டு அனைத்தையும் விவாதிக்கும் விதமாக ஒப்பந்தப் போடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதான் அனுப்பப்பட்ட கடிதங்களின் சுருக்கமாகும்.
இறுதியாக கடந்த 2011.11.26 அன்று மவ்லவி ஸஹ்ரான் நமது ஜமாத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதற்குறிய பதில் கடிதம் கடந்த 2012.02.13 அன்று நமது ஜமாத்தினால் அனுப்பப்பட்டது.
இப்படியாக அனுப்பப்பட்ட அனைத்துக் கடிதங்களுக்கும் இறுதியான கடிதத்தை (2012.02.13) நமது ஜமாத்தான் அனுப்பியது. இறுதியாக ஸஹ்ரான் அவர்கள் அனுப்பிய விவாதப் பட்டியலில் தலைப்புத் தெளிவில்லாத விடயங்களை தெளிவு படுத்தும்படி ஜமாத் குறிப்பிட்ட கடிதத்தில் கேட்டிருந்தது.
ஆனால் இன்று வரைக்கும் சுமார் ஒன்பது மாதங்கள் கடந்தும் மவ்லவி ஸஹ்ரான் குறிப்பிட்ட கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை.
கடிதத்திற்கு பதில் அனுப்பாதவர் “ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தான் எங்களுக்கு பதில் அனுப்பவில்லை” என்று தனக்கு சாதகமான மக்கள் மத்தியிலும், பாமரர்கள் மத்தியிலும் ஓர் அவதூறுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றார்.
‘சல்லடை ஊசியைப் பார்த்து உனக்குப் பின் ஒரு ஓட்டை இருக்கிறது‘ என்று சொன்ன கதையாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் விவாதத்திற்கு வராமல் ஓட்டம் பிடிக்கிறது என்று இவர் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
உண்மை நிலவரத்தை அறிய விரும்பும் சகோதரர்கள் (கீழே நாம் வெளியிட்டள்ள) நமது ஜமாத்தினால் இறுதியாக அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பார்க்கவும்.
முடியுமானவர்கள் மவ்லவி ஸஹ்ரானிடம் குறிப்பிட்ட கடிதத்தை பிரின்ட் எடுத்துக் கொடுத்து அவரை பதிலளிக்க வைக்குமாறும், களத்திற்கு அழைத்து வருமாறும் அன்பாய் வேண்டுகின்றோம்.
ஸஹ்ரான் மவ்லவி இறுதியாக நமது ஜமாத்திற்கு அனுப்பிய கடிதமும் நாம் அனுப்பிய இறுதிக் கடிதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment