Thursday, October 04, 2007

யாருடைய பணத்தில் யார் பெருமை தேடிகொள்வது.

நமதூரில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எத்தைனை ஏழைகள் இருக்கிறாகள்.
From: Vaappu Durai < vaappudhurai@yahoo.com >
Date: Oct 3, 2007 3:30 PM
Subject: Re: PORTONOVO FITHRAA
அஸ்ஸலாமு அலைக்கும்

அபுதாபி மற்றும் துபாயில் வசிக்கும் பறங்கிப்பேட்டை சகோதரர்களுக்கும் மற்றும் இந்த மடலை மற்ற நாடுகளில் இருந்தும் பார்வையிடும் நமது பறங்கிப்பேட்டையய் சேர்ந்த சகோதரர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். அல்லாஹ்வின் உதவியைகொன்டு இந்த வருடம் நமதூரிலுள்ள ஓர் 90 சதவிகிதத்தினர் இன்று ஒற்றுமையுடன் அதாவது ஜமாத்துடன் ஒருங்கினைந்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

ஆனால் சில பீஜே வாதிகள் வருடம் வருடம் நமதூர் சகோதரர்களிடம் பித்ரா பணம் வசூலித்து அதை பீஜே அண்ணனுக்கு அனுப்பி விட்டு , பீஜே அண்ணன் பார்த்து ஏதாவது இந்த பறங்கிப்பேட்டை வாள் மக்களுக்கு பிச்சை போட்டாள் போதும் என்று விட்டுவிடுகின்றனர்.

பித்ரா பணம் என்பது என்ன அதை யாருக்கு கொடுக்க வேண்டும் யார் யாரெல்லாம் அதை வாங்க தகுதி பெற்றுளார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்த பீஜே வாதிகள் அதை எப்படி நமதூரிள் வளங்குகிறார்கள் என்பதை இன்ஷாஅல்லஹ் இப்போது பார்க்கலாம்.

பித்ரா பணம் எம்பது நமதூரிலுல்ல கருனாநிதி சாலையிலும் , ஆற்றங்கரை சாலையிலும் வுள்ள குடிசை வாசிகளுக்கு மட்டும்தான் சேர வேண்டும் என்பதைபோலவும் அவர்களை வரவலைத்து வரிசை படுத்தி பாரதிராஜ படம் எடுப்பதை போல வீடியோ படம் எடுத்து அதை வீடியோ சீடியா போட்டு அதை அவர்களுடைய பீஜே ஆன்லைன் வெப்சைட்டில் போட்டு அம்பளப்படுத்தி பெருமை தேடிகொள்கின்றனர்.
யாருடைய பணத்தில் யார் பெருமை தேடிகொள்வது.

இந்த பித்ரா பணம் என்ன பீஜே வாதிகளின் அப்பன் வீட்டு பணமா . ஒரு கையால் கொடுப்பதை மற்ற கைக்கு தெரியகூடாது என்று நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீசே இறுக்கின்றது என்பதை மறந்து செயல்ப்பட்டு கொண்டுருக்கிரார்கள்.

நமதூரில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எத்தைனை ஏழைகள் இருக்கிறாகள் , வரும் பெருநாளைக்கு தன்னுடைய மனைவி குழந்தைகளுக்கு ஒரு குறைந்த விலையிலான துணிகலை கூட எடுத்து கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த எத்தனை சகோதரர்கள் இன்று பித்ரா பணம் கொடுக்கவும் முடியாமல் வாங்கவும் முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றர்கள்.

சகோரர்களே, சிறிது சிந்தித்து பாருங்களேன் இதைபோல் உள்ளவர்கள், எப்படி இந்த டி என் டிஜே வழங்கும் பகிறங்க பித்றாவை பெறமுடியும். இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த வருடமாவது ஒற்றுமையுடன் கூடி ஏதோ நம்மால் முடிந்த தொகையையை வசூல்செய்து நமதூருக்கு அனுப்பி அங்கு வாடும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு உதவிட இதை பார்வையிடும் நமதூர் சகோதரர்கள் இன்ஷா அல்லாஹ் இந்த வருட பித்ரா பனத்தை நமதூர் பைத்துல்மா கமிட்டிகு அனுப்பி அல்லாஹ்வின் அருலை பெற்றிட வேண்டிகேட்டு கொள்கிரரோம்.

இன்ஷால்லாஹ் நாம் நமது பணமான பித்ரா பணத்தை நமதூர் சகோதரர்களுக்கு நாம் பகிர்ந்து கொடுப்பதை விட்டுவிட்டு , நாம் ஏன் நமது பணத்தை பீஜே மூலமும் பீஜேபி மூலமும் கொடுக்க வேன்டும். பீஜே யார் எங்கிருந்து வந்தார் இந்த பந்த பீஜே . ஏன் பீஜே மூலமாக பணம் கொடுத்தால்தான் , பித்ர ஏற்றுக்கொள்ள படுமா? , இதை ஏன் நமதூர் பீஜேயின் முறீதான வெட்க்கங்கெட்ட அறிவு ஜீவிகளுக்கு புரியா மாட்டேங்கிறது..

இப்படிதான் சென்ற வருடம் நமதூர் பீஜே வாதி ஒன்று கூறினாராம் , பறங்கிப்பேட்டை தியாகம் செஞ்ச பூமிடா அள்ளி எறங்கேட என்று சொன்னதாக சொல்லி அல்லாஹ்வை மறந்து விட்டு பீஜேயை தூக்கி புகழ்ந்து பேசியுள்ளார்.

அபுதாபியில் TNTJ யால் ஏர்ப்பாடு செய்யப்பட்டு உம்ரா செய்த சகோதரர்களுக்கே இன்னும் இந்த பீஜே வாதிகள் கனக்கு காட்டாமல் ஏமாற்றி வரும் இவர்களை நம்பி பித்ரா பணத்தை எப்படி கொடுப்பது.

No comments: