Thursday, December 14, 2006

கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

வளைகுடா வாழ் நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. குர்பானி கொடுக்க பொருளாதார வசதி இருக்கிறது அறுத்துப் பலி இட வசதி இல்லையே என்ற கவலையா? வேண்டாம் இனி அந்தக் கவலை. உங்கள் சார்பில் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை குர்பானி கொடுக்க தயாராக உள்ளது.

எல்லா வசதியும் இருக்கிறது. நமது குர்பானி இறைச்சியை வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தானே கொடுக்க முடிகிறது. வாங்குவதற்கு நம்மைச் சுற்றி எந்த ஏழையும் இல்லையே என ஏங்குகிறீர்களா? நீங்கள் கொடுக்கும் குர்பானி இறைச்சி ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஏக்கத்தைப் போக்கிட உங்கள் இரக்க உள்ளத்தின் நல் எண்ணத்தை நிறை வேற்றிட த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

நீங்கள் கொடுக்க விரும்பும் குர்பானி ஆடு மாடுகளுக்குரிய தொகையை த.மு.மு.க. மேலப்பாளையம் கிளைக்கு உடனே அனுப்பி வையுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும் இன்ஷh அல்லாஹ்.

தனியாகக் குர்பானி கொடுக்க வசதியில்லையே என்ற தவிப்பு வேண்டாம். இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையான கூட்டுக் குர்பானி கொடுத்து நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக கூட்டுக் குர்பானி திட்டத்தையும் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை வைத்துள்ளது. கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

தொடர்புக்கு:-
நகர தலைவர் ரசூல் மைதீன் 0091-9943144666
நகரச் செயலாளர் மைதீன் 0091-9362995475
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை ஈ-மெயில் tmmkmpm@yahoo.co.in,

யு.ஏ.இ.யில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள மைதீன் ரஸாக் 050 - 5755341

Sunday, December 10, 2006

டாக்டர் வேலாயுதம் பிள்ளை மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்.


இலவச மருத்துவ முகாமுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் மவுலவி ஜே. எஸ். ரிபாஈ பாஸி ரஷhதி தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெல்லை மாவட்ட வர்த்தக அணி தலைவர் உஸ்மான் கான் உரையாற்றினார்.

Thursday, December 07, 2006

2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு டிசம்பர் 6 களிலும் மேலப்பாளையத்தின் உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெகுண்டெலுந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவித்தனர். கறுப்புக் கொடிகளைக் கட்டி கடைகளை அடைத்து பந்த் நடத்தி பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தனர். இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் கடைகளை அடைத்து பந்த் நடத்தி எதிர்ப்பு காட்டியுள்ளனர். மேலப்பாளையம் போன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். இது அன்றி எந்த அமைப்புகளும் 92க்குப் பிறகு அமைப்பின் சார்பில் எந்த டிசம்பர் 6 ரிலும் பாபரி மஸ்ஜித் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை.
அது கிழட்டு நரிகளின் கூடாரமாக ஆகி விட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில ராணுவத்தின் துப்பாக்கி முன் ஆடையை தூக்கிக் காட்டியும் நெஞ்சை நிமிர்த்துக் காட்டியும் சுடுடா என வீரியத்துடன் கர்ஜித்த சிங்கங்கள் இருந்த முஸ்லிம் லீக் இருந்தது. 92இல் அது கிழட்டு சிங்கங்களின் கூடாரமாகக் கூட இருக்கவில்லை. கிழட்டு சிங்கங்களின் கூடாரமாக ஆகியிருந்தால் கூட அது சிங்கங்களின் கூடாரம் என்ற வீரியத்துடன் எதிரிகள் அச்சப்படும் வண்ணம் கர்ஜித்திருப்பர். ஆனால் அது கிழட்டு குள்ள நரிகளின் கூடாரமாக ஆகி இருந்தது. எனவே சடங்கு சம்பிரதாயத்துக்காக 92இல் மட்டும் அறிக்கை விட்டனர்.
எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது.
அதனால் 92க்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம் லீக் மய்யத் லீக்கானது. எனவே டிசம்பர் 6இல் கூட பாபரி மஸ்ஜித் பற்றி சட்டமன்றம் பாராளுமன்றம் உட்பட நாட்டில் எங்குமே பேச நாதி இல்லை என்ற நிலை ஆனது. அல்லாஹ்வின் அருளால் 1995இல் வீறு கொண்டெழுந்தவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்ட த.மு.மு.க. உருவானது. த.மு.மு.க. தான் முதன் முதலில் அமைப்பு சார்பான எதிர்ப்பைக் காட்டியது. பாபரி மஸ்ஜித்துக்காக தமிழகத்தில் த.மு.மு.க. குரல் எழுப்பிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6களில் சட்ட மன்றம் பாராளுமன்றம் என எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது. சட்ட மன்றத்தில் தேசிய லீக் லத்தீப் ஸாஹிபும் பாராளுமன்றத்தில் பனாத்வாலாவும் குரல் கொடுத்தனர்.
பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி.
1996இல் இருந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து லோக்சபாவையும் ராஜ்யசபாவையும் ஒத்தி வைக்குமாறு இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இதை 7 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து செய்து வந்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி என்ற செய்தி ஊடகங்களில் கண்டு வந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தமிழ்நாட்டிலிருந்து பாராளு மன்றத்துக்கு சென்றிருக்கவில்லை.
2004இல் எதுவும் நடக்கவில்லை.
15ஆண்டுகளுக்கு (1989க்குப) பிறகு 2004இல் மு.லீக் தலைவரான காதர் மைதீன் என்பவர் உட்பட 2முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். உணர்வுள்ள முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வின் பேராதரவில் வென்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து விட்டனர். இனி அவர்கள் கர்ஜிப்பார்கள் என்று இடதுசாரிகள் எண்ணினார்களோ என்னவோ? 2004இல் இடதுசாரிகள் எதுவும் பேசவில்லை. காதர் மைதீனோ கிதர்(எங்கே) மைதீன் (என்று) ஆகி விட்டார். எனவே இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் எதுவும் நடக்கவில்லை.
பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
இருந்தாலும் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்திய பேரணி. த.மு.மு.க. தலைவர்கள் பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பாபரி மஸ்ஜித்தைக் கட்டித் தரக் கோரினார்கள். தமிழக எம்.பி.க்களில் முஸ்லிம் அல்லாத எம்.பி.க்களும் த.மு.மு.க. தலைமையின் கீழ் டெல்லியில் அணிவகுத்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்; அமளி நடைபெறாதது சமுதாயத்துக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. த.மு.மு.க.வின் டெல்லி பேரணி மக்களவை மாநிலங்களவை அமளிகளை விட பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
சமுதாயம் அமைதி பெற்றது.
2005லும் த.மு.மு.க. டெல்லி செல்லும் என்று சமுதாயம் எதிர் பார்த்தது. த.மு.மு.க. அறிவிக்கும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பலர் குளிர் ஆடைகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர். சில தூர நோக்கத்துடன் மீண்டும் டெல்லி சென்று போராடும் திட்டத்தை த.மு.மு.க. தவிர்த்தது. 2005லும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்த போராட்டங்களை மட்டும் கண்டு சமுதாயம் அமைதி பெற்றது.
இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
2001-2006 வரையிலான சட்ட சபையில் மு.லீக் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறார்கள் தேசிய லீக் லத்தீப்புக்குப் பிறகு மு.லீக்கர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக டிசம்பர் 6இல் சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று பலர் நம்பி இருந்தனர். (நாம் நம்பவில்லை என்பது தனி விஷயம்.) மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக சட்ட மன்றம் அமளியானது. ஆனால் அது அ.தி.மு.க.வினர் கொண்டு வந்த இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
2006 டிசம்பர் 6 மதியம் தொலைக் காட்சிகளில் மக்களவை மாநிலங்களவை அமளி காட்சிகளைக் காட்டினார்கள். ஆ பாராளு மன்றத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலிக்கிறது என்று மகிழ்ந்தார்கள். தலைப்புச் செய்தியிலும் ஷஷபாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி மக்களவை மாநிலங்களவைகளில் அமளி என்றுதான் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு காட்டி விட்டார்கள் என்றே நம்பி மகிழ்ந்தது நம் சமுதாயம். விரிவான செய்தியைக் கேட்டதும் நம் சமுதாயத்தவர் மனங்கள் இடிந்து விட்டன. வழக்கம் போல் நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
இக்கதி ஏற்பட்டிருக்குமா?
7 ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து அமளி நடந்த பாராளுமன்றம் திசை திரும்பி விட்டது. பாபரி மஸ்ஜிதை கட்டித் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய பாராளு மன்றத்தில் பள்ளி இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற குரல் ஒலித்து திசை திரும்பியுள்ளது. உயிரை பணயம் வைத்து உழைக்கும் த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பின் மூலம் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் யார் யாரையோ அனுப்பி விட்டதால்தான் இக்கதி. த.மு.மு.க. சார்பிலான உண்மையான முஸ்லிம்கள் உணர்வுள்ள முஸ்லிம்கள் சுய சின்னத்தில் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் சென்றிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்குமா?
பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி.
அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Tuesday, December 05, 2006

1992 டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்து இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள் 1992 ஆம் ஆண்டு தமிழத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மேலப்பாளையத்தில் மட்டும்தான் துப்பாக்கி சூடு நடந்தது.

பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.

1992 டிசம்பர் 7இல் நடந்த அந்த துப்பாக்கி சூட்டுக்கு இறையாகி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்;. 25 இஸ்லாமிய இளைஞர்கள் படு காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த 40 இஸ்லாமிய இளைஞர்கள் மீது அநியாயமாக பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணமாக உதவிட இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் அனுப்பிக் கொடுத்தோம்.

கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில்

மேலும் வழக்கு வகைகளுக்கு, சிறையில் உள்ளவர்களை அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் கூறி வருவதற்கு, கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்தி கொடுத்திட என அவ்வப்போது பணம் அனுப்பிக் கொடுத்தோம். மொத்தம் 3 இலட்சம் ரூபாய் வரை அனுப்பிக் கொடுத்து உதவினோம்.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ.

இந்த உதவிகளை முன்னின்று செய்திட முதலில் மவுலவி பி.ஜெ.யை அணுகினோம். பணத்தை உங்களுக்கு அனுப்பித் தருகிறோம். ஜாக் சார்பில் நீங்கள் வினியோகியுங்கள். இதன் மூலம் தவ்ஹீதுவாதிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்புகள் நீங்கும் என்றோம். தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ. மறுத்து விட்டார்.

கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர் பி.ஜெ. என்பதை என்றும் உறுதியாகக் கூறுவோம். இதுபோன்ற உதவிகளை முன்னின்று செய்ய மறுத்த பி.ஜெ. இன்று தகுதியற்ற உதவிகளை செய்வதுபோல் காட்டி டி.வி. கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே இதற்கு போதிய ஆதாரங்களாகும். இதை 6-4-2002இல் பி.ஜெ.க்கு எழுதிய 25 பக்க கடிதங்கள் என்று பிரபலமான கடிதத்திலும் சுட்டிக் காட்டியுள்ளோம். http://www.pkblogs.com/mdfazlulilahi.blogspot.com/2002/04/blog-post.html

சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன.

1992 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னின்று செய்திட பி.ஜெ. மறுத்ததால் மேலப்பாளையம் சர்வ கட்சியினர் மூலம் உதவினோம். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி குற்றவாளிகளுக்கு உதவி விட்டார் என சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன. போலீஸ் விசாரணை ஐ.பி. என பிரச்சனை ஆனது. இதனால் எமது தாயகப் பயணம் காலதமதமானது. 1991 ஜுலையில் துபை வந்த நாம் இதை சரி செய்து தயாகம் செல்ல 1994 ஆகஸ்டு ஆனது. தாயகம் சென்ற நாம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை நேரில் கண்டு ஆறுதல் கூறினோம்.

எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

அப்பொழுது ஒருவர் வந்து "என் பெயர் அமானுல்லாஹ். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு யாரும் உதவவில்லை. அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் அனுப்பிய உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. நான் போய் கேட்டதற்கு இலாஹி அனுப்பிய லிஸ்ட்டிலும் உன் பெயர் இல்லை என கூறி விட்டார்கள்" என்றார். மேலப்பாளையத்தைச் சார்ந்த அவர் 1992 டிசம்பர் மாதம் பம்பாயில் இருந்துள்ளார். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட அவர் உயிரைக் காத்துக் கொள்ள மேலப்பாளையம் வந்து விட்டார். அதனால் மராட்டிய அரசு உதவி, தமிழக அரசு உதவி உட்பட எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

எனவே JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் அவருக்கு உதவிகள் செய்தோம். அவரது நெற்றியில் பாய்ந்த குண்டு அப்படியே தலையில் மூளைக்கு அருகில் தங்கி விட்டது. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மூளைக்கு அருகில் அந்த குண்டு இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து எடுப்பது மிக மிக கடினம். ஆபரேஷன் செய்ய அவரிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

ஆபரேஷன் செய்து குண்டை எடுக்கும்போது மூளையின் ஏதாவது ஒரு நரம்பு பாதித்து விட்டால் காலோ, கையோ, கண்ணோ செயல் இழந்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். குடும்பத்தாரிடம் கலந்து விட்டு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம். ஆபரேஷன் செய்யப்பட்டது. குண்டை எடுக்க முடியவில்லை. அவரது மனம் பாதித்து விடக் கூடாது என்பதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார்.

இருந்தாலும் காலப் போக்கில் குண்டு எடுக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார். அடிக்கடி பிக்ஸ் வந்து விடுகிறது. விலை உயர்ந்த 400 ரூபாய் ஊசி போட்டால் ஓரிரு வாரங்களுக்கு பிக்ஸ் வருவதில்லை. இந்த ஊசி போடக் கூட வழி இல்லாமல் அவ்வப்போது யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார். 1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?

குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947இல் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. அதன் பிறகு 1992 டிசம்பரில் அதே ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு இழுத்துச் சென்ற பரிதாப காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்தன.

500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த அவலங்களைக் கண்ட நாம் யு.ஏ.இ. வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினோம். இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் அரசியல் அளவில் ஒரே அமைப்பின் கீழ் ஒன்று படுத்த வேண்டுதல் என்ற தலைப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதி இருந்தோம். 10-12-1992 அன்று எழுதிய அந்தக் கடிதக் காப்பிகளை பி.ஜெ, சமது சாகிப், லத்தீப் சாகிப், சுலைமான்சேட், பனாத்வாலா, மு.லீக் சமது அணி, முஸ்லிம் லீக் லத்தீப் அணி என நமது சமுதாயத்தின் எல்லா அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்குமாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம். (குறிப்பு: அப்பொழுது த.மு.மு.க. இருக்கவில்லை)

உண்மையான சமுதாய பற்றாளர் யார்?

சமுதாய ஒற்றுமை நோக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கு யாரிடமிருந்தும் பதில் வரவே இல்லை. ஒரே ஒருவரிடமிருந்துதான் பதில் வந்தது. அந்த ஒரே ஒருவர் யாராக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தமர், பெருந்தகை, இவர்தான் உண்மையான மில்லத் என்று நீங்கள் எண்ணக் கூடியவர்களில் யாராவது இருப்பார்களா? நினைத்துப் பாருங்கள். உண்மையான சமுதாய பற்றாளர் யார் என்ற விடை காண http://fazlulilahi.blogspot.com/2006/12/blog-post_04.html
நாம் எழுதிய கடிதத்தைக் காணவு http://fazlulilahi.blogspot.com/2006/12/10-12-1992.html
அன்புடன்: காஅ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.