Friday, September 15, 2006

கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹிம். 16-09-2006
உண்மை பிரச்சனை முனீர்ஹுதாவா? சிறைவாசிகள் விடுதலையா? சதியின் பின்னணியில் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக இருந்தவர் செய்யது முனீர் ஹுதா. ஜெயலலிதா ஆட்சியின் போது சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர் முஸ்லிம் என்ற காரணத்துக்காக நீக்கி ஓரங்கட்டப்பட்டவர்களில் செய்யது முனீர் ஹுதாவும் ஒருவர். முனீர் ஹுதாவை நீக்க அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை இட்டுக் கட்டினார் ஜெயலலிதா. முனீர் ஹுதா. முறையாக நீதி மன்றம் சென்றார். நீதி மன்றம் முனீர் ஹுதா. குற்றமற்றவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா அரசு மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.
அதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.
செய்யது முனீர் ஹுதாவை மீண்டும் பணியில் அமர்த்தக் கூறியது நீதித்துறை. இந்திய ஜனாதிபதியும் ஆணை பிறப்பித்தார். எதனையும் கண்டு கொள்ளாது அவமதித்த ஜெயலலிதா எந்த மறு விளக்கமும் கூறவில்லை. அது பற்றி பேசவே இல்லை. முனீர் ஹுதாவை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டார். ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத செயலை த.மு.மு.க. கண்டித்து விமர்சனம் செய்தது. அதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.
அப்பொழுதும் ஜெயலலிதா தனது செல்ல வாயை திறக்கவில்லை.
சட்ட மன்ற பொதுத் தேர்தல் வந்தது. செய்யது முனீர் ஹுதாவை ஜெயலலிதா நீக்கியது அநியாயம் என்பதை விளக்கி தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் த.மு.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள். அப்பொழுதும் ஜெயலலிதா எந்த பதிலும் சொல்லவில்லை. த.மு.மு.க.வின் இந்த பிரச்சாரத்தின் பயனாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முனீர் ஹுதா முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டார். அப்பொழுதும் ஜெயலலிதா தனது செல்ல வாயை திறக்கவில்லை.
விவகாரம் முனீர் ஹுதா அல்ல.
முனீர் ஹுதாதான் பிரச்சனை என்றால் நீதி மன்ற தீர்ப்பு, த.மு.மு.க.வின் எதிர்ப்பு, இந்திய ஜனாதிபதியின் ஆணை என இவற்றில் எதற்காவது மறுமொழி கூறி இருப்பார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டதும் ஆட வேண்டிய ஆட்டங்களை ஆடி இருப்பார். பாட வேண்டிய பாட்டுக்களை பாடி இருப்பார். அப்பொழுதும் எந்த விவகாரமும் பண்ணவில்லை. முனீர் ஹுதா முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆகி நூறு நாட்கள் ஆன பின் இப்பொழுதுதான் அவரை ஒரு விவகாரமாக ஆக்கி பேசுகிறார். எனவே விவகாரம் முனீர் ஹுதா அல்ல. அப்படியானால் விவகாரம் என்ன? அதன் பின்னணி என்ன?
ஜட்ஜுகளுக்கு பீதியை ஏற்படுத்தி விட்டார்.
அப்துல் நாஸர் மதானிக்கு ஜாமீன் கிடைத்து விடும். அவர் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஏற்பட்டு விட்டது. இதை தடுத்து நிறுத்த ஆட்சி அதிகாரம் ஜெயலலிதாவிடம் இல்லை. எனவே தான் முனீர் ஹுதாவை விவகாரமாக ஆக்கி சூழ்ச்சி செய்து விட்டார் ஜெயலலிதா. அப்துல் நாஸர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளித்த உள்துறைச் செயலாளராக இருந்தவருக்கே தேச துரோகி பட்டமா? அப்படியானால் ஜாமீன் அளித்தால் நமக்கு என்ன பட்டம் ஜெ. வழங்குவாறோ? என ஜட்ஜுகளுக்கு பீதியை ஏற்படுத்தி விட்டார்.
கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு.
இந்த விமர்சன சூழலில் தமிழக அரசு மதானி விடுதலையில் நேரடியாக தலையிட முடியாது. தலையிட்டால் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. போன்ற சங்பரிவார் அமைப்புகள் பிரச்சனை பண்ணும். எனவே தமிழக அரசும் தலையிட முடியாத அளவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் சூழ்ச்சிக்காரி ஜெயலலிதா. சிறைவாசிகளின் விடுதலைக்காக தி.மு.க. அரசிடம் சிபாரிசு செய்து கொண்டிருக்கும் அமைப்பு த.மு.மு.க. இது பகிரங்கமானது. சிறைவாசிகளின் விடுதலைக்கு தடை போட்டுக் கொண்டிருக்கும் கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு இருக்கிறது. அதுதான் இப்பொழுது ஜெயலலிதாவை சிறைவாசிகளுக்கு எதிராக இயக்கிக் கொண்டிருக்கிறது. அது அந்தரங்கமானது. அந்த அமைப்பு எது என்பதை நான் எழுத விரும்பவில்லை. பின்னணியில் யார்? என்பதற்கு க்ளு தருகிறேன் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்து விட்டீர்களா?
மதானி விடுதலை ஆகி விட்டால் அடுத்து அன்சாரி, கோவை பாட்சா என அடுத்தடுத்து முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரும் வரிசையாக விடுதலையாகி விடுவார்கள். ஜெ. விடுதலை செய்யாதவர்களை கருணாநிதி விடுதலை செய்து விட்டால் த.மு.மு.க.வுக்கு அந்த புகழ் கிடைத்து விடும். இதை விரும்பாத மார்க்க அறிஞன் உருவத்தில் ஒரு ஷய்த்தான் உலவி வருகிறான். யார் என்று புரிந்து விட்டீர்களா? ஜெ.க்கு முன்னால் ஒரு எழுத்தைப் போட்டால் வரும் ஷய்த்தான் தான். ஓ தெளிவாகப் புரிந்து விட்டீர்களா? எடுத்தெறியப்பட்ட ஷய்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.

No comments: