[05/02 07:10] Mohamed Rafeek:
1
300 வருஷங்களுக்கு முன்னால்... கடிகாரங்கள் பரவலாக புழக்கத்துக்கு வந்தபோது, அவற்றில் துல்லியமாகவும் இலகுவாகவும் நேரம்பார்த்து பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி... 'வானத்தில் சூரியனை பார்த்து பொருட்களின் நிழலின் நீளத்தை அளந்து பார்த்துதான் பாங்கு சொல்லணும், அதுதான் சுன்னா' என்று கூறி உலகளவில் உலமாக்களால் கடிகாரத்துக்கு தடை விதித்து ஃபத்வா இருந்தது.(இன்று கடிகாரங்கள் இல்லாத பள்ளிவாசல்கள் இல்லை)
2.
150 வருஷங்களுக்கு முன்னர், நேரத்தை கணக்கிட்டு தொழுகை பாங்கு அட்டவணையை... கடிகார நேரமாக எண்களில் வருஷத்துக்கு அச்சடித்துப்போட்டு அந்த கடிகார நேர அட்டவணைப்படி பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று வேலூர் பாக்கியத்துல் ஸாலிஹாத்தின் தொழுகை கால அட்டவணைதான் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொங்கியவண்ணம் அது பாங்கு சொல்ல பின்பற்றப்படுகிறது)
3.
60 வருஷங்களுக்கு முன்னர் பள்ளிவாசலில் மைக் ஸ்பீக்கர் செட் பயன்படுத்துவது ஹராமெனக்கூறி உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (அப்போது பாப் இசை பாடகர்கள் அல்லது சினிமா பின்னணி பாடகர்கள் பாடலை மைக் பிடித்து பாடி அதை கேட்க பயன்படும் வஸ்து ரேடியோ ஸ்பீக்கர் என்பதால் அவற்றின் மீது உலமாக்களுக்கு ஒருவித வெறுப்பு இருந்தது. இன்று இமாம் மைக் ஸ்பீக்கர் செட்டில்தான் தொழ வைக்கிறார் )
4.
40 வருஷங்களுக்கு முன்னால் ஃபோட்டோ ஐடி கார்டுடன் பள்ளி வாசலுக்குள் தொழச்செல்ல முடியாது. காரணம் அவற்றில் உருவப்படம் இருப்பதால் ஐடிகார்டுகள் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. இன்று இமாம் ஃபோட்டோ ஐடி கார்டோடு தொழ வைக்கிறார்.
5.
30 வருஷங்களுக்கு முன்னால் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குள் நிக்காஹ் நிகழ்ச்சிகளை படம்பிடிக்க நுழைய முடியாது. காரணம், டிவி விசிஆர் வீடியோ கேசட் எல்லாம் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று இமாமின் ஜும்மா சொற்பொழிவு வீடியோ எடுக்கப்படுகிறது. டிவியில் ஒளிபரப்பப்படுகிறது)
6.
நான் சவூதிக்கு வந்த புதிதில்... 2004ல் கேமரா மொபைல் ஃபோன்களுக்கு விற்க வாங்க சவுதிக்குள் கொண்டுவர தடை இருந்தது.(கேமராவுக்கு தடை இல்லை) 2005ல் அந்த தடை நீக்கப்பட்டது. என்றாலும், கேமரா மொபைல் போன்களை பார்த்து முத்தவாக்கள் 'ஷைத்தான்' என்பர். அப்போது வெளிவந்த ஒரு நோக்கியா கேமரா மொபைல் (Nokia 6680) ஃபோனின் அரபிப்பெயர் : 'ஷைத்தான் அல் கபீர்'. கபீர் என்றால் பெரிது. இன்று கேமரா வாய்த்த ஸ்மார்ட் ஃபோன் இல்லாத இமாம்களே இல்லை எனலாம்)
7.
தற்போது, 'வானியல் அறிவியல் படி கண்ணால் காணக்கூடிய' அளவிலான நம் பிறையை நம் நாட்டில் மேகம் மறைத்து காணமுடியாத நிலையில், நமக்கு கிழக்குப்புறம் உள்ள பல நாடுகள் அவற்றை ஆல்ரெடி மேகம் மறைக்காமல் பார்த்து விட்டதாக லைவ் வீடியோ & ஃபோட்டோ அப்டேட்ஸ் அறிவித்த செய்திகளை மதியம் - மாலை முதலே நாம் நமது கைபேசியில் பார்த்திருந்தாலும்... நமக்குப்பின்னே மேலை நாட்டினர் அதே பிறையை மேகம் மறைக்காமல் பார்த்துவிட்டதாக இஷா தாண்டியும் நம் கைபேசிக்கு பிரேக்கிங் நியூஸ் வந்தாலும்... நடுவே உள்ள நம் நாடு மட்டும் 'நாங்கள் பிறை காணவில்லை' என்று தூங்கப்போவதும் அல்லது பெருநாள் கொண்டாட போகாமல் 30ம் நோன்பு வைக்க ஸஹர் செய்யப்போவதும்... இன்னும் நடந்துகொண்டேதான் உள்ளன. 'கண்ணால் காணக்கூடிய பிறை' இந்த மாதத்தில் இந்தந்த நாடுகளில் இருந்து துவங்குகிறது... என்ற ஸ்மார்ட் போனில் 'ஹிலால் சைட்டிங் ஆப்ஸ்' பார்த்து சந்தேகம் இல்லாத புரிதல் ஏற்பட்டு, அதன்படி முதன்முதலில் மேகம் மறைக்காமல் பார்த்த பிறையை அந்த நாட்டிலிருந்து மற்ற மேற்குப்புற நாடுகள் அனைத்தும் பிறை அறிவிப்பாக ஏற்று, என்றைக்கு பிறை தமது பிறைகளை இப்படி அறிவிக்கப்போகிறோமோ... தெரியவில்லை.
அதுவரை தொடர்ந்து மூன்று மாதங்களையும் மேகம் மறைத்துவிட்டது என்று கூறி முப்பதாக்கிக்கொண்டு மார்க்கத்தில் தவறானதை தவறான நாட்களில் செய்துகொண்டு அறியாமையில்தான் வீழ்ந்து கிடப்போம் போல. மேகம் மறைக்காத கிரகணங்களை கண்டு 14ம் இரவையும் 28/29 ம் பகலையும் நமது பிறை நாட்காட்டியில் சரி செய்துகொள்ள மாட்டோமா..? -முஹம்மத் ஆஷிக்
[05/02 07:17] Mohamed Rafeek: பிரையை மட்டும் பார்த்த பிறகுதான் பின்பற்றுவோம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பவர்களெல்லாம் கிரகணம் ஏற்படும் ஒரு நாளைக்கு முன்பே கிரகணத் தொழுகைக்காக அழைப்பு கொடுத்தது எந்த அடிப்படை என்று நாம் தான் சிந்தித்து உண்மையை விளங்கி செயல்பட வேண்டும்
No comments:
Post a Comment