இணைய அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தேதீரும்!
இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க் பித்அத்தான விடயங்கள் போலி மார்க்க அறிஞர்களால் சாதாரண மக்களின் மார்க்க அறியாமையைப் பயன்படுத்தி வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக இஸ்லாத்தின் பெயரால் போதிக்கப்பட்டிருந்த காலகட்டம். தாம் கற்ற கல்வியை உரிய நேரத்தில் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அரபுநாட்டு பட்டதாரிகளான மக்கிகளும் மதனிகளும் களமும் வளமும் வேண்டுமென்பதற்காக சத்தியத்தை மறைத்துக் கொண்டிருந்தனர்.
இக்காலகட்டத்தில் நான் ஜாமிஅத்துல் பலாஹ் மத்ரஸாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றேன்.
மார்க்கத்திற்கு மாற்றமாக மக்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை அறிந்தும் அறியாதவர்களைப் போல் உலமாக்கள் பாவனை செய்யும் அவல நிலையைக் கண்டு இஸ்லாத்தின் தூயஅடிப்டைகளான அல்குர்ஆன், ஆதாரபூர்மான ஹதீஸ்களின் அடிப்படையில் பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பே இஸ்லாமிக் சென்டராகும்.
இஸ்லாத்திற்கு மாற்றமான அத்வைதம், கப்ரு வணக்கம், ஸுஃபித்துவச் சிந்தனைகளுக்கு மக்கள் அடிமைப்பட்டு வழிகெட்ட ஞானவான்களிடமும் சேகுமார்களிடமும் தங்களது ஈமானை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நமது வீரியமிக்க, கூட்டல், குறத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற மார்க்கமுறைகேடுகளைத் தவிர்த்துச் செய்யப்பட்ட பிரச்சாரத்தால் ஏகத்துவத்தின் பால் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
இப்போது மக்கள் கூட்டத்தைக் கண்ட இஸ்லாமிக் சென்டர் ஊர் ஒற்றுமை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும், இப்போது இதுவெல்லாம் வேண்டாம் என கொண்ட கொள்கையை விட்டு பித்அத்வாதிகளோடு கைகோர்க்கின்றது.
அதன் பிற்பாடு அவ்வேளையில் எம்மோடு இருந்த சுமார் இருபத்தி இரண்டு சகோதரர்களும், உலமாக்களும் பல்வேறு அமர்வுகளை நடாத்தி தீர்க்கமான ஒரு முடிவிற்கு வந்தோம். அதாவது எமக்கு சத்தியக்கொள்கை தான் அதிமுக்கியமானது. சத்தியத்தைப் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் இடைநடுவினிலே கொள்கையை விட்டுத் தடம்புரளுவதற்கு என்ன காரணம் என மிகவும் நுணுக்கமாக ஆராய்கின்றோம்.
இஸ்லாமிக் சென்டர் கொள்கையை விட்டு சறுக்கியவுடன் களமும் வளமும் கிடைத்தால் கருத்துக்களை மாற்றுகின்ற சதிகாரர்களிடமிருந்து சத்தியத்தைக் காப்பதற்காகவும் எதிர்ப்புகளைக்கண்டு சத்தியத்தை மறைக்காமல் சத்தியமென்றால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து அதனை மறுத்தாலும் மக்கள் எதிர்ப்புக்காய் சத்தியத்தில் சமரசம் செய்யக் கூடாது என்பதற்காவும் நாம் உருவாக்கிய அமைப்பே தாருல் அதர் அத்தஅவிய்யாவாகும்.
இக்காலகட்டத்தில் சதிகாரர்களின் சதித்திட்டத்தினால் போலியான காரணங்கள் முனவைக்கப்பட்டு ஏகத்துவக் கொள்கைக்காக ஜாமிஅத்துல் பலாஹ் மத்ரஸாவிலிருந்தும் விலக்கப்படுகின்றேன்.
இப்படி நாம் பல துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்தாலும் எதிர்ப்புக்கள், சோதனைகளை துச்சமென நினைத்து தாருல் அதர் மூலம் பகிரங்கமாக சத்தியத்தைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இப்படி இறைமார்க்கத்தை அல்லாஹ் இறக்கியதுபோல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், முஸ்லிம் சமூகத்தை அசிங்கப்படுத்தும் பெண்களுக்கு எதிரான சீதனக்கொடுமைக்கு எதிராக நாம் பிரச்சாரம் மேற்கொள்கின்றோம். ஆனால், தாருல் அதர் நிர்வாகம் முழுக்க முழுக்க சீதனத்திலிருக்கின்றது. ஒன்று நிர்வாகிகள் சீதனத்திலிருந்து தூய்மையாகுங்கள் அல்லது சீதனமின்றி திருமணம் செய்த இளைஞர்கள் நமது அமைப்பில் இருக்கின்றார்கள் அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுங்கள் என கேட்கின்றோம். பதவி மோகம் பிடித்த தாருல் அதர் நிர்வாகிகள் சமூகக் கொடுமையான சீதனத்திலிருந்து நீங்கவுமில்லை. நிர்வாகத்திலிருந்து நீங்கவுமிலலை.
இந்நிலையில் பெண்களுக்கெதிரான சீதனக்கொடுமையை நியாயப்டுத்தி சத்தியத்தில் சமரசம் செய்த தாருல் அதரிலிருந்து நானும், சைனி மௌலவி, தௌபீக் மௌலவி, சபீர் மௌலவி, ஷாபி மௌலவியும் கொள்கைச் சகோதரர்களும் உடனடியாக வெளியேறுகின்றோம்.
அதன் பிற்பாடு அல்லாஹ்விற்கு சொந்தமான பூமியிது. அதில் மனிதன் நிறைவான சுதந்திரத்துடன் கலப்பற்ற தூய்மையான முறையில் அவனது மார்க்கத்தை எங்கும் பிரச்சாரம் செய்யமுடியும் என்பதற்காக காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத் என்கின்ற அமைப்பை உருவாக்குகின்றோம். அதற்கு தலைவராக உபைத் , செயலாளராக அஸ்மி (அமானா) பொருளாளராக உவைஸ் (அமானா) நியமிக்கின்றோம்.
தூய மார்க்கத்தை கூட்டல், குறைத்தல், மழுப்பல் இன்றி அப்படியே ஒப்புவிக்கவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதே காத்தான்குடி தவ்ஹீத் ஜமாஅத்தாகும். அதன் நோக்கத்திற்கு மாற்றமாக மேற்குறித்த நபர்கள் தொடர்ச்சியாக மந்தமாகச் செயற்பட்டு வந்ததனாலும், இவர்களுக்கு கொடுத்திருந்த காலஅவகாசத்தின்படி ஒருவருடத்திற்குள் பகிரங்க ஹராம்களான சீதனம் மற்றும் வட்டியிலிருந்து தூய்மையாகிக் கொள்ளாதாலும், ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதாலும், பதவியை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டதாலுமே குறித்த மூவரையும் அமைப்பின் சகலசெயற்பாடுகளிலிருந்தும் முற்றாக நீக்கி அமைப்பைத் தூய்மைப்படுத்தியுள்ளோம் என்பதைக் கொள்கைச் சகோதரர்களுக்குத் தெரிவத்துக் கொள்கின்றோம்.
ஆனால் இதற்கு மாற்றமாக இவர்கள் தொடர்ச்சியாக என்மீது அவதூறுகளைக் கூறிவருவார்களாயின் இவர்களுடன் பகிரங்கமாக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, அழிவுச் சத்தியப்பிரமாணம் (முபாஹலா) செய்ய அழைப்பு விடுக்கின்றேன். கூற்றில் உண்மையாளர்கலென்றால் அவர்கள் அழிவுச் சத்தியப் பிரமாணத்திற்கு முன்வரட்டும். இல்லாத பட்சத்தில் இம்மூவரையும் பற்றிய ஆதாரங்கள், ஆவணங்களை வெளியிட்டு இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டியேற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்னும் காத்தான்குடி தவ்ஹீத் ஜமாஅத் தங்களுக்குச் சொந்தமான அமைப்பு என ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட மூவரும் வெளியில் கூறித்திரிவதாலும், அறிஞர் பி.ஜெயினுலாப்தீன் (உலவி)அவர்களுடன் அக்குரணை தவ்ஹீத் ஜமாஅத்தின் மத்தியஸ்தத்துடன் பலகட்டப் பேச்சுவாரத்தைகளுக்குப் பின் கொள்கையளவில் உடன்பாடு காணப்பட்டுள்ளதால் TNTJ யின் இலங்கைக் கிளையான SLTJயின் காத்தான்குடிக் கிளையாக எமது அமைப்பு தொடர்ந்தும் செயற்பட தீர்மானித்துள்ளோம். ஆதலால் காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கி வந்த நாம் SLTJ-KATTANKUDY BRANCH ஆக, அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில் அதில் மனித சுய, விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கூட்டல், குறைத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற மார்க்கமுறைகேடுகளைத்தவிர்த்து உள்ளதை உள்ளபடி பிரச்சாரம் செய்யவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் அடிப்படை என்று கூறிக் கொண்டிருந்த தாருல் அதர் ஒரு தனிமனிதன் அமைப்பிலிருந்து வெளியேறியவுடன், வஹி அடிப்படையில் இல்லாத ஸஹாபாக்களின் கூற்றுக்கள், இஜ்மா, கியாஸ் போன்றவையும் மார்க்க அடிப்படைகள்தான் என வாதிடக்கூடியர்களுடன், இஸ்லாத்திற்கு எதிரான பெண்கொடுமையான சீதனம் எனும் அநாச்சாரத்தை முன்னின்று நடாத்தி வைக்கும் அரபுநாட்டு பட்டதாரிகளுடன் அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கத்தில் விட்டுக் கொடுத்து, “காத்தான் குடி தௌஹீத் அமைப்புகள் எல்லாம் கூட்டமைப்பு” என்று போலிப் பெயரில் சத்தியத்தில் சமரசம் செய்து கொண்டுள்ள அவல நிலையைக் காண்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகைய கொள்கைச் சறுக்கள்கள், தடம்புரளள்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டும்.
காலம் கடந்தாலும் பொய் உண்மையாகாது. உண்மை பொய்யாகாது. இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ச்சியாக உண்மைகள் தெளிவுபடுத்தப்படும்.
மௌலவி எம்.சீ.எம். ஸஹ்ரான் (மஸ்ஊதி)
பிரச்சாரகர்,
SLTJ-KATTANKUDY BRANCH
ஓகஸ்ட் 29, 2010
No comments:
Post a Comment