பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணியும் சின்ன புத்திக்காரரின் சின்னத்தனமும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும். இதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டால் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 2007 மார்ச் 7 ஆம் தேதி பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணி நடத்த உள்ளது.
பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்து த.மு.மு.க.வால் காப்பாற்றப்பட்ட சின்னத் திரைக்காரர் த.மு.மு.க.வை ஒழித்து விடுவேன் என சவால் விட்டார். அதற்காக முனைப்போடு செயல்பட்டு தோழ்வியும் அடைந்தார். அந்த சின்ன புத்திக்காரர் இப்பொழுது பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்த இருக்கும் பேரணியை தோழ்விறச் செய்வதில் முனைப்போடு உள்ளார். இதற்காக பேரணிக்கும் நமது வழி காட்டுதலை எதிர் நோக்கியுள்ள முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது தவ்ஹீது அமைப்பு இல்லை என்று ஒவ்வொரு மாநிலமாக செய்தி அனுப்பி வருகிறார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் பாபரி மஸ்ஜிதுக்காகவும் டிசம்பர் 6 இல் த.மு.மு.க. அறிவித்த முதல் போராட்டம் 1995 ஆம் ஆண்டில்தான். த.மு.மு.க. செயல்படத் துவங்கிய அந்தக் ஆண்டிலேயே த.மு.மு.க. அறிவித்த முதல் டிசம்பர் 6 போராட்டத்துக்கே எதிர்ப்பு வேலை செய்தார் ஒரு தலைவர். பத்திரிக்கையில் அறிக்கையும் விட்டார். அதிலும் தமது வழி காட்டுதலை எதிர்பார்த்துள்ள சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாசகம்தான் இடம் பெற்றிருந்தது.
அந்த தலைவராவது பத்திரிக்கையில் பகிரங்கமாக அறிக்கை விட்டார். சின்ன புத்தியுடைய சின்னத் திரைக்காரர் மாதிரி சின்னத்தனம் பண்ணவில்லை. திரைக்குப் பின்னால் சின்னத்தன வேலை செய்யவில்லை. அந்த வகையில் அந்தத் தலைவர் ஆண் மகன். சின்னத் திரை சின்ன புத்திக்காரர் கூறி வரும் அதே வாசகத்துடன் கூடிய 1995ஆம் ஆண்டு அறிக்கை வந்த பத்திரிக்கை இதோ.
1995 ஆம் ஆண்டில் த.மு.மு.க. அறிவித்த முதல் டிசம்பர் 6 போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட இந்தப் பத்திரிக்கைக்கு இன்று அட்ரஸே இல்லை. அது போல்தான் சின்னத் திரை சின்ன புத்திக்காரருக்கும் ஏற்படும்.
இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குடும்பம் இருந்தும் பிரம்மச்சாரியாக, கணவன் என்ற தான் இருந்தும் தன் மனைவி விதவையாக வாழ 8 ஆண்டுகளாக அநியாய சிறையில் வாடும் குணங்குடி ஹனீபா அவர்கள்தான் 1995 ஆம் ஆண்டில் த.மு.மு.க.வின் தலைவராக இருந்தார்கள்.
அவர் விரைவில் வெளி வர வேண்டும் என்பது ஒவ்வொரு த.மு.மு.க.வினரின் உணர்வாக உள்ளது. அவர்தான் பாபரி மஸ்ஜிதுக்காக பாராளுமன்றத்தில் தொழுகை போராட்டம் என அறிவித்தவர். எனவே 2007 மார்ச் 7 ஆம் தேதி பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்த உள்ள பேரணியில் அவர் கலந்து கொள்ளும் வண்ணம் விரைவில் விடுதலையாக துஆச் செய்வோம். சின்னத் திரை சின்ன புத்திக்காரரின் சதிகள் முறியடிக்கப்பட்டு த.மு.மு.க.வின் டெல்லிப் பேரணி வெற்றி பெறவும் துஆச் செய்வோம் வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment