ஆயுள் தண்டணை உறுதி ஆனதும் ஜிஹாது வேடமிட்டு ஹய்ய அலல் ஜிஹாது, மீண்டும் கர்பலா என முஸ்லிம் இளைஞர்கள் வழி கெடுக்கப்பட்ட வரலாற்றை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
இது கற்பனை அல்ல நாம் வெளியிட்ட டாடா சி.டி.யில் பி.ஜே. என்ற பைலுக்குள் ஜெயில் முஸ்லிம் என ஒரு பைல் இருக்கும். அதில் சி.டி.எம். பற்றிய விபரம் இருக்கும் 391 கைதிகள் பற்றிய பயோடேட்டா இருக்கும். அதன் கடைசியில் தடா புகாரி என ஒரு வேர்டு பைல் இருக்கும் அதில்தான் இந்த மேட்டர் இருக்கிறது.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
சமுதாயம் உங்களுக்கு உதவும். உங்களை கைவிடாது இன்ஷh அல்லாஹ் நீங்கள் எதிர் நோக்கும் உதவி கிடைக்கும்.
அன்புள்ள சகோதரர் முஹம்மது புகாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நலம், நலம் பல சூழ்க!
ஜிஹாது பற்றி ஆர்வத்தை ஊட்டவில்லை, ஆர்வக் கோளாறை ஊட்டிவிட்டார்கள்...
தேதி குறிப்பிடப்படாத உங்கள் கடிதம் கிடைத்தது. யார் மூலம் வந்தது எப்படி வந்தது தெரியவில்லை என் ரூமில் கிடந்தது கைர். ஆரம்ப காலத்தில் சமுதாய இளைஞர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் ஜிஹாது பற்றி ஆர்வத்தை ஊட்டவில்லை, ஆர்வக் கோளாறை ஊட்டிவிட்டார்கள்... என்று துவங்கி உங்கள் கஷ;டங்களை எழுதி உள்ளீர்கள்.
உங்கள் கடிதம் கண்ணீரால் நனைகிறது.
சிறையில் வயதான சிறைவாசிகள், ஆயுள் தண்டணை வழங்கப்பட்ட இளம் சிறார்கள வறுமையின் பிடியில் சிக்கி மூச்சு விட்டுக் கொண்டிருக்கம் குடும்பங்களின் நிலை, ஏக்கத்தினால் நிரந்தர நோயாளியாகி படுக்கையில் வீழ்ந்து விட்ட பெற்றோர்கள், தலாக் வரை வந்து விட்ட குடும்பப் பிரச்சனைகள், குடும்ப பாரத்தை சுமக்க கூலி வேலைக்குச் செல்லும் சிறுவர்கள், கல்யாண வயதை அடைந்தும் மணமாகாமல் காத்திருக்கும் கன்னிப் பெண்கள், ஊரை விட்டு வெளியேறி பிச்சை எடுத்த தாய் என்று தொடரும் உங்கள் கடிதம் கண்ணீரால் நனைகிறது. அதில் நான் 1995ல் சென்னை சிறை வந்து சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ளீர்கள். எனவே மனம் திறந்து எழுதுகிறேன்.
எதிர் பார்த்த ஆதரவு பெருகவில்லை.
குர்ஆன் ஹதீஸ்கள் மட்டுமே மார்க்கம் என்று பிரச்சாரம் செய்ததால் நஜாத்காரர்கள் என ஒதுக்கப்பட்டோம். வெறுத்து ஒதுக்கும் மக்களை குர்ஆன் ஹதீஸ் கொள்கையின் பக்கம் ஈர்க்க 1986ல் பித்ராக்களை சேகரித்து அரிசி வினியோகிப்பதை துவக்கினோம். ஏழைகளுக்கு உதவுதல், தண்ணீர் தட்டுப்பாடுகள் உள்ள இடத்தில் நிலத்தடி நீர் பைப்புகள் அமைத்துக் கொடுத்தல் போன்ற பொதுப் பணிகளைச் செய்தோம். எதிர் பார்த்த ஆதரவு பெருகவில்லை.
எதிர்ப்புகளைக் குறைத்தது.
அதே நேரம் ஜிந்தா, பாஷh, பாபா போன்றவர்களுக்கு கூட்டம் கூடியதைக் கண்டோம். எனவே நாட்டு நடப்புகளை பேசி அரசியல் பண்ணுவதன் மூலம் வெறுத்து ஒதுக்கும் மக்களை குர்ஆன் ஹதீஸ் கொள்கையின் பக்கம் விரைவாக ஈர்க்க முடியும் என்பதை உணர்ந்தோம். 1992 டிசம்பருக்குப் பிறகு அல் ஜன்னத்தில் நாட்டு நடப்புகளைப் பற்றி வந்த தலையங்கங்கள் ஆதரவாளர்களை பெருமளவில் பெருக்காவிட்டாலும் எதிர்ப்புகளைக் குறைத்தது.
எதிர் பாராத நல்ல விலை அவர்களுக்கு கிடைத்தது.
அதுதான் தடாக் கைதிகளுக்காக குரல் கொடுத்தல், வழக்குக்கு உதவுதல், சிறை சென்று பார்த்தல், தடா எதிர்ப்புப் பேரணி நடத்தல் என்பது வரை சென்றது. இந்த கால கட்டத்தைத்தான்; நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்கள் ஜிஹாது பற்றி மேலும் ஆர்வக்கோளாறுகளை சமுதாய இளைஞர்களுக்கு ஊட்டி வளர்த்தார்கள். அதன் மூலம் அவர்களும் பிரபலமாகி வளர்ந்தார்கள். அவர்கள் ஊட்டி வளர்த்துவிட்டவர்கள் மீது உள்ள நம்பிக்கையில், நாங்கள் விரலசைத்தால் கோவை சுடுகாடு ஆகிவிடும் என்று அரசுக்கு பகிரங்க சவாலும் விட்டார்கள். பிறகு தாங்கள் தப்பித்துக் கொள்ள இன்பாமர் வேலைக்கு சென்று விட்டார்கள். எதிர் பாராத நல்ல விலை அவர்களுக்கு கிடைத்தது. உடன் அதில் நிலைத்து விட்டார்கள். எவர்களை வைத்து வளர்ந்து பிரபலமானார்களோ அவர்களை வைத்து வாழ்கிறார்கள்.
தூண்டி விட்டவர்கள் ஏற்படுத்தி வரும் பீதியே
சிறைக்கு சென்று ஆறு ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் எந்த இஸ்லாமிய இயக்கங்களும் உதவி செய்யவில்லை என்று வருந்தி உள்ளீர்கள். மேலும் தூண்டி விட்டவர்கள், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாதவர்களாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். தூண்டி விட்டவர்களே சிந்தனையற்று இருக்கும்போது மற்ற இயக்கங்களை எப்படி குறை கூற முடியும். மற்ற இயக்கங்கள் உதவாமல் ஒதுங்க தூண்டி விட்டவர்கள் ஏற்படுத்தி வரும் பீதியே காரணம்.
அந்த சொகுசு வாழ்க்கையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சிந்தனை எப்படி வரும்?
1985ல் 86ல் என்று எப்போதோ பேசியதற்காக வை.கோ, பழ நெடுமாறன் போன்ற பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் எங்களை தூண்டி விட்டு வளர்த்தவர்கள் இவர்கள்தான் என்று தெளிவாக கூறிய பின்னரும் அவர்கள் விட்டு வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அந்த சொகுசு வாழ்க்கையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சிந்தனை எப்படி வரும்?
பண்டிதர்கள் பழகும் தமிழில் உள்ளது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சி.டி.எம். (உடைய தமிழ், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான) பிரசுரம் காணும் வாய்ப்புப் பெற்றோம். மக்களை எளிதில் கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் வெளியாகும் பிரசுரங்கள் கூட நன்கொடை என்று வந்ததும் அந்த ஈர்ப்பு வலு இழந்துவிடும். அவர்கள் பிரசுரம் எளிய தமிழில், எளிய நடையில், நடைமுறைத் தமிழில் இல்லை. பண்டிதர்கள் பழகும் தமிழில் உள்ளது.
பயந்து ஓடாதவர்களே இருக்க மாட்டார்கள்.
அவர்களின் அந்த பிரசுரங்களை ஏராளமாக காப்பி எடுத்து வினியோகித்து உள்ளனர். இருந்தாலும் எந்த பிரதி பலனும் ஏற்படவில்லை என்றும் அறிகிறோம். பொதுவாக வழக்கு நடத்த உதவி என்றாலே உதவ பயப்படுவார்கள். தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்குள்ளான வழக்கு என்றால் சொல்லத் தேவை இல்லை. குண்டு வெடிப்பு வழக்கு என்றால்? அதுவும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு என்றால் பயந்து ஓடாதவர்களே இருக்க மாட்டார்கள்.
வசூலித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அவர்களுக்கு உதவக் கூடாது, உதவினால் ஆபத்து என்று அவர்களை வைத்து வளர்ந்தவரே அவரது அமைப்பு மூலமும் அதன் கிளைகள் மூலம் பயமுறுத்துவதையும், அப்படி சிறைவாசிகளுக்கு உதவணும் என்ற எண்ணம் இருந்தால், நாங்கள் கூறும் சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று போட்டி டிரஸ்ட் நடத்தி நிதி திரட்டி வருவதையும், அறியாதவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களிடம் அளிக்கும் நிதி சிறைவாசிகள் எல்லோருக்கும் போய் சேர்வது போன்ற மாயை ஏற்படுத்தி வசூலித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இந்த நிலையில் விபரமுள்ள இரக்க குணம் உடையவர்கள் மனம் இரங்கி உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது பற்றி சிந்தித்தால், சிந்தித்ததே தப்பு என்ற முடிவுக்கு வரும் வகைவில் சிறைவாசிகள் செயல்கள் பற்றி பத்திரிக்கையில் செய்திகள் வருகின்றன. விரக்தியினாலோ, நமக்கு விடுதலை இல்லை என்ற முடிவினாலோ என்னவோ? கோர்ட்டிலும் அதன் வளாகத்திலும் கோஷம் போடுகிறார்கள். தேவையற்ற சவால் விடுகிறார்கள். மோடி வந்தபோது மிரட்டல் எச்சரிக்கை செய்தார்கள். இந்தக் குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றை தவிர்ப்பது சமுதாயத்திற்கும் சிறைவாசிகளுக்கும் செய்யும் நன்மையான செயலாகும். எளிதில் விடுதலை ஆகக் கூடியவர்களுக்கும் உள்ள தடைகள் நீங்கும் இன்ஷh அல்லாஹ்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பின் பணிகள் பற்றிய செய்தி மக்களை சென்றடைய உரிய மீடியா வசதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களை வைத்து வளர்ந்தவர்களுக்கு வாரப்பத்திரிக்கை, மாதமிருமுறை இதழ், டி.வி. ஆகிய மீடியாக்கள் இன்றிருக்கலாம். இவ்வளவு மீடியாக்கள் உருவாக மூலகாரணமானவர்கள் நீங்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.
இந்த நிலையில் விபரமுள்ள இரக்க குணம் உடையவர்கள் மனம் இரங்கி உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது பற்றி சிந்தித்தால், சிந்தித்ததே தப்பு என்ற முடிவுக்கு வரும் வகைவில் சிறைவாசிகள் செயல்கள் பற்றி பத்திரிக்கையில் செய்திகள் வருகின்றன. விரக்தியினாலோ, நமக்கு விடுதலை இல்லை என்ற முடிவினாலோ என்னவோ? கோர்ட்டிலும் அதன் வளாகத்திலும் கோஷம் போடுகிறார்கள். தேவையற்ற சவால் விடுகிறார்கள். மோடி வந்தபோது மிரட்டல் எச்சரிக்கை செய்தார்கள். இந்தக் குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றை தவிர்ப்பது சமுதாயத்திற்கும் சிறைவாசிகளுக்கும் செய்யும் நன்மையான செயலாகும். எளிதில் விடுதலை ஆகக் கூடியவர்களுக்கும் உள்ள தடைகள் நீங்கும் இன்ஷh அல்லாஹ்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பின் பணிகள் பற்றிய செய்தி மக்களை சென்றடைய உரிய மீடியா வசதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களை வைத்து வளர்ந்தவர்களுக்கு வாரப்பத்திரிக்கை, மாதமிருமுறை இதழ், டி.வி. ஆகிய மீடியாக்கள் இன்றிருக்கலாம். இவ்வளவு மீடியாக்கள் உருவாக மூலகாரணமானவர்கள் நீங்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.
அன்று பி.ஜே. அவர்கள் வேகமாக வளர மாஸ் மீடியாக்களாக இருந்தன.
18.1.96 அன்று கோவை பெண்களெல்லாம் கலந்து கொண்ட சென்னைப் பேரணியின் வீடியோ. அதற்குப் பிறகு கோவை பாஷh அவர்களின் துணைவியார்-மகள், தடாஅன்சாரியின் அண்ணன்-தங்கை, தடா யூசுபின் அண்ணன் போன்றவர்களிடம் எடுத்த சிறப்புப் பேட்டி, இவர்தான் தடாக் கைதிகள் வழக்கு நடத்துகிறார், குடும்பங்களுக்கு உதவுகிறார் என்று தடா குடும்பத்தவர் கூறும் விளம்பர வீடியோ, 7.3.96 கோவை பேரணி அதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண்கள் வேன் மேல் ஏறி பேசிய பேச்சுக்களின் வீடியோ. இவைதான் அன்று பி.ஜே. அவர்கள் வேகமாக வளர மாஸ் மீடியாக்களாக இருந்தன.
நீங்கள் எதிர் நோக்கும் ஆதரவும் கிடைக்கும்.
இன்று அநியாயமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக பாடுபடும் உங்கள் செயல்பாடுகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், நீங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வீடியோக்களை வெளியிடுங்கள். நிச்சயமாக உங்கள் செயல்பாடுகள் மக்களை சென்றடையும். நீங்கள் எதிர் நோக்கும் ஆதரவும் கிடைக்கும் இன்ஷh அல்லாஹ்.
அவர்கள் பின்னால் சமுதாயம் போகவேக் கூடாது
சமுதாயத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக பாடுபடும் அந்த சி.டி.எம். அமைப்பு இனிமேல் சமுதாயம் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி விடக்கூடாது என்பதற்காகவும் பாடுபடவேண்டும். சமுதாய விழிப்புணர்வு என்ற பெயரால் இன உணர்வைத் தூண்டிப் பிழைப்பு நடத்திடும் மைக் மாவீரர்களான பேச்சு வியாபாரிகளையும், எழுத்து வியாபாரிகளயும் நம்பக் கூடாது. அவர்கள் பின்னால் சமுதாயம் போகவேக் கூடாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்.
உண்மையான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமுதாய முன்னேற்றம், சமுதாய உணர்வு, சமுதாய ஒற்றுமை என்று இன வெறி ஊட்டிப் பேசுவார்கள். இப்படி இன வெறி ஊட்டி தூண்டிவிடும் அவர்கள் பிரச்சனை என வந்து விட்டால், தங்களைக் காத்துக் கொள்ள உங்கள் மீது மட்டும் பழிகளை சுமத்தி விடுவார்கள். உங்களை பலி இட்டு அவர்கள் தப்பித்து விடுவார்கள். அவர்களால் தூண்டப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும்தான் நடுத்தெருவுக்கு வந்து சீரழிய வேண்டும். இதுதான் கடந்த கால நிகழ்வுகள் என்ற அனுபவங்களைக் கூறி உண்மையான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழ், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான பிரசுரத்தின் 2 ஆம் பக்கம் குறிப்பிட்டுள்ள பாதிப்புகளை வீடியோவாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுங்கள்.
உங்கள் மீதுள்ள கடமையாகும்.
சமுதய இளைஞர்களெல்லாம் இந்த அளவுக்கு பாதிப்படைய காரணமாக இருந்து ஜிஹாது ஜிஹாது என தூண்டி விட்டவர்கள். இப்பொழுதும் சமுதயாத்திற்கு அங்கு பாதிப்பு இங்கு பாதிப்பு என பாதிப்புச் செய்திகளாக சேகரிக்கிறார்கள். அதை மிகைப்படுத்தி மக்களிடம் சேர்த்து இன உணர்வுகளை தூண்டி விட்டு வெறி ஊட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இப்பொழுது ஜிஹாது இல்லை செய்வதென்றால் எல்லோரும் சேர்ந்து செய்வோம், சொல்லி விட்டுச் செய்வோம், அவசரப்பட்டு தனித்து செய்து விடாதீர்கள் என்று பேசுகிறார்கள். இதன் மூலம் ஜிஹாது செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்து விட்ட மாதிரி மறைமுகமாக தூண்டி வருகிறார்கள். சட்டத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள இப்பொழுது ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மட்டும்தான் என்று சமாளித்தும் வருகிறார்கள். இப்படி தூண்டி விடுபவர்கள் பற்றி சமுதாயத்திடம் சரியாக அடையாளம் காட்ட வேண்டியது உங்கள் மீதுள்ள கடமையாகும்.
தூண்டி விடும் வேலையை அவர் செய்யவில்லை.
பழனிபாபா பேசினார் என்றால் காலமெல்லம் கோர்ட் - கேஸ் - ஜெயில் என்று அவர்தான் அழைந்தாரே தவிர சமுதாயம் அலையவில்லை. பழனிபாபா மீதுதான் 126 வழக்குகள் போடப்பட்டு இருந்தனவே தவிர சமுதாய மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கவில்லை. எதிரிகள் அச்சப்படும் வண்ணம் சமுதாயம் சகல வலிமையுடன் இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்திடும் வீர உரைகளாகத்தான் அவரது பேச்சுக்கள் இருந்தன. அவரது பேச்சு மேடையோடு சரி. யாராவது வந்தால் குடும்பத்தைப் போய் பார் என்று விரட்டி விடக் கூடியவராகவே இருந்துள்ளார். ரகசிமாக இளைஞர்களை அழைத்து தூண்டி விடும் வேலையை அவர் செய்யவில்லை.
மீண்டும் கர்பலா
பழனிபாபா பேச்சோடு சரி செயல்பாடு இல்லை என்று பாபாவை குறை கூறி பிரச்சாரம் செய்தவர்கள் உருவான பின்தான் சமுதாயத்தவர்கள் மீது வழக்குகள் வந்தன. சமுதாயத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஜெயில் கைதிகளாகவும் ஆனார்கள் என்பதையும் உணர்த்த வேண்டும். குடும்ப உறவினர்களை கொலை செய்து ஆயுள் தண்டணை உறுதி ஆனதும் ஜிஹாது வேடமிட்டு ஹய்ய அலல் ஜிஹாது, மீண்டும் கர்பலா என முஸ்லிம் இளைஞர்கள் வழி கெடுக்கப்பட்ட வரலாற்றை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
அவர்தான் அன்று இதை அறிமுகம் செய்தார்.
தன் நிழலைக் கண்டு பயப்படக் கூடியவர்களெல்லாம் இந்திய ராணும் என்ன செய்யும் இந்திய ராணும் நம் முன் நூலாம் பூச்சிகள் என்று இன்டோர் மீட்டிங்குகள் போட்டு வெறியூட்டிப் பேசி ஏமாற்றியதை, இப்பொழுது எதை முட்டாள்தனமான செயல் என்று விமர்சிக்கிறாரோ! அந்த முட்டாள்தனமான செயல்கள் யாவும் அவரது மூலையில் உருவானதுதான் என்பதையும் அந்த முட்டாள்தனமான செயலை அன்று மார்க்கம் என்று போதித்தவர் அவர்தான் என்பதையும் 'ரகசியப் பேச்சு, ரகசிய பயிற்சி, ஆட்களை தேர்வு செய்தல் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை' என்று இன்று பிரச்சாரம் செய்யும் அவர்தான் அன்று இதை அறிமுகம் செய்தார், செயல்படுத்தவும் செய்தார் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
உண்மையை போட்டு உடையுங்கள்.
வாலிப காலத்தை ஜெயிலில் கழித்து வாழ்க்கையையும் இழந்து பாதிப்புகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நீங்கள். வருங்கால இளைய சமுதாயம் இதுபோல் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வும் அவர்களது குடும்பமும் சீரழிந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் இருந்தால் உண்மையை போட்டு உடையுங்கள். நன்றி உள்ள சமுதாயம் உங்களுக்கு உதவும். உங்களை கைவிடாது இன்ஷh அல்லாஹ் நீங்கள் எதிர் நோக்கும் உதவி கிடைக்கும்.
மூலகாரணமானவர்கள் நீங்கள்தான்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சி.டி.எம். அமைப்பின் பணிகள் பற்றிய செய்தி மக்களை சென்றடைய உரிய மீடியா வசதி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களை வைத்து வளர்ந்தவருக்கு வாரப்பத்திரிக்கை, மாதமிருமுறை இதழ், டி.வி. ஆகிய மீடியாக்கள் இன்றிருக்கலாம். இவ்வளவு மீடியாக்கள் உருவாக மூலகாரணமானவர்கள் நீங்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.
அன்று அவர் வேகமாக வளர மாஸ் மீடியாக்களாக இருந்தன.
18.1.96 அன்று கோவை பெண்களெல்லாம் கலந்து கொண்ட சென்னைப் பேரணியின் வீடியோ. அதற்குப் பிறகு கோவை பாஷh அவர்களின் துணைவியார்-மகள், தடா அன்சாரியின் அண்ணன் - தங்கை, தடா யூசுபின் அண்ணன் போன்றவர்களிடம் எடுத்த சிறப்புப் பேட்டி, இவர்தான் தடாக் கைதிகள் வழக்கு நடத்துகிறார், குடும்பங்களுக்கு உதவுகிறார் என்று தடா குடும்பத்தவர் கூறும் விளம்பர வீடியோ, 7.3.96 கோவை பேரணி அதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட பெண்கள் வேன் மேல் ஏறி பேசிய பேச்சுக்களின் வீடியோ. இவைதான் அன்று அவர் வேகமாக வளர மாஸ் மீடியாக்களாக இருந்தன.
நிச்சயமாக உங்கள் செயல்பாடுகள் மக்களை சென்றடையும்.
இன்று அநியாயமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக பாடுபடும் சி.டி.எம்.ன்; செயல்பாடுகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், நீங்கள் நடத்திய நிகழ்ச்சியின் வீடியோக்களை வெளியிடுங்கள். தமிழ், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான பிரசுரத்தின் 2 ஆம் பக்கம் குறிப்பிட்டுள்ள பாதிப்புகளை வீடியோவாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுங்கள். நிச்சயமாக உங்கள் செயல்பாடுகள் மக்களை சென்றடையும். நீங்கள் எதிர் நோக்கும் ஆதரவும் கிடைக்கும் இன்ஷh அல்லாஹ்.
மேலும் சமுதாயத்திடம் திரும்பத் திரும்ப உதவி என்று போய் கேட்பதை தவிர்க்க வேண்டும். இந்த நோக்கத்தில் அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களில் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை என்ற திட்டம் வகுத்துள்ளோம். குறைந்த பட்சம் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலில் குணங்குடி ஹனீபா மகனாருக்கு விஸா ஏற்பாடு செய்து உள்ளோம். சி.டி.எம்.லிருந்து யாருடைய பாஸ்போர்ட் காப்பியாவது அனுப்பினால் விஸாவுக்கு முயற்சி செய்வோம். இன்ஷh அல்லாஹ்.
அன்புடன்
கா.அ. முஹம்மது பழ்லுல் இலாஹி
15-01-2004
மேலும் சமுதாயத்திடம் திரும்பத் திரும்ப உதவி என்று போய் கேட்பதை தவிர்க்க வேண்டும். இந்த நோக்கத்தில் அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களில் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை என்ற திட்டம் வகுத்துள்ளோம். குறைந்த பட்சம் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலில் குணங்குடி ஹனீபா மகனாருக்கு விஸா ஏற்பாடு செய்து உள்ளோம். சி.டி.எம்.லிருந்து யாருடைய பாஸ்போர்ட் காப்பியாவது அனுப்பினால் விஸாவுக்கு முயற்சி செய்வோம். இன்ஷh அல்லாஹ்.
அன்புடன்
கா.அ. முஹம்மது பழ்லுல் இலாஹி
15-01-2004
No comments:
Post a Comment