பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அண்ணல் நபி(ஸல்) அனுமதித்த வழியில் மேலப்பாளையம் த.மு.மு.க. நடத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.
காலம்:-
11-01-2006 புதன் கிழமை அஸருக்குப் பின்,
இடம்-
அல்லாமா இக்பால்(பசார்)திடல், மேலப்பாளையம்.
நிகழ்ச்சிகள்:-
மேலப்பாளையம் த.மு.மு.க.வின் சிலம்பாட்டம்.
மேலப்பாளையம் இக்பால் குழுவின் தஃப்ஸ்
..மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெருநாளின் போது அபிஸீனியர்கள் (இன்றைய சூடான் நாட்டவர்கள்) போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ ''நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?'' என கேட்டார்கள். நான் ஆம் என்றேன் அவர்கள் என்னை தமக்கு பின் புறமாக நிற்க வைத்தனர். பிறகு (அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே போ) என்று கூறினார்கள். அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
''இது நமது சமுதாயத்தின் பெருநாளாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்னை ஆயிஷh (ரலி) அவர்களருகே அன்சாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமியர் 'தஃப்' (கொட்டு) அடித்துக் கொண்டு, புஆஸ் எனும் பழமையான போர் பற்றி அன்ஸாரிகள் புனைந்தவற்றை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்னை ஆயிஷh (ரலி) அவர்களது தந்தையார் அபூபக்கர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷய்த்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் அதட்டினார்கள். இது ஒரு பெருநாளின் போது நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அபூ பக்கரே! அந்தச் சிறுமிகளை (பாடுவதற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது சமுதாயத்தின் பெருநாளாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சி சம்பந்தமான ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
இசைக் கருவியில்லாது பாடல்கள் பாடுவது, வீர விளையாட்டுக்கள் நடத்துவது.
அவ்ஸ், கஜ்ரஜ் என்ற கூட்டத்தினரிடையே அறியாமைக் காலத்தில் நடந்த போருக்குப் பெயர்தான் 'புஆஸ்' என்பதாகும். இந்தப் போருக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பெருமையோடு பாடத் தக்கதும் அல்ல. சாதாரண நாட்களில் தவிர்க்க வேண்டிய அறியாமைக் காலத்தின் இந்தப் பாடலை பெருநாள் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். நஸயீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் 'தஃப்' கொட்டு என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும் விளங்க முடிகிறது. இசைக் கருவியில்லாது பாடல்கள் பாடுவது, வீர விளையாட்டுக்கள் நடத்துவது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்படாததாகும். நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டதுமாகும்.
அண்ணல் நபி(ஸல்) அனுமதித்த வழியில்.
.
மார்க்கத்தில் தடுக்கப்படாததும், நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டதுமாகிய இது போன்ற பொழுது போக்கு அம்சங்களை செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதையும், ஈர்க்கப்படுவதையும் தவிர்க்கலாம். ஹராமான காரியங்களில் ஈடுபடுவதையும் ஈர்க்கப்படுவதையும் தடுக்கும் - தவிர்க்கும் நோக்குடன் அண்ணல் நபி(ஸல்) அனுமதித்த வழியில் நடைபெறும் மேற்கண்ட பெருநாள் கொண்டாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மார்க்கத்தில் தடுக்கப்படாததும், நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டதுமாகிய இது போன்ற பொழுது போக்கு அம்சங்களை செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதையும், ஈர்க்கப்படுவதையும் தவிர்க்கலாம். ஹராமான காரியங்களில் ஈடுபடுவதையும் ஈர்க்கப்படுவதையும் தடுக்கும் - தவிர்க்கும் நோக்குடன் அண்ணல் நபி(ஸல்) அனுமதித்த வழியில் நடைபெறும் மேற்கண்ட பெருநாள் கொண்டாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.மேலப்பாளையம்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
மேலே உள்ள பிரசுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளை சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஹராமான காரியங்களில் ஈடுபடுவதையும் ஈர்க்கப்படுவதையும் தடுக்கும் - தவிர்க்கும் நோக்குடன் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்த வழியில் பெருநாள் கொண்டாட்டங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளை ஏற்பாடு செய்துள்ளது. இது வரவேற்கத் தக்க நல்ல முன் மாதிரியாகும். இந்த நல்ல முன் மாதிரியை மற்ற ஊர்களிலும் செய்தால் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் மக்கள் ஈடுபடுவதையும், ஈர்க்கப்படுவதையும் நிச்சயமாக தவிர்க்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நல்ல பணியை செய்து முன் மாதிரியாக திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளையினரை வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்.
அன்புடன்:-கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி