Monday, April 19, 2004

மனைவி உயிரோடு எரித்துக் கொலை.

தன் கணவரிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. அல்குர்ஆன் 4:128


உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள் என்கிறது அல் குர்ஆன் 4:15ஆவது வசனம்.

விபச்சாரத்துக்கு இஸ்லாம் கூறும் தண்டணையை கடுமையானது என்று விமர்சிப்போர் மகனைக் கொல்லத் தூண்டிய விபச்சாரம் பற்றி சிந்திப்பார்களா?